உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷனில் போதிய அளவில் துவரம் பருப்பு இருப்பு: அமைச்சர்

ரேஷனில் போதிய அளவில் துவரம் பருப்பு இருப்பு: அமைச்சர்

சென்னை:'ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு போதிய அளவு அனுப்பப்பட்டு உள்ளது; தட்டுப்பாடு இல்லை' என, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தமிழக அரசு ரேஷன் கடைகளில், 2.25 கோடி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் தலா, ஒரு கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கும்; லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இம்மாதத்தில், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும், 2.03 கோடி கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை, 1.62 கோடி கிலோ வழங்கப்பட்டுள்ளது; 92 சதவீத பருப்பு கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும், தமிழகம் முழுதும் அனைத்து ரேஷன் கடைகளிலும், 68.44 லட்சம் கிலோ பருப்பு இருப்பு உள்ளது. நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில், 66.91 லட்சம் கிலோ துவரம் பருப்பு கையிருப்பு உள்ளது. சென்னை மண்டலத்தை பொறுத்தவரை, மொத்தம் உள்ள, 1,794 கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 20.55 லட்சம் கிலோ பருப்பில், 14.75 லட்சம் கிலோ வழங்கப்பட்டுள்ளது; 87 சதவீதம் கடைகளுக்கு பருப்பு அனுப்பப்பட்டு உள்ளது.திருவள்ளூரில், 96 சதவீதம், காஞ்சிபுரத்தில், 94 சதவீதம், செங்கல்பட்டில், 97 சதவீதம் கடைகளுக்கு துவரம் பருப்பு அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