UPDATED : பிப் 18, 2025 02:15 PM | ADDED : பிப் 18, 2025 02:12 PM
சென்னை: 'சென்னையில் வரும் பிப்., 23ம் தேதி வரை 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும், கோவையில் 35 டிகிரி வெப்பமும் பதிவாக வாய்ப்பு உள்ளது ' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் வரும் 23ம் தேதி வரை 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும், கோவையில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக வாய்ப்பு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vkmxtvko&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புதுச்சேரியில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பமும், மதுரையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பமும், தமிழக கடலோர பகுதிகளில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.