உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னும் ஒரு வாரத்திற்கு வெயில் வறுத்தெடுக்கும்

இன்னும் ஒரு வாரத்திற்கு வெயில் வறுத்தெடுக்கும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் வரை அடுத்த ஒரு வாரத்துக்கு மேல் தமிழகத்தில் வெயில் வாட்டி எடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நீலகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. ஆனால் சமவெளிப் பகுதிகளில் தொடர்ந்து வெப்பத் தாக்கம் அதிகமாக உள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்கள் புதுச்சேரியில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது செப்., 23 வரை நீடிக்கும்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இயல்பைவிட 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பால் வெப்பத் தாக்கம் கடுமையாக இருக்கும். வெளியில் செல்வோருக்கு உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.சென்னையில் பகல் நேரத்தில் 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது 39 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து தன்னார்வ வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது: கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வரவேண்டிய ஈரக்காற்றுதிசை மாறியதால், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழக்கத் துவங்கியுள்ளது.இதையடுத்து செப்., 22ல் வங்கக்கடலில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாகி அது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வின்போது மேற்கில் இருந்து தமிழகம் நோக்கி ஈரக்காற்று திரும்ப வாய்ப்புள்ளது. இதனால் செப்., 22க்குப் பின், வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ganapathi R
செப் 25, 2024 21:47

I.WANTHOUSE.ORLAND..IN..CHENNAI


Ganapathi R
செப் 25, 2024 21:41

வீடு மனை kidaikuma


Ganapathi R
செப் 25, 2024 21:40

Which place in Chennai??


Sankar K
செப் 20, 2024 20:29

நீங்கள் அறிவித்த வீடுகள் கோயம்புத்தூரில் கிடைக்குமா தயவு செய்து சொல்லுங்கள்


M.ILAYARAJA
செப் 20, 2024 07:37

மதுரையில் எங்கு உள்ளது


ديفيد رافائيل
செப் 18, 2024 09:35

சமீப காலமாக வெயில் மட்டும் அதிகமா இருக்கு.


Bye Pass
செப் 18, 2024 10:03

பாலைவன நாடு மாதிரி இருக்குமே ..


முக்கிய வீடியோ