உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.சி.க., சுயமரியாதையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது: திருமாவளவன்

வி.சி.க., சுயமரியாதையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது: திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'எங்களுக்கு எந்த பேராசையும் இல்லை. நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.சென்னையில் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே எழுதிய புத்தகத்தை விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அம்பேத்கர் எவ்வளவோ எழுதி இருக்கிறார். பேசி இருக்கிறார். அம்பேத்கரை எவ்வாறு புரிந்து கொள்வது, அவர் கூறியதை எவ்வாறு பின்பற்றுவது என்று நான் பேசுவதால், என்னை அவருக்கு எதிரானவர் போல் சித்தரிக்கிறார்கள். இது குறித்து நான் கவலைப்பட போவதில்லை. அம்பேத்கரை பற்றி இன்று அதிகம் பேசுபவர்கள் வலதுசாரிகள். மக்கள் எதற்கு பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கிறார்கள். அம்பேத்கரை பிரதமர் மோடி கடவுள் என்கிறார். பிரதமர் மோடியை சொல்வதை கண்டு மக்கள் ஏமாந்து போகிறார்கள்.

கூட்டணி

விடுதலை சிறுத்தைகளின் பணி தமிழக எல்லையோடு முடிந்து விட கூடாது. தேர்தலை சந்தித்து ஆக வேண்டும். கூட்டணியில் தொடர வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். அதற்கான சண்டை தான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. அவர்கள் விரும்புவதை சொல்ல வேண்டும். அவர்கள் விரும்புவதை முடிவாக எடுக்க வேண்டும்' என்று எதிர்பார்க்கிறார்கள். 'ஏன் இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஏன் இன்னும் கருத்து சொல்ல வில்லை' என்று கேட்கிறார்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை எல்லாம் எதிர் வினை ஆக்குவதற்காகவா நாங்கள் இயக்கம் வைத்து இருக்கிறோம்? கூட்டணியில் இருப்பது, தேர்தல் என்பது, நமக்கு இரண்டாம் பட்சம் தான்.

பேராசை இல்லை

நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். தெளிவாக இருக்கிறோம். நாங்கள் பதற்ற பட வேண்டிய தேவையில்லை. எதை எந்த நேரத்தில் எப்படி அணுக வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். எங்களுக்கு எந்த பேராசையும் இல்லை. அங்கே போனால் அள்ளலாமா, இங்கே போனால் வாரலாமா, இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாமா ? இந்த வாய்ப்பை விட்டால் என்னவாகும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு தம்பி, 'நீங்கள் ராமதாஸை பாலோ செய்ய வேண்டும்' என்று சொல்கிறார். எவ்வளவு ஒரு சரியான ஆலோசனை கொடுக்கிறார் பாருங்கள்!

கருத்தியல்

நாங்கள் 100 விழுக்காடு அம்பேத்கரை பின்பற்றக் கூடியவர்கள். அவர் எங்களுக்கு கருத்தியல் அடையாளம். அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர வேண்டும் என்பது நமது நோக்கங்களில் ஒன்று. அந்த அதிகாரம் எதற்கு பயன்பட வேண்டும் என்பது முக்கியமானது. யாருக்கு பயன்பட வேண்டும் என்பது முக்கியமானது. இந்த அதிகாரத்தின் மூலம் எந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது முக்கியமானது. அந்த தெளிவு இல்லாமல் நாங்கள் இந்த அரசியல் களத்தில் இல்லை. விடுதலை சிறுத்தைக் கட்சி அந்த தெளிவோடு தான் இன்னைக்கு எல்லாவற்றையும் அணுகுகிறது என்பதை பதிவு செய்கிற நிலையில் இருக்கிறோம்.

