உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இருப்பதோ 2; தேவையோ 4 ரயில் பாதைகள் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் எப்போது?

இருப்பதோ 2; தேவையோ 4 ரயில் பாதைகள் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் எப்போது?

தென் மாவட்டங்களுக்கு தேவை நான்கு ரயில் பாதைகள்; இருப்பதோ இரண்டு மட்டுமே. இதனால், கூடுதல் ரயில் சேவையை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தின் கனவு திட்டமான, சென்னை எழும்பூர் -- கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம், 1998ல் துவங்கி, 2021ல் மதுரை வரை முடிக்கப்பட்டு, ரயில் சேவையும் துவக்கப்பட்டது.

தாமதம்

பின், மதுரை,- திருநெல்வேலி, நாகர்கோவில், -கன்னியாகுமரி இடையே, மின்மயமாக்கலுடன் இரட்டை பாதை அமைக்கும் பணியை, 2022ல் முடிக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு, நிதி நெருக்கடி, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் என, பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.அதன்பின், பணிகள் துவங்கி முழு வீச்சில் நடந்ததால், கடந்த ஆண்டு அக்டோபரில் பாதை தயாரானது. இருப்பினும், இந்த இரட்டை வழித்தடத்தில், கடந்த மார்ச்சில் தான் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. ஆனாலும், தேவை அதிகம் உள்ள தென்மாவட்ட வழித்தடங்களில், கூடுதல் ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் இன்னும் துவங்காமல் உள்ளன.

திட்டமிட வேண்டும்

இதுகுறித்து, தெற்கு ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ஸ்ரீ ராம் கூறியதாவது:

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், துாத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு தற்போது இயக்கப்படும் விரைவு ரயில்கள் போதுமானதாக இல்லை. சென்னை - கன்னியாகுமரி இடையே பல ஆண்டுகளாக நடந்து வந்த இரட்டை பாதை பணிகள் முடிந்து, தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதில், கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். மேலும், பயணியர் தேவை கருதி, தென்மாவட்டங்களை இணைக்க, கூடுதல் ரயில் பாதைக்கும் திட்டமிட வேண்டும். இப்போது திட்டமிட்டால் தான், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பணிகளை முடிக்க முடியும்.திருவனந்தபுரம், கன்னியாகுமரியில் இருந்து, கடலோரமாக சென்னையை இணைக்கும் புதிய ரயில் பாதைக்கு, 'சர்வே' முடித்து, பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இந்த ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த, தமிழக எம்.பி.,க்கள் அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 'வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்'ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தென் மாவட்டங்களுக்கு இரண்டு ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. தற்போதுள்ள தேவையை கணக்கிடும் போது, குறைந்தபட்சமாக நான்கு பாதைகள் தேவை. ஆனால், கூடுதல் பாதைகள் என்பதே மிகவும் சவாலாக இருக்கிறது.தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் ஆண்டுதோறும், 10 சதவீதம் வரை பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, கூடுதல் ரயில்கள் இயக்க, கூடுதல் பாதைகள் அவசியம் என, ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

suren
செப் 20, 2025 15:43

1.சென்னையுடன் திரும்பும் சுமார் 40 அணைத்து ரயில்களையம் தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகம் விரும்பும் காத்திருப்புள்ள ஊர்களுக்கு கன்னியாகுமாரி/திருச்செந்தூர்/தூத்துகுடி /செங்கோட்டை / போடி / பொள்ளாச்சி / கோவை / மேட்டுப்பாளையம் / நாகப்பட்டினம் /திருத்துறைப்பூண்டி ஆகிய ஊறுக்கு ஒன்றாய் நீடிக்கலாம். குறிப்பாக வாரம் முழுவதும் ஓடும் ரயில்களை நீடிக்கலாம் அல்லது ஏற்கனவேய ஓடும் ரயில்களை நேர ஒன்றுமயுள்ளவற்றை இணயத்து இயக்கலாமே. உதாரணம் கன்னியாகுமாரி சென்னை எக்ஸ்பிரஸ் +கோரமண்டல் ஏஸ்பிரெஸ் ஒரே எண் ரயில்களை மாற்றலாம். கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு வய்துகொண்டு நெய்யுக்கு அலையணுமா. இந்திய ரயில்வே இந்த ரூட் திட்டம்மிடுதலே தனியார் கன்சுலேட்டன்சி வசம் கொடுக்கவேண்டும். ரயிலைவயில் தூங்கிவழிகிற அதிகாரிகளை மாற்றவேண்டும். 2. ஷடோவ் எக்ஸ்பிரஸ் பத்துநிமிட இடையவெளியில் இரண்டு ரயில்கள் பாயிண்ட் டு பாயிண்ட் உதாரணம்: பாண்டியன் / சேரன் எக்ஸ்பிரஸ் தினம் வைல்டிங் லிஸ்ட் 100க்கு மேல். 3. அணைத்து முக்கிய வழித்தடம் எல்லாம் 24 பெட்டிகளாய் மாற்றலாம் . 4. Reservation பண்ணும்போது 3 ட்ரைன்களில் புக் பண்ணும் option கொடுக்கலாம். 5. பயணியர் ரயில்களை நீடித்து இயக்கலாம் உதாரணம் கோவை metupayalaym - pollachi & கோவை-திருப்பூர். 6.தட்கல் புக்கிங் நான்கு பிரிவுகளாய் பிரிக்கவேண்டும் ஒரு மதம் முன்பு / ஒரு வாரம் முன்பம்/ முன்று நாட்களுக்கு முன்பு /1நாளுக்கு முன்பு என பிரித்து வாய்ப்பளிக்கலாம் 7. அனய்த்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் கட்டாயம் unreserved பெட்டிகள் இந்நய்களாம். 8. பகல்நேர ரயில்களில் படுக்கையை வசதி பெட்டிகள் இன்னய்க்கவேண்டும் .


