உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அணை திறந்து 20 நாளாகியும் கடைமடைக்கு தண்ணீர் இல்லை

அணை திறந்து 20 நாளாகியும் கடைமடைக்கு தண்ணீர் இல்லை

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:கால்வாய்களை துார்வாராமல், கடந்த ஜூன் 12ல் மேட்டூர் அணையிலிருந்து, முதல்வர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து விட்டார்.இதனால், தண்ணீர் திறக்கப்பட்டு 20 நாட்கள் கடந்தும், கடைமடை பகுதிகளுக்கு செல்லவில்லை; அங்கு, விவசாயிகள் நடவுப்பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடல் முகத்துவார சீரமைப்புக்காக ஆசிய வளர்ச்சி வங்கி, வழங்கும் நிதியை பெற, தி.மு.க., அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.மேட்டூர் அணை நிரம்பி, உபரி நீர் கடலில் கலக்கும் சூழ்நிலையில், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாதது ஏன்? உரிய முறையில் தண்ணீரை விவசாயிகளிடம் சேர்ப்பதில், தி.மு.க., அரசுக்கு என்ன சிக்கல்?இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sivaprakasam Chinnayan
ஜூலை 05, 2025 12:28

எப்படிப்பா கடமடைக்கு தண்ணீர் வரும் வாய்க்காலே இல்லை தூர்வாரவே இல்லை பல வருடங்கள் ஆகிவிட்டது இப்பொழுது இல்லாத வாய்க்காலில் தண்ணீர் எப்படி வரும்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 04, 2025 08:09

தமிழக அரசு விவசாயிகளுக்காக 20 நாட்கள் முப்பே அணையை திறந்துவிட்டது, ஆனால் கோடையில் தாக்கத்தால் துடித்து கொண்டிருந்த அணில்கள், காகங்கள், குருவிகள், மீன்கள் மற்றும் , சின்னங்சிறு உயிரினங்கள் ஆர்வத்துடன் திராவிட மாடல் நீரை திரும்ப திரும்ப பருகியதால் ஆறுகள் வறண்டு விட்டன.. அதனால் கடை மடைக்கு தண்ணீர் வரவில்லை ..பரம்பரை விவசாயியான EPS க்கு கூட இந்த விஞானபூர்வமான உண்மை புரியவில்லை ..


முக்கிய வீடியோ