உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ்நாடு என்ற வார்த்தை அரசு பஸ்களில் நீக்கம்

தமிழ்நாடு என்ற வார்த்தை அரசு பஸ்களில் நீக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:அரசு போக்குவரத்து கழக பஸ்களின் முகப்பு பகுதிகளில் எழுதப்பட்டிருந்த, 'தமிழ்நாடு' என்ற வார்த்தை திடீரென நீக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மொத்தம் எட்டு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம் தவிர, மற்ற ஆறு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் பஸ்களின் முகப்பு பகுதிகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம்; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம்; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை என, எழுதப்பட்டு இருக்கும்.தற்போது, 'தமிழ்நாடு' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, அரசு போக்குவரத்து கழகம் என்று மட்டும் எழுதப்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தமிழ்நாடு என்ற வார்த்தையை நீக்கும் போது, அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயர் பெரிதாகவும், பயணியர் எளிதாக பார்க்கக் கூடியதாகவும் உள்ளது.'எனினும், அனைத்து பஸ்களிலும், அரசு போக்குவரத்து கழகம் என்பதில் மாற்றம் செய்யவில்லை. இந்த மாற்றத்தில், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை' என்றனர்.

அ.தி.மு.க.வின், அண்ணா தொழிற்சங்க செயலர் கமலக்கண்ணன் கூறியதாவது:

தமிழை வளர்ப்பதாக கூறும் தி.மு.க., அரசு, போக்குவரத்து கழக பஸ்களில், பல ஆண்டுகளாக இருந்து வரும், 'தமிழ்நாடு' என்ற வார்த்தையை நீக்குவது ஏன் என்று தெரியவில்லை. 'தமிழ்நாடு' அரசு போக்குவரத்து கழகம் என்பது தான், நம் மாநில அரசு பஸ்களுக்கான அடையாளம்.நம் மாநில அரசு பஸ்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது, அரசு பஸ் என்று மட்டும் எழுதி இருந்தால், எந்த மாநில பஸ் என்று தெரியாமல் பயணியர் குழப்பம் அடைவர்.எனவே, நம் மாநில அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, தனி அடையாளமாக இருக்கும், 'தமிழ்நாடு' என்ற வார்த்தையை, மீண்டும் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 76 )

Parthasarathy Badrinarayanan
ஜூன் 10, 2025 14:42

எவனுக்காவது விற்றிருப்பார்கள்


Gurumurthy Kalyanaraman
ஜூன் 10, 2025 12:15

சிவ சேனா, தான் ஆட்சியில் இருந்த மொத்த ஐந்து வருடமும் இந்த பெயர் மற்றும் வேலையைத்தான் செய்து கொண்டு இருந்தது. வேறு ஒன்றும் உருப்படையாக இல்லை. இந்தி கூட்டணியில் சேனாவை போலவே இடம் பெற்ற நாமும் இதையேதான் செய்து கொண்டு இருக்கிறோம்.


JANA VEL
ஜூன் 09, 2025 14:50

ஓய்வு செட்டிலேமென்ட், சம்பளம் போனஸ் தர வழியில்லை. எந்த ஊழியராவது பஸ்ஸை மறிச்சி பறிமுதல் செய்யலாம் என்றால் ... அப்போ நீ வேலை செய்தது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம். இந்த இந்த பஸ் வெறும் அரசு பஸ் . அது வேறு பெயர் இது வேற பெயர் என்று தப்பிச்சிக்கலாம் என்று எஹவது ஒரு மூளை கெட்ட அதிகாரி சொல்லியிருப்பான். ஆதி மாட்டு மந்திரி ஆர்டர் போட்டுஇருப்பான்


Venkatramanks Venkat
ஜூன் 09, 2025 06:13

Nandri.


GOkUL G (GOKUL)
ஜூன் 08, 2025 20:08

இதில் எந்தவித பயனும் இல்லை


Raji vel
ஜூன் 08, 2025 11:44

தமிழ்நாடு தமிழகம் alla


v j antony
ஜூன் 07, 2025 22:08

என்ன வேணும்னா பேரு வையுங்க ஆனா பஸ் ஓட்டை உடைசல் இல்லாம நல்லா ஓடுமா!!!???


saravanan.s
ஜூன் 07, 2025 13:31

வேற தொழிலே இல்லை


keezharangiyam 2372
ஜூன் 07, 2025 08:55

இந்த திராவிடர்களும் சரி அதிமுக அடிமைகளும் சரி இருவரும் தமிழ்நாடு என்ற பெயர் இருந்தால் என்ன இல்லாவிடில் என்ன இவர்களுக்கு தேவை தமிழ்நாடு மக்களின் வாக்கு மட்டுமே தயவுசெய்து மீண்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயரில் பேருந்துகள் இயக்க வேண்டும் இந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பகுதி பேர் தமிழர்கள் இல்லை அவர்களுக்கு தமிழ் வந்தா என்ன வராவிட்டால் என்ன மான தமிழர்களுக்கு தான் ஆத்திரம் வரும் தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்று இதில் வேற திமுக ஆட்சியில் தான் தமிழுக்கு பாதுகாப்பு என்று ஏன்டா இப்படி பொய்யான அறிக்கைகள் விடுகின்றீரகள் இனிமேல் தமிழ் நாடு அரசு பேருந்துகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயர் இல்லை என்றால் அந்தந்த முனையத்தில் உள்ள மேலாளர்களை விரட்டி அடித்து நெருக்க வேண்டும் என்ன ஒரு கொடுமை தன் சொந்த மண்ணில் தமிழ் வேண்டும் என்று போராட்டம் நடத்தும் இனம் தமிழ் இனம் மட்டுமே இதுவே மானத்தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் இது போன்ற கொடுமை நடக்குமா இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்.


subramanian
ஜூன் 06, 2025 21:38

போராடி பெற்ற நம் மாநிலத்தின் பெயரே இப்போது அரசுக்கு சுமையாகி விட்டதா? மக்கள் கருத்து என்ன என்று அவசியம் கேட்கவேண்டும்


முக்கிய வீடியோ