R K Raman
செப் 20, 2025 12:39

இங்கே பாருய்யா... விழுப்புரம் தஞ்சாவூர் இரட்டைப் பாதை அப்படியே கிடக்கிறது... அதுக்குள்ள அந்தப் பக்கம் 4 பாதையை கேக்குறாங்க...


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
செப் 20, 2025 11:05

இதுவரையில் இரட்டை ரயில் பாதை இருந்தால் ரயில்களை இயக்கி விடுவோம் என்றார்கள். இப்போது நான்கு வழிப்பாதையை காரணம் காட்டுகிறார்கள். இருக்கிற இருவழி பாதையில் முதலில் போதுமான ரயில்களை இயக்க சொன்னால் அதை செய்யாமல் அதை தள்ளி போடுவதற்கு அடுத்த காரணம். இதில் உண்மை நிலை என்னவென்றால் ரயில் பயணத்தை டிமாண்ட் லேயே வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் தட்கல், ப்ரீமியம் தட்கல், வந்தே பாரத் என்று கொள்ளையடிக்க முடியும். அப்புறம் அரசியல்வாதிகளின் பினாமிகளான ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கொடுக்கும் கட்டிங். இந்த இரண்டும்தான் முக்கிய காரணம். அதனால் நாம் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுத்த தத்திகள் வாயில் எதையோ வைத்துக்கொண்டு உள்ளனர். தென்னக ரயில்வே அதிகாரிகளும் கட்டிங் வாங்கிக்கொடு பேசாமல் இருக்கின்றனர். கேரளாக்காரனும் மற்ற மாநிலத்தவர்கள் தங்கள் மக்கள் சுகமாக குறைந்த பணத்தில் பயணம் ரயில்களை கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டுக்காரன் ஒவ்வொரு முறையும் வேதனையோடு பயணிக்கிறான்.


kannan
செப் 20, 2025 10:24

எத்தனை மக்கள் நலப்பணியினை பாஜக அரசு செய்துள்ளது. ஆனாலும், மக்கள் கழகங்கள் போடும் கையூட்டுக்கு தானே வாக்களிக்கின்றனர். ஆகையால் பாஜக அரசு தேச நலன் விரும்பும் மாநில மக்களுக்கு மட்டும் நல்லது செய்யட்டும்.


Muralidharan
செப் 20, 2025 10:20

They should try to use the Koilpatti to Mayiladuthurai route via Tiruvarur, Karaikudi to increase movement of special trains. This will reduce pressure on Vilupuram- Madurai section.


Shekar
செப் 20, 2025 09:58

மும்பையில் உள்ளூர் சேவை சேர்த்து தினமும் 2000 ரயில் சேவை இயக்கும் மேற்கு ரயில்வே, 2500 சேவை கொண்டுள்ள மத்திய ரயில்வேயும் 4 ட்ராக்கில் தான் இயங்குகிறது இப்போதுதான் 6 டிராக் வேலை ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் 200 டு 250 சேவைகள் கொண்ட தென் மாவட்டங்களுக்கு 4 டிராக் .....சான்ஸ் கம்மி. மதுரை டு சென்னை மணப்பாறை அருகே 12 Km தூரத்துக்கு நிலம் கிடைக்காமல் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது


suren
செப் 20, 2025 15:02

சரியான கருத்து அருமை நண்பரெ


Venugopal S
செப் 20, 2025 09:55

அதென்ன எல்லா ரயில்வே திட்டங்களுக்கும் தமிழக எம் பி க்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும், அப்போது தான் நிறைவேற்றப்படும் என்றால் என்ன கூந்தலுக்கு ரயில்வே அமைச்சகம், அமைச்சர்,இணை அமைச்சர், லட்சக்கணக்கில் அதிகாரிகள் ஊழியர்கள் இருக்கிறார்கள்? அவரவர் பொறுப்பை உணர்ந்து அவர்கள் வேலை செய்ய மாட்டார்களா?


Shekar
செப் 20, 2025 10:45

பிள்ளை அழுதால்தான் தாய் பால் கொடுப்பாள்


Indian
செப் 20, 2025 11:09

அலிபாபா 40 க்கு என்ன வேலை ?


Prasath
செப் 20, 2025 11:46

பகுத்தறிவு மலைக்க வைக்குது அறிவாலைய சுவத்துக்கு முட்டு கொடுப்பதோட கொத்தடிமை வேலையை நிறுத்திக்கோங்க


Venugopal S
செப் 20, 2025 20:37

பிள்ளை அழாவிட்டால் அதை பட்டினி போட்டு தாய் கொன்று விடுவாள் என்றால் அவள் தாய் அல்ல,பேய்!


Seyed Omer
செப் 20, 2025 09:48

முன்னாள் ரயில்வே அமைச்சருமான லல்லுபிரசாத் அறிவித்த சென்னை டு கண்ணியாகுமரி இரட்டைவழிப்பாதை எப்போது செயல்பாட்டுக்கு வரும் மேலும் ஆன்மீக தலமான திருச்செந்தூருக்கு சென்னையி்ல் இருந்து ஒரே ஒரு ரயில் சேவை மட்டுமே உள்ளது எனவே மதுரை தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் வழியாக கண்ணியாகுமரிக்கு ரயி்ல் சேவை வழங்க வேண்டும் கிழக்கு கடற்கரைசாலை வழியாக மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் நாகூர் பட்டுகோட்டை அதிராம்பட்டினம் ராமநாதபுரம் கீழக்கரை ஏர்வாடி சாயல்குடி தூத்துக்குடி பழையகாயல் முக்காணி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருச்செந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு ரயில்சேவை விட வேண்டும்


veeramani
செப் 20, 2025 09:40

ஒரு விஞ்ஞானியின் கருத்து தென் மாவட்டங்கள் என பலர் நாகர்கோயில் கன்னியாகுமாரி நெல்லை மாட்டு குறிப்பிடுகிறார்கள். இந்த இடங்களுக்கு அதிக ரயில்கள் செல்கின்றன . நெல்லை, பார்லஸிட்டி குருவாயூர், அனாதபுரி, இன்டெர்சிட்டி, நாகர்கோயில் ஸ்பெசல் மேலும் காசி, ஹௌரா , நிசாமுதீன் ரயில்களும் உள்ளன. மேலும் இரண்டு வந்தேபாரத் ரயிலைக்குள் செல்கின்றன . செட்டிநாடு காரைக்குடி, புதுக்கோட்டை, மானாமதுரை பரமக்குடி ராம்நாத் ராமேஸ்வரம் ஊர்களுக்கு மூன்று தினசரி ஆயில்கள் மட்டும் உள்ளன. எனவே இந்துக்களின் புனித பூமி ராராமேஸ்வரம் தாம்பரம் வழியில் வ்ந்தேபாரத் ரயில் விடவேண்டும்.


R Hariharan
செப் 20, 2025 09:37

தென்காசி மாவட்டம் தென் மாவட்டங்களில் இல்லையா. விருதுநகர் செங்கோட்டை டபுள் லைன் ஆக்கினாள் ரயில்கள் நிறைய விடலாம். நாகர்கோவில்க்கு கன்னியாகுமரிக்கு தென்காசி அம்பை திருநெல்வழி வழியாக நிறைய ரயில் விடலாம். மேலும் திருநெல்வேலி தென்காசி விருதுநகர் வழியாக பெங்களூரு, பாண்டிச்சேரி, திருப்பதி காரைக்கால், மும்பை, கொல்கத்தா , நியூ டெல்லி, ஹைதெராபாத் போன்ற இடங்களுங்கு ரயில் சேவை வேண்டும். திருச்சி புதுக்கோட்டை, காரைக்குடி செங்கோட்டை இன்டெர் சிட்டி வேண்டும். செங்கோட்டை திருச்செந்தூர், ராமேஸ்வரம், கன்னியாகுமாரி பஸ்சேன்ஜ்ர் ரயில் சேவை தேவை. தென் மாவட்டங்கள் என்றல் தென்காசி அதில் ஆதங்கம். பல செய்திகளில் தென்காசி பற்றி எழுதவில்லை. எழுதவில்லை.


முக்கிய வீடியோ