உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வி நிதி தருவதில் பாரபட்சம் கூடாது: மத்திய அரசுக்கு அ.தி.மு.க., அறிவுரை

கல்வி நிதி தருவதில் பாரபட்சம் கூடாது: மத்திய அரசுக்கு அ.தி.மு.க., அறிவுரை

சென்னை : மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தர முடியும் என, மத்திய அரசு வலியுறுத்துவது குறித்து, சட்டசபையில் நேற்று, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் பேசியதாவது:

தமிழ்மொழியை பாதுகாப்பதற்காக, மொழி கொள்கை குறித்து, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உளளது. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்த பழனிசாமி, இரு மொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறார். தமிழ் மொழிக்காக அ.தி.மு.க., ஆற்றியுள்ள தொண்டுகள் அளப்பறியது. தமிழ் மொழிக்காக ஒரு பல்கலையையே அ.தி.மு.க., அரசு உருவாக்கியது. மொழிக்கு ஆபத்து என்றால் பண்பாடு, நாகரிகம், கலாச்சாரத்திற்கும் சேர்த்துதான் ஆபத்து வரும். இதை நன்கு அறிந்தவர்கள் தமிழர்கள். தமிழர்கள், மற்ற மொழிக்கு நிச்சயமாக எதிரி இல்லை. எங்கள் மீது மற்ற மொழியை திணிக்கக் கூடாது என்று சொல்பவர்கள். உலகத்தில் தமிழர்கள் தகவல் தொழிற்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படுகின்றனர். தமிழர்கள் முத்திரை பதிக்காத துறைகளே இல்லை.இருமொழி கொள்கையில் உறுதியாக இருந்ததன் அடிப்படையில், இது சாத்தியமாகியுள்ளது. கல்விக்கு நிதி வழங்குவதில், மத்திய அரசு கொடுத்த வழிகாட்டுதல்களை, தமிழக அரசு ஏற்றுள்ளதா, ஏற்கவில்லையா? இதுகுறித்து லோக்சபாவில், மத்திய கல்வி துறை அமைச்சர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக, தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுகிறது. கல்விக்கு நிதி தருவதில் பாரபட்சம் காட்டக் கூடாது. கல்விக்கு தேவையான நிதியை, மாநில அரசு வலியுறுத்தி பெற வேண்டும். அதை மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு உதயகுமார் பேசினார்.மேலும், தி.மு.க., - எழிலன், காங்., - செல்வப்பெருந்தகை, பா.ம.க., - ஜி.கே.மணி, இந்திய கம்யூ., - ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூ., - நாகை மாலி, ம.தி.மு.க., - சின்னப்பா, ம.ம.க., - அப்துல்சமது, கொ.ம.தே.க., - ஈஸ்வரன், த.வா.க., - வேல்முருகன், வி.சி., - முகமது ஷா நவாஸ் ஆகியோரும் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

V Venkatachalam
மார் 26, 2025 15:18

உதயகுமார் அண்ணே மத்திய அரசு பாரபட்சம் காட்டக்கூடாதுன்னு சொல்றியளே..இது எவ்வளவு அபத்தம்? மத்திய அரசுகிட்ட