உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தவறான பாதையில் த.வெ.க., செல்கிறது

 தவறான பாதையில் த.வெ.க., செல்கிறது

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அளித்த பேட்டி: சட்டசபையில் த.வெ.க., பலம் 107 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே. தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆதரவுடன், விஜய் ஆட்சி அமைத்துள்ளார். தேர்தலில், 66 சதவீதம் பேர், த.வெ.க.,வுக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். அ.தி.மு.க., கூட்டணிக்கு, 1.34 கோடி ஓட்டுகள் கிடைத்து உள்ளன. அ.தி.மு.க., வலிமையான இயக்கம். அ.தி.மு.க., மாவட்ட செயலர்களின் விருப்பப்படியே, வேட்பாளர்களை தேர்வு செய்தோம். தனிப்பட்ட முறையில் நான் தேர்வு செய்யவில்லை. ஐந்து சதவீத வேட்பாளர்கள் தான், மாவட்ட செயலர்களின் விருப்பத்திற்கு மாறாக தேர்வு செய்யப்பட்டனர். அமைச்சரவையில் இடம் பெறும்பதவி ஆசையில், த.வெ.க.,வுக்கு வேலுமணி, சி.வி.சண்முகம் போன்ற முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு அளித்துள்ளனர். அவர்களை கட்சி தொண்டர்களும், தமிழக மக்களும் மன்னிக்க மாட்டார்கள். கூட்டணி கட்சிகள் தவிர, வேறு எந்தக் கட்சியுடனும் அ.தி.மு.க., பேச்சு நடத்தவில்லை. ஆட்சி அமைப்பது தொடர்பாக, நுாற்றுக்கு நுாறு சதவீதம் தி.மு.க.,வுடன் பேச்சு நடத்தவில்லை. அ.தி.மு.க.,வின், 25 எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க.,வுக்கு ஆதரவளித்தாலும், கட்சியில் அனைத்து அதிகாரமும் பொதுச்செயலரான எனக்கு தான் உள்ளது. கொறடாவை நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலருக்கு தான் உண்டு. இதை, உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி உள்ளது. த.வெ.க.,வுக்கு ஆதரவளித்துள்ள கம்யூனிஸ்ட், வி.சி.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க., கூட்டணியில் தொடர்வதாக அறிவித்துள்ளன. இதனால் தான், அ.தி.மு.க.,வில் ஒரு பிரிவினரை, முதல்வர் விஜய் சந்தித்து ஆதரவை பெற்றுள்ளார். இதனால், சட்டசபை விதிகளையும், மரபுகளையும் மீறியுள்ளார். இப்படி தவறான பாதையில் செல்வது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anbarasan
மே 14, 2026 20:47

இதை யார் சொல்வது, எடப்பாடி, தேர்தல் முடிவுகள் தெரிந்து 4 நாட்களாக பின் வாசல் வழியாக ஆட்சிக்கு வர யார் முயற்சி செய்தது.


S.L.Narasimman
மே 14, 2026 11:49

பதவி சுகம் பண மணல் கொள்ளைக்கு ஆசைபட்டு கட்சியை தொலைக்க துணிந்த கூட்டமே இந்த சண்டாளர்கள். பிசெபியுடன் கூட்டு வேண்டும் என்று எடப்பாடியாரிடம் தொடர்ந்து அடம்பிடித்த இந்த கயவர்கள் இப்போ பதவி பவிசுக்காக பிசெபி கூட்டு வேண்டாம் என்கிறார்கள். இதை எல்லா அதிமுக தொண்டர்களும் புரிந்துள்ளார்கள்.


Appan
மே 14, 2026 11:30

ஒரு கட்சியை பார்த்து இப்படி சொல்ல இவருக்கு திறமை உள்ளதா ..?. இவர் செயல்கள் எல்லாம் பணத்திமிறால் வருகிறது. சசிகலா பணத்தை அமுக்கி ஆடதா ஆடதா ஆட்டம் ஆடுகிறார். பொருள்செலவம் அழியும் செல்வம். அதிமுகவை காலி செய்து தான் இவர் அடங்குவார். பாவம் எம்ஜியார். எம்ஜியார் தொண்டர்கள் எழிச்சி பெற்று இவரை கட்சியில் இருந்து துரத்தணும். அப்போ தான் அதிமுக இருக்கும்.


Sundaran
மே 14, 2026 07:27

தவறான பாதையில் சென்று தான் கட்சியை நாசம் செய்து விட்டீர் . உம்மை கட்சியில் இருந்து நீக்கி விட்டால் சரியாகி விடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை