உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் அதிகாரிகளே இல்லை: துரைமுருகன் கோபம்

சட்டசபையில் அதிகாரிகளே இல்லை: துரைமுருகன் கோபம்

சென்னை:'சட்டசபையை அதிகாரிகள் மதிக்க வேண்டும்' என, அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:அமைச்சர் துரைமுருகன்: சட்டசபை பெரியது. சர்வ அதிகாரம் மிக்கது. ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டுமானாலும், சட்டசபை அனுமதியை, அரசு பெற்றாக வேண்டும். சட்டசபையில் பேசும் உறுப்பினர்கள், பொறுப்பு வாய்ந்தவர்கள். தங்கள் கருத்தை, அவரவர் கட்சிக்கேற்ப பேசுவர். இவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கேட்டு செயல்படுத்த, சட்டசபையில் அவர்களுக்குரிய இடத்தில் அமர்ந்திருப்பர். ஆனால், இப்போது, எந்த அதிகாரியும் சட்டசபையில் இல்லை. ஏற்கனவே இப்படி நடந்தபோது, அமைச்சர் தியாகராஜன், அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். சட்டசபையை அதிகாரிகள் மதிக்க வேண்டும்.சபாநாயகர் அப்பாவு: எம்.எல்.ஏ.,க்கள் பேசுவதை கேட்க, அதிகாரிகள் சட்டசபைக்கு வர வேண்டும்.எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார்: சட்டசபை முன்னவர் அறிவுறுத்தி, 10 நிமிடங்கள் ஆகிறது. ஆனாலும் அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை.சபாநாயகர் அப்பாவு: துறை மானிய கோரிக்கையின்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வருவர். இப்போது சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் தெரிவிக்கும் கருத்துகளை குறிப்பெடுக்க, ஆட்கள் உள்ளனர். அமைச்சர் துரைமுருகன்: அரசு அதிகாரிகள், சட்டசபையை மதித்து, இங்கே வந்து அமர வேண்டும். எங்களை மதிக்க வேண்டும்.சபாநாயகர்: கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜன 10, 2025 09:30

ஆளும் அரசியல் வாதிகள் ஊழலில் திளைப்பதால் அதிகார வர்க்கத்தில் உள்ள குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இவைகள் அமைச்சர்களை அதிகாரிகள் மதிக்காததற்கு காரணங்களாகும்.


சமீபத்திய செய்தி