நம்பிக்கை

தடுமாறுகிறார் திருமா என்கிறார்கள். இதை நீங்கள் ஏதோ நடக்கிறது என்று குழம்பி விடக்கூடாது என்பதற்காக சொல்கிறேன். தடுமாறுகிறார் என்று சொல்கிறவர்களுக்காக நான் பதில் சொல்லவில்லை. உங்களுக்கு எந்த தடுமாற்றமும் ஏற்படக்கூடாது என்பதற்காக சொல்கிறேன். அந்த நம்பிக்கையை நீங்கள் எப்போதும் இருக்க வேண்டும். நம்மை சமூகநீதியாக அவர்கள் குறைத்து மதிப்பிடலாம். நம்மை பொருளாதார ரீதியாக அவர்கள் குறைத்து மதிப்பிடலாம். இன்னும் சொல்லப்போனால், நம்மை அரசியல் ரீதியாகவும் அவர்கள் குறைத்து மதிப்பிடலாம்.

சுயமரியாதை

ஆனால் நமது சுயமரியாதையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. நமது தன்மானத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. நமது கருத்தியல் நிலைப்பாட்டில் உள்ள உறுதிப்பாட்டை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதை மதிப்பீடு செய்யும் அளவிற்கு தகுதி பெற்றவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லை. நாங்கள் எவ்வாறு கருத்தியல் களத்தில் தெளிவோடு இருக்கிறோம், துணிவோடு இருக்கிறோம். உறுதியோடு இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்தும் தேவையில்லை. அம்பேத்கர் எதிர்பார்த்த தாக்கத்தை நாம் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

Venkateswaran Rajaram
டிச 12, 2024 09:35

இருந்தால் தானே மதிப்பீடு செய்ய முடியும்


VENKATASUBRAMANIAN
டிச 10, 2024 08:27

அதைப்பற்றி பேச அருகதை இல்லை உங்களுக்கு. உங்கள் நாடகம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது. இனிமேல் ஏமாற்ற முடியாது


Bhaskaran
டிச 09, 2024 09:51

அந்த வார்த்தைக்கும் உங்களுக்கும் துளிகூட சம்பந்தமில்லாத கொத்தடிமைகளாச்சே நீங்கள்


அப்பாவி
டிச 08, 2024 10:46

இப்பல்லாம் விமான நிலயத்தில் பேட்டி குடுக்க்ய்றாரு. மவுசு கொஞ்சம் அதிகமானாப்புல இருக்கு.


பேசும் தமிழன்
டிச 08, 2024 10:32

எங்களுடைய சுயமரியாதையை.... யாரும் குறைத்து மதிப்பிட கூடாது.... பிளாஸ்டிக் சேர் கொடுத்தாலும்... அம்பேத்கரின் பெயரை சொல்லி எங்களது பிழைப்பு நடந்தாலும்.. அவரின் விழாவுக்கு போக கூடாது என்று கூறினாலும்.. கொடுப்பதை வாங்கி கொண்டு.. அடிமையாக இருப்போம்.... இப்படிக்கு ...


Rajasekar Jayaraman
டிச 08, 2024 08:58

போ பிளாஸ்டிக் சேர்.


அப்பாவி
டிச 08, 2024 08:20

விசய் இவரைப் பத்தி பேச ஆரம்பிச்சதும் இப்போ கொஞ்சம் மதிப்பு ஒசந்திருக்கோ?


panneer selvam
டிச 08, 2024 01:24

Thiruma ji , you claim you follow the footsteps of Ambedkar in all respects . Ambedkar specifically mentioned Hindi should be the national language, India is a union not a federation of states , a firm believer of religion of course Buddhism at later stage and SC/ST reservation is only temporary . Do you agree ?


ஸ்ரீ
டிச 07, 2024 23:39

இவர்களின் சுயமரியாதை PLASTIC CHAIR ல் இருக்கும் போல


sundaran manogaran
டிச 07, 2024 23:20

சுயமரியாதை ,சமூகநீதி போன்ற சொற்கள் தமிழர்களுக்கு பிடிக்காதவை ... என்று தெரிந்தே திரும்ப திரும்ப பேசி வெறுப்பேத்துகிறார்களே.... அய்யோ!!!தாங்கலே சாமீ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை