உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெறும் மாஸ் காட்டி பிரயோஜனம் இல்லை: விஜய் பற்றி நயினார் விமர்சனம்

வெறும் மாஸ் காட்டி பிரயோஜனம் இல்லை: விஜய் பற்றி நயினார் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலுார்: தவெக தலைவர் விஜய் வெறும் மாஸ் காட்டி பிரயோஜனம் இல்லை என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.ஈரோட்டில் இன்று தவெக தலைவர் விஜய் பேசுகையில்,மக்கள் எல்லாத்தையும் உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன். உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும் காசு தான் துணை; எனக்கு என் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் 'மாஸ்' (மக்கள்) தான் துணை. நமக்கு துணையாக இருக்கும் ஈரோடு மக்களுக்காக குரல் கொடுக்க வந்து இருக்கிறேன் என்று பேசியிருந்தார்.இதற்கு பதிலளித்து வேலுாரில் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:பொதுவெளியில் பேசும் போது அனைவரும் நாகரிகமாக பேச வேண்டும். தவெக தலைவர் விஜய் வெறும் மாஸ் காட்டி பிரயோஜனம் இல்லை.திமுகவினர் பாஜவின் 'B' டீம் என்று தவெக தலைவர் விஜயை கூறுகின்றனர் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு,ஒரு பொய்யை திரும்ப, திரும்ப சொல்லுவதால் அது அப்படியே நடந்துவிடும் கோயபல்ஸ் தத்துவத்தை பரப்புவதிலும் வதந்தியை பரப்புவதிலும் திமுகவினர் வல்லவர்கள். அவர்கள் அப்படித்தான் பரப்புவர்.செங்கோட்டையன் தவெகவில் சேருவதற்கு முன் அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்துவிட்டுதான் அங்கு போனார். அப்படி பார்த்தால் அவர்கள் திமுகவின் 'B' டீமா, இல்லை பாஜவின் 'B' டீமா என்று மக்கள் தான் முடிவு செய்வார்கள்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sivakumar
டிச 18, 2025 22:18

உங்களால கோவை மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் வாங்க முடியுமா ? தமிழ் வளர்ச்சி நிதியை அதிகரிக்க முடியுமா ? ஒரு பெரிய கூட்டம்போட்டு பிரதமரை முன்னிலை படுத்தியாவது இவைகளை தமிழகத்துக்கு செய்யுங்க


Anbuselvan
டிச 18, 2025 22:13

பிஜேபி இவரை குறைத்து எடை போட கூடாது. நாளைக்கு ராஜ்ய சபாவில் இவரது உதவி தேவை படலாம்.


Vasan
டிச 18, 2025 21:00

நைனார் விஜயை விமர்சித்து பேசுகிறார் என்றால், பாஜக தவேக உறவு தொடஙகாமலேயே முறிந்து விட்டதா? அப்படியென்றால், திமுகவிற்கு எதிரான ஓட்டு சிதறி விடுமா? திமுக மீண்டும் பதவிக்கு வந்து விடுமா? என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில், திமுக எம்முனை போட்டி அமைந்தாலும் அமோக வெற்றி பெறும், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். வாழ்க ஸ்டாலின், வளர்க தமிழ்நாடு.


பிரேம்ஜி
டிச 18, 2025 19:48

மாஸ் கூட காட்டத் தெரியாத பேசக்கூட தெரியாத தலைவர் இவர்!


பாலாஜி
டிச 18, 2025 19:33

மாஸ் சில நாட்கள் மட்டுமே புதிய வரவுகளுக்கு கிடைக்கும் என அனுபவத்தில் உணருவார் அரசியல் அனுபவம் எதுவும் இல்லாத தவெக கட்சி ஆரம்பித்துள்ள விஜய்.


Balasubramanian
டிச 18, 2025 19:19

அட, எதிர் கட்சி வாக்குகள் குறைத்தது என்று சந்தோஷ படுங்கள்! அண்ணாமலையாரை துணை சேர்த்து ஒரு 60 தொகுதிகள் ஒதுக்கீடு கேட்டு வாங்கி 58 இல் வெற்றி பெற்று காட்டுங்கள்!


Sun
டிச 18, 2025 18:28

ஆமா அ.தி.மு.க வை சேர்ந்த ஏகப்பட்ட பேர் விஜய் கட்சியில் சேர்வார்கள் என்றார் செங்கோட்டையன்? இப்ப கேட்காதீங்க அது ரகசியம்னாரு ! கடைசில விஜய் கட்சியை சேர்ந்த தாடி பாலாஜி வேறு கட்சிக்கு போனதுதான் மிச்சம். அந்த தங்கமலை ரகசியத்தை இப்பவாவது சொல்லுவாரா செங்ஸ்?


kumar
டிச 18, 2025 18:06

Mr. please stop. you are jumping from A to B to C party. Not at all working. honestly say from your heart. have you done anything to people or party. please do not comment do your duty. next time i will not comment for you becuause i am going to do my duty.


V Venkatachalam, Chennai-87
டிச 18, 2025 19:48

Fine Very fine. You go and do your duty. Do not come to this place to write your anti comments. First tell us what you have done for this country and then you can go to Nainar.


Skywalker
டிச 18, 2025 17:56

ATLEAST HE IS DOING SOMETHING! USELESS BJP! DO SOMETHING USEFUL! MAN I MISS ANNAMALAI, HE WAS NOT A USELESS NAIL LIKE THESE FOOLS, IF BJP LOSES THIS ELECTION THEY DESERVE IT, CORRUPT STUPID MINDLESS GANG


Selvakumar Krishna
டிச 18, 2025 17:51

ஆமாம் , வெட்டி உதார் காட்டக்கூடாது, இவனுங்கள போல வாக்கு திருட்டு செய்யணும்


முக்கிய வீடியோ