உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.பி., தொகுதிகள் குறையும்; மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் அழைப்பு

எம்.பி., தொகுதிகள் குறையும்; மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் அழைப்பு

சென்னை: 'மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை பிரித்தால், தமிழகத்தில் இருக்க கூடிய தொகுதிகளில் 8 தொகுதியை இழக்க கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இது பற்றி விவாதிக்க, மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (பிப்.25) நடைபெற்றது. கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: தமிழகம் மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஆகவே வரும் மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க 40 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

தொகுதி மறு சீரமைப்பு

கூட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்கப்படும். தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில், தென் இந்தியாவின் மேல் ஒரு கத்தி தொங்கி கொண்டு இருக்கிறது. எல்லாவற்றிலும் முன்னணியில் உள்ள தமிழகம் இப்போது கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் இப்போது 39 லோக்சபா தொகுதிகள் இருக்கிறது. இது 31 தொகுதியாக குறையும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. மத்திய அரசு 2026ம் ஆண்டு லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய போகிறது. மக்கள் தொகையை கணக்கீட்டு தான் நடைபெற உள்ளது.

8 தொகுதிகளுக்கு ஆபத்து

பெண்கள் கல்வி, குடும்ப கட்டுப்பாடு ஆகியவற்றை தமிழகம் சாதித்துள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தில் எம்.பி.,க்கள் எண்ணிக்கையை குறைப்பதா? மக்கள் தொகை குறைவாக இருக்கும் காரணத்தினால், லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

31 எம்.பி.,க்கள் தான் இருப்பார்கள்

தற்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில், லோக்சபா தொகுதிகளின் மறுசீரமைப்பை இரண்டு விதமான முறைகள் மூலம் மேற்கொள்ள கருதப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் முறையின் கீழ், ஏற்கெனவே உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையின்படி, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், தமிழகம் 8 லோக்சபா தொகுதிகளை இழக்க வேண்டியிருக்கும். இரண்டாவது முறையின்படி, மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை 848 ஆக உயர்த்தி, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், நமக்குக் கூடுதலாக கிடைக்க வேண்டிய 22 தொகுதிகளுக்குப் பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைத்து, 12 தொகுதிகளை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, எவ்வகையில் பார்த்தாலும், தமிழகத்திற்கு பேரிழப்பு ஏற்படும் வாய்ப்பே நம் முன்நிற்கிறது.

குரல் கொடுங்கள்

அதாவது தமிழகத்திற்கு 39 எம்.பி.,க்கள் இருக்க மாட்டார்கள். 31 எம்.பி.,க்கள் தான் இருப்பார்கள். நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில் பிரிந்தாலும் நமது பிரதிநிதித்துவம் குறையும். தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியலை கடந்து இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தில் நீட் தேர்வு, மும்மொழி கொள்கை உள்ளிட்டவற்றை குறித்து விவாதிக்கப்படும். அனைத்து கட்சி தலைவர்களும் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

முதல்வர் பதில்

இன்னுமொரு மொழிப்போருக்கு மத்திய அரசு வித்திடுகிறதா? என நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ' நிச்சயமாக வித்திடுகிறது; அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்' என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 93 )

veeramani
மார் 02, 2025 10:13

சிவகங்கை மாவட்ட மக்களின் குமுறல் .. எண்பதுகளில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, இலயான்ங்குடி, திருப்புத்தூர், காரைக்குடி என்ற ஐந்து தமிழக சட்டசபை தொகுதிகள் இருந்தன . எங்களது மாவட்டம் மிக மிக பின்தங்கிய மாவட்டம். தொழில்கள் இல்லை, விவசாய இல்லை. படித்த யிலானார்கள் வேலைக்காக வெளி மாவட்டங்கள், வெளிநாடுகள் சென்றுள்ளனர். எனவே மக்கள்தொகை காட்டி இலயான்ங்குடி சட்டசபை தொகுதியை பிடுங்கி விருதுநகரில் திருச்சுழி சட்டசபை தொகுதி புதிதாக ஏற்பாடுசெய்தனர். இதற்கு சமூகநீதி கிடைக்குமா ?????? தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிகள் குறைவதற்கு தமிழர் எவருக்கும் விருப்பமில்லை .


நிக்கோல்தாம்சன்
மார் 01, 2025 04:02

இப்போ போயிருக்காரு எந்த mp உருப்படியா வேலையை செய்யுறாங்களா ? திருச்சி சிவா , கனிமொழி , தயாநிதி விடுத்து யாரவது பேசியிருக்காங்களா ? ஒருத்தி என்னடான்னா எனக்கு விண்டோ சீட் கொடுக்கலை என்று வசை மாறி பொழியுரா , இன்னொருத்தன் அவன் தொகுதியில் வக்ப் போர்டு பழங்கால கோவிலின் இடத்தை ஆக்ரமிக்கும்போதும் சினிமா பாத்துக்கிட்டு திரியுறான் , அயலக அணி தலைவன் சூடோ கடத்தும் பொது அவனுக்கு ஆதரவா செயல்பட்டான் ஒரு MP , இப்படி முழுதும் கோணல் , இந்த லட்சணத்தில் அனைத்து கட்சி கூட்டம் என்று இங்கேயும் செலவு , தமிழக மக்களின் வரிப்பணம் அந்த குடும்பத்தின் ட்ரங்க்கு பெட்டியில்


Naga Subramanian
பிப் 27, 2025 06:12

எட்டு எம்பீ தொகுதி குறைந்தால், எட்டு பேருக்கான பார்லியில் போண்டா/ வடை செலவு மிச்சம். அதாவது மக்கள் வரி தேவையில்லாமல் செலவாகாது. மகிழ்ச்சி


kumarkv
பிப் 26, 2025 08:07

உள்ளே மூளையும் இல்லை


Minimole P C
பிப் 26, 2025 07:51

The child is not born, why even the pregnecy is not there. Why Stalin and co wants consfuse the people in naming the child. For reconstituting the constituencies, first Lok sabha has to pass an enactment. Again the same will be based on 2026 census. If census gets started during 2026, when it will be over, that we cannot say right now. Then only reconstitution comes. Why this false probaganda. It shows, that the DMK and its alliances got afraid of BJP and its politics.


தாமரை மலர்கிறது
பிப் 26, 2025 02:26

தொகுதி மறுசீரமைப்பு செய்யும்போது எம்பிக்கள் எண்ணிக்கை உயரும். தமிழகத்திற்கு கூடுதலாக பத்து தொகுதிகள் கிடைக்கும். ஸ்டாலின் தவறாக சொல்கிறார். மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எண்ணூற்றிஐம்பத்தை தொடும். வடஇந்திய மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடங்களை அதிகரிக்க வேண்டும். அது தான் சமூக நீதி.


ஜான் குணசேகரன்
பிப் 25, 2025 22:24

எம்.பி எண்ணிக்கை குறைந்தால் கலக்க்ஷன் குறையும். வருத்தத்துக்குரிய செய்தி.


Saai Sundharamurthy AVK
பிப் 25, 2025 22:14

திமுகவுக்கு 8 எம்.பிக்கள் காணாமல் போவார்கள் என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மற்ற கட்சிகளுக்கும் அதே விதி தான் என்பதை ஸ்டாலின் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார். சுயநலமாக சிந்திக்கிறார். சரி ! இப்போது 40 திமுக எம்பிக்களால் என்ன சாதிக்க முடிந்தது ???? அவர்களில் 8 பேர் குறைந்தால் தான் என்னவாம் ????


RAAJ68
பிப் 25, 2025 22:06

எங்கும் பொய் எதிலும் பொய் இதுதான் திராவிட மாடல். மாணவர்களின் கைகளில் கெட் அவுட் மோடி என்ற பதாகைகளை கொடுத்து ஹிந்தி ஒழிக ஹிந்தி திணிப்பு ஒழிக என்று கூப்பாடு போட வைக்கின்றனர். மோடியை ஒரு எதிரியாகவே பாதித்து மாணவர்களின் மனதில் விஷத்தை தூவுகின்றனர் ஹிந்தி திணிப்பு இல்லாத நிலையில் வேண்டும் என்றே ஹிந்தி திணிப்பு ஒழிக என்று கோஷம் போட வைக்கின்றனர் மாணவர்களை. ஒன்றும் அறியாத அப்பாவி மாணவர்கள் மோடியை நம் நாட்டை எதிரி போன்று கூவ வைக்கின்றனர். இதற்கெல்லாம் இவர்கள் சரியான விலை கொடுத்து ஆக வேண்டும்.


Venkatesan Srinivasan
பிப் 26, 2025 01:38

இந்தி நம் பாரத - இந்திய நாட்டில் பெருவாரியான மக்களால் தாய் மொழியாக, அலுவல் மொழியாக மற்றும் பேச்சு வழக்கு மொழியாக உள்ளது. அத்தகைய மொழியை இகழ்ந்து "ஒழிக" என் யார் கூறினாலும் அது அந்த மொழியை பயன்படுத்தி வரும் மக்களை இகழ்ந்து பேசுவதற்கு சமம். இதுவும் ஒரு வெறுப்பு பேச்சு. அதன் மேல் சரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது பாரத - இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு எதிரான அறைகூவல்.


theruvasagan
பிப் 25, 2025 22:04

தமிழகத்தையே தெற்கு வடக்கு என்று பிரி்க்கணும். அப்பதான் தென்பகுதி முன்னேறும்