உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடர்ந்து 2 முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி

தொடர்ந்து 2 முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: தொடர்ந்து 2 முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.திருநெல்வேலியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: முருக பக்தர் மாநாட்டை அரசியல் ஆக்கவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு பக்தர் மாநாடுதான். நாங்கள் யாரையும் தவறான இடத்திற்குக் கொண்டு செல்லவோ, குறை சொல்லவோ இல்லை. பிற மதங்களையோ, யாரையும் புண்படுத்திப் பேசவில்லை. இந்த மாநாட்டில் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கவும் இல்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1xph821d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஹிந்து முன்னணி நடத்திய மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டோம். இதைத் தேர்தல் பயன்பாட்டிற்காகவோ, மக்களைக் குழப்புவதற்காகவோ, ஓட்டு வங்கியாக மாற்றவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. 1989ல் எம்.ஜி.ஆருடைய மறைவுக்குப் பின்னால் ஒரு இரண்டு வருஷம் தி.மு.க., ஆட்சியில் இருந்தார்கள். 1991ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார்கள். அப்புறம் 1996ல் தி.மு.க.,வினர் ஆட்சிக்கு வந்தார்கள். தொடர்ந்து அவங்க ஆட்சியில் இல்லை. எங்களுடைய கூட்டணி முறையாக அமைந்திருந்தால் இன்று அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். தொடர்ந்து 2 முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை. வரலாறு மாறப்போவதில்லை. அதனால் அவர்கள் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.தமிழகத்தில் கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து அமித்ஷாவும், இ.பி.எஸ்.,யும் பேசி முடிவெடுப்பார்கள். திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை ஓட்டு வங்கியாக பயன்படுத்த தி.மு.க., முயற்சி செய்கிறது. தமிழகத்தில் அவர்களுக்கு (தி.மு.க.,) தேர்தல் பயம், தோல்வி பயம் வந்துவிட்டது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Mariadoss E
ஜூன் 28, 2025 17:18

தமிழ்நாட்டில் பிஜேபி ஒரு முறை ஜெயித்து காட்டுங்கள் முதலில்.....


madhesh varan
ஜூன் 28, 2025 16:40

நாயனார்கு டெபாசிட் போவதை அண்ணாமலை பார்த்துக்கொள்வார், அண்ணாமலைக்கு டெபாசிட் போவதை அதிமுக காணுங்க பத்துக்குவாங்க, மொத்தத்தில் திமுக வெற்றிபெற அமித்ஸா பத்துக்குவாரு,


Varuvel Devadas
ஜூன் 28, 2025 11:40

In todays context, it seems that the DMK-led alliance will form a DMK II government, as opposition parties have not come together to unite, and a heavy fight is ongoing among them.


madhesh varan
ஜூன் 28, 2025 10:34

1967,1971 ஞாபகம் இல்லயா நாயனாருக்கு ?


Vijay D Ratnam
ஜூன் 27, 2025 23:38

இந்தா இப்போ ரெண்டாவது முறை வெல்லப்போவதுல்ல. ஸ்பெக்ட்ரம் கனிமொழி அமித்ஷா கள்ளக்கூட்டணி வலுவாக இருக்குதுங்கோ. அதையும் தாண்டி பாஜக திமுக கள்ள உறவு அமோகமா இருக்குதுங்க. அதிமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த திமுகவின் ஸ்லீப்பர் செல் அண்ணாமலை இருக்குதுங்க. டெல்லி முதலமைச்சரா இருந்த அர்விந்த் கேஜ்ரிவாலையே தூக்கி திஹார்ல போட்டவிங்களால ஊழலின் உச்சம், ஃபாதர் ஆஃப் க்ரேப்க்ஷனின் மவன் ஸ்டாலினை தொட்டுக்கூட பார்க்க முடியல. தெலங்கானா முதல்வர் மவளை தூக்கி உள்ள வச்ச டெல்லிவாலாவால எங்க இளவரசர் உதயநிதி தொட முடியுமா. டவுசரை உருவிட்டு ஓடவிட்டுடுவாய்ங்கல்ல. இத்தனைக்கும் தமிழ்நாடு நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள்n முதலமைச்சர் மவனும் மறுமவனும் சேர்ந்து ஒரே வருடத்தில் முப்பதாயிரம் கோடி ரூவா அளவுக்கு கொள்ளையடிச்சி வச்சிருக்காய்ங்கன்னு சர்டிபிகேட்டே கொடுத்தாரு. திருடுறது தப்பு. திருடவிட்டு கமிஷன் வாங்குறது தப்பில்லையா அமித்துமாமா. ஜெகத்ரட்சகன்,, ஏ.வ.வேலு பொன்முடி, துரைமுருகன், நேரு, கும்பல்ட்ட ரெயிடு நடந்தாச்சே கைது நடந்ததா. ரெயிடுக்கு போன அதிகாரிகளையே அடிச்சி பத்திவிட்ட செந்தில்பாலாஜியே இப்போ வெளியில ஜம்முனு இருக்காரே.


ஆரூர் ரங்
ஜூன் 28, 2025 11:22

இதுக்கெல்லாம் காரணம் அநீதிதுறை என்பது புரியாதா? இப்போதுள்ள க்களின் நலனை விட?) எப்போதோ எழுதப்பட்ட சட்டங்கள்தான் முக்கியம் என்று நேற்று கூட பேசியிருக்காங்களே.


Narayanan Muthu
ஜூன் 27, 2025 20:00

நினைப்புதான் பொழப்ப கெடுக்கும். பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைகள் இருக்கும் வரை திமுக அணிதான் வெல்லும். அண்ணாதிமுக அனாதை ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டது.


rama adhavan
ஜூன் 27, 2025 19:42

1960க்கு அப்புறம் தமிழகத்தில் எம்ஜிஆர் 3 முறை தொடர்ந்தும், ஜெயலலிதா 2 முறை தொடர்ந்தும் ஆட்சிக்கு வந்துள்ளனர். இதில் எம்ஜிஆர் தான் கிங். தொடர்ந்து 1977 முதல் 1987 இல் தான் இறக்கும் வரை முதல்வராக இருந்து திமுகவை கதற விட்டார்.


Velayutham rajeswaran
ஜூன் 27, 2025 17:56

தி பாஜக திமுகவை மீண்டும் அரியணை ஏற தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது


M Ramachandran
ஜூன் 27, 2025 17:56

நீலி கண்ணீர் வடித்து பதவிக்கு வருகின்றனர். அதற்கு அப்புறம் பொது மக்களை மறந்து தங்கள் மக்களை மட்டும் நினைத்து மூட்டை மூட்டையாக கொள்ளை அடிக்கின்றனர். வெறுத்து மக்கள் அடுத்த தேர்தலில் அவர்களுக்கு கட்டம் கட்டி விடுகிறார்கள். மஞ்ச துண்டு மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று வாழ்த்துகிறார். மக்களுக்கு இந்த கும்பல் செய்யும் அடாவடியை பொறுக்க முடிய வில்லயே...


V RAMASWAMY
ஜூன் 27, 2025 17:43

அதனால் தான் கிடைத்த சான்சை விடுவதில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை