உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதற்கு இடமே கிடையாது: தம்பிதுரை

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதற்கு இடமே கிடையாது: தம்பிதுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''வரும் 2026ம் ஆண்டு இ.பி.எஸ்., தனியாக தான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி என்பதற்கு இடமே கிடையாது'' என அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ijim0o3t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பது தி.மு.க., கொள்கை. தற்போது அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., சரியான முடிவு எடுத்து இருக்கிறார். ஊழல் குறித்து அமித்ஷா சொல்லி இருக்கிறார். இது குறித்து ஏதும் வாய் திறக்காமல் தி.மு.க., இருக்கிறது. தமிழக முதல்வர் தைரியம் இருந்தால், ஊழல் குறித்து பேசிய அமித்ஷா மீது வழக்கு தொடர தயாரா? இப்பொழுது இ.பி.எஸ்., சரியான கூட்டணி அமைத்து இருக்கிறார். கூட்டணி என்பது உங்களுக்கு தெரியும். நாங்கள் கொள்கை கூட்டணியில் சிறப்பாக இருப்பவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை!

பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி குறித்து அறிவிக்கும் போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி இருப்பதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தம்பிதுரை அளித்த பதில்: ஒன்று சொல்கிறேன். கேளுங்கள். தமிழகத்தில் இதுவரை ஏதாவது கூட்டணி ஆட்சி அமைந்து இருக்கிறதா? தமிழகத்தில் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் கூட்டணி ஆட்சி அமைத்ததில்லை. வரும் 2026ம் ஆண்டு இ.பி.எஸ்., தனியாக தான் ஆட்சி அமைப்பார். கூட்டணி என்பதற்கு இடமே கிடையாது.தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி வந்தது கிடையாது. இனிமேல் வரப்போவதும் கிடையாது. கூட்டணி ஆட்சி என்பது தமிழகத்தில் திராவிட கட்சிகளில் இருந்தது கிடையாது. இருக்க போவதும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

sankaranarayanan
ஏப் 18, 2025 18:33

2026-தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 105 ஸீட்டுகளும் பாஜாவிற்கு 20-ஸீட்டுகளும் வந்தால் என்ன செய்வீர்கள் அதனால் வாயை மூடிக்கொண்டு எந்த வீம்பான பேச்சையும் பேசாமல் காரியத்தில் இறங்குங்கள்,மக்களை கவருங்கள். வாக்குகளை பெறுவதில் முன்னின்று கவனம் செலுத்துங்கள்.இந்த விளையாட்டுக்கள் எல்லாமே எதிர்க்கட்சிகளின் தூண்டுதல்கள்தான். அதற்கு இறையாகி விடாதீர்கள்.பிறகு வருந்துவீர்கள்...


S.V.Srinivasan
ஏப் 18, 2025 13:54

தம்பி என்ன நீயும் திராவிட மாடல் மாதிரி மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சின்னு கூவிக்கிட்டு திரியிற . முதல்ல உன் கூட்டணி ஆட்சியை பிடிக்குமான்னு பாரு. பி ஜே பி மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குதேன்னு நாங்க கவலை பட்டுட்டுஇருக்கோம். .


BALACHANDRAN
ஏப் 18, 2025 10:55

முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அதிமுக எங்க ஓட்டு வங்கி சரிந்துள்ளது திமுகவை எதிர்க்க அண்ணாமலை வேண்டும் ஆனால் ஆட்சியில் பங்கு இல்லை கூட்டணி உறுதி செய்வது இதுதான் தர்மமா


murugan
ஏப் 17, 2025 19:02

எடப்பாடியுடன் கூட்டணி அமைந்ததற்கு பிஜேபி வருந்தும். எள்ளளவும் நம்பத்தகாதவர். அப்படியே விட்டிருந்தா 2026 தேர்தலுக்கு பிறகு காணாமல் போயிருப்பார். கூட்டணி ஆட்சி இல்லை என்றால், கூட்டணி கிடையாது என்று பிஜேபி தெளிவு படுத்திவிட வேண்டும்.


தாமரை மலர்கிறது
ஏப் 17, 2025 19:00

கூட்டணி ஆட்சி பற்றி நண்டுசிண்டெல்லாம் பேசக்கூடாது. அமித் ஷா சொல்வார். எடப்பாடி கேட்டுக்குவார்.


Velan Iyengaar
ஏப் 17, 2025 19:20

இன்னுமா என்னை ரௌடி ன்னு நம்புறாங்க மொமெண்ட்


Bala
ஏப் 17, 2025 18:41

தம்பி துறை என்ன சொன்னாலும் தீய சக்தி திமுகவை வீழ்த்துவது என்ற ஒற்றைப்புள்ளியில்தான் பாஜக அதிமுக கூட்டணி அமைந்திருக்கிறது. 2026 தேர்தலில் திமுக மண்ணை கவ்வுவது உறுதி .


மூர்க்கன்
ஏப் 18, 2025 09:55

கனவு காண சுதந்திரம் உண்டு.


Venkateswaran Rajaram
ஏப் 17, 2025 18:23

மக்கள் ஓட்டு போடுவது என்பது கொள்ளை அடிக்க லைசென்ஸ் கொடுப்பது போல் ஆகிவிட்டது ..இவர்கள் யாரையும் சேர்க்காமல் தனியாக இவர்கள் மட்டும் கூட்டாக கொள்ளையடிப்பார்களாம் ..ஒரு பங்கை தோற்க்கப்போகும் திருட்டு திராவிடனுக்கும் கொடுத்து வாயை மூடிவிடுவார்கள்


ஆரூர் ரங்
ஏப் 17, 2025 17:11

ரொம்ப பேசினால் அதிமுக சட்டசபைத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் டெல்லியில் தயாரித்து வெளியிடப்படும் நிலை வரும்.


INDIAN Kumar
ஏப் 17, 2025 15:51

இரண்டு ஊழல் கலகங்களும் நிராகரிக்க பட வேண்டும் நாம் தமிழர் , த வே கட்சி இதில் யார் சிறந்தவர் என்று பார்த்து ஆதரிக்க வேண்டும்.


INDIAN Kumar
ஏப் 17, 2025 15:49

எடப்பாடி அவர்களை முதல்வர் ஆக்க ஏன் முயலவேண்டும். ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை