உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர்பிடிப்பு பகுதியான கர்நாடகாவில் கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b9iu9ynt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது அணையில் இருந்து பிரதான ஷட்டர் வழியாக 2,243 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் தரைப் பாலத்தை மூழ்கி தண்ணீர் செல்கிறது. இதனால் கே.ஆர்.பி., அணைக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Tiruchanur
மே 20, 2025 09:43

கர்நாடக வில மழை வந்தா தான் தமிழ்நாட்டுக்கு தண்ணி வரும். அவ்வளவு பாவப்பட்ட பூமி இது


அப்பாவி
மே 20, 2025 08:29

ஆமாம். ஆத்தில் இருந்த மண்ணையெல்லாம் சுரண்டி எடுத்து வித்து வூடு கட்டிட்டோம். தண்ணீர் வந்தால் பூமியால் உறிஞ்சப் படாமல் நேரா கிராமங்களில் பாய்ந்தோடும். இதுதான் மணல் கொள்ளை மாஃபியாக்கள் ஆட்சி லட்சணம். மக்கள் எங்காவது ஓடிப் போயிடவும்.


சமீபத்திய செய்தி