உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை; கணித்து சொன்னார் திருமா!

கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை; கணித்து சொன்னார் திருமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: '2026ம் ஆண்டு வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.புதுக்கோட்டையில் நிருபர்கள் சந்திப்பில், திருமாவளவன் கூறியதாவது: விடுதலை சிறுத்தை கட்சியினர் உட்கட்சி விவரங்களை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டாம். இதனால் கட்சி வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று தி.மு.க. அல்லது அ.தி.மு.க. சொல்கிறது என்றால், அது நடைமுறைக்கு சாத்தியமானது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் தங்கள் விருப்பத்தை சொல்வது தற்போதைய சூழலில் சாத்தியமானதா? என்ற கேள்வி எழுகிறது.

கூட்டணி ஆட்சி

எங்கள் கட்சி தி.மு.க.,கூட்டணியில் இருந்து வெளியேறாது. ஆனால் வெளியேறுவது போன்ற தோற்றத்தை சிலர் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். 2026ம் ஆண்டு வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை. அ.தி.மு.க. கூட்டணி அழைப்பதாக அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. கட்சியில் விவாதித்தார்களா? என்ற தகவல் இல்லை. யூகத்தின் அடிப்படையில் எதையும் சொல்ல முடியாது.

முக்கிய பங்கு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணி இணைந்து செயல்பட்டு வருகிறது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதிலும், இண்டியா கூட்டணியை உருவாக்கியதிலும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு பங்கு உண்டு. அந்த கூட்டணியை மாநில அளவிலும், தேசிய அளவிலும் பாதுகாப்பதும், வலுப்படுத்துவது விடுதலை சிறுத்தைகளின் நோக்கமும், கடமைகளுள் ஒன்று. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Alagu saravana Raj
நவ 19, 2024 11:01

அண்ணா சொன்ன கத்துக்கணும்


தாமரை மலர்கிறது
நவ 18, 2024 22:28

திருமா படுத்தே விட்டாராய்யா.


M Ramachandran
நவ 18, 2024 20:43

திரு மா அவர்களெ நீங்கள் பங்கு பங்கு என்று அடிக்கடி பேசும்போதே அதை அறிந்து ஸ்டாலின் புன்கைத்து கொண்டிருக்கிறார். பழம் என்றும் தன் கை வசம் என்று நம்பிக்கையை கிடைத்து விட்டது


M Ramachandran
நவ 18, 2024 20:32

சாஸ்டாங்கஹ நமஸ்காரம். காரணம் வெள்ளையப்பனால் அடிக்க பட்டு விட்டார. முசுதீப்பு அதற்க்கு தான் என்று முன்பேயே ஸ்டாலினுக்கு தெரியும். இனி கிளே குந்த சொன்னாலும் ஆட்சேபனையில்லை. வடிவேல் சினிமா காமடியை போல் எவ்வளுவும் தாங்குவேன் தான். இலங்கை சென்று விருந்துண்டு பரிசுபெற்று அணுகி ஊடகஙகளுக்கு முன் பல்லித்து நின்ற போதெ பௌசு தெரிஞ்சிடிச்சி இன்னும் இந்த ஆளை நம்பும் கூட்டம் இருக்கு.


Prabakaran J
நவ 18, 2024 17:25

Ithuku katchi office kopalapurathukku shift pannidalam eharku thaniya oru office, kodi, martin kosuvathi...


theruvasagan
நவ 18, 2024 16:15

மானஸ்தன். யோக்கியன். சுயமரியாதை சிங்கம். வீரன். பேச்சு மாறாதவன். இப்படி பல பட்டங்களுக்கு தகுதி உள்ள நபர் தமிழ்நாட்டில் ஒரே ஒருத்தர்தான் பேசுகிறார். நாமும் காதை பொத்திக்கொண்டு அவர் பேசுவதை கவனமாக கேட்கணும்..


Rajarajan
நவ 18, 2024 16:00

இப்படித்தான், நச்சு பாம்புகளுடன், கட்டுவீரியன்களுடனும், ஓட்டும் இல்லை, உறவும் இல்லைனு, தி.மு.க. பத்தி பேசினது எல்லாம் மறந்து போச்சா ?? பிறகு, அவங்க கிட்ட தானே சரணாகதி அடஞ்சீங்க .


Bala
நவ 18, 2024 15:59

அட வெக்கங்கெட்டவங்களா, இந்த ஒரு சீட்டுக்கும் ரெண்டு சீட்டுக்கும் எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா அலயறீங்க. .


Shunmugham Selavali
நவ 18, 2024 15:08

நான் முன்பே பதிவிட்டேன். நிச்சயம் மணநல ஆலோசனை மற்றும் சிகிச்சை இவருக்கு அவசியம் தேவை. யார் மாற்றி மாற்றி பிதற்றுவார் என்பது அனைவரும் அறிந்ததே. என்ன சொல்லி அனுப்பினார்களோ! அய்யோ பாவம். இவர் இந்த கட்சியை அழிந்துவிடுவார்.


duruvasar
நவ 18, 2024 14:55

.. சு பெண்ணே ...சு பெண்ணே ......... ...சு பெண்ணே ... ஒரு .. சு பையன் உன்மேலே ...சா சுத்துறான் என்ற சிம்பு பட பாட்டை முணுமுணுக்க தோன்றுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை