வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கொத்தடிமை கட்சியில் இதெல்லாம் ஜகஜம்
சென்னை:கடந்த 10ம் தேதி, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,'' பா.ம.க., தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி, இனி நானே தலைவர்' என அறிவித்தார். அவரது திடீர் அதிரடியால், பா.ம.க.,வினர் அதிர்ச்சி அடைந்தனர். ராமதாசை சமாதானப்படுத்த குடும்பத்தினரும், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் முயற்சித்தனர். கடந்த 12ம் தேதி அறிக்கை வெளியிட்ட அன்புமணி, 'ராமதாஸின் லட்சியங்களை நிறைவேற்ற, பா.ம.க., தலைவராக தொடர்வேன்' என அறிவித்தார்.அன்புமணியின் ஆதரவாளரான, பா.ம.க., பொருளாளர் திலகபாமாவை, 'கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி' என, ராமதாஸ் ஆதரவாளரான பொதுச்செயலர் வடிவேல் ராவணன், நேற்று முன்தினம் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் பா.ம.க.,வில் ஏற்பட்ட சலசலப்பு சரியாகி விட்டது. வரும் மே மாதம் நடக்கவிருக்கும் வன்னியர் இளைஞர் பெரு விழாவில் ராமதாசும், அன்புமணியும் ஒரு சேர கலந்து கொள்ள உள்ளனர்' என, ஜி.கே.மணி கூறியிருக்கிறார். சட்டசபை வளாகத்தில், அவர் அளித்த பேட்டி:பா.ம.க., சார்பில் தொடர்து பல ஆண்டுகளாக, மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு மாநாட்டை நடத்தி வந்தோம். அதன் தொடர்ச்சியாக, மே 11ம் தேதி, சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடக்க உள்ளது.பா.ம.க.,வில், சிறு சலசலப்பு ஏற்பட்டது. இப்போது சரியாகி விட்டது. அதை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மாமல்லபுரம் மாநாட்டில், ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக கலந்து கொள்வர்.இவ்வாறு அவர் கூறினார்.
கொத்தடிமை கட்சியில் இதெல்லாம் ஜகஜம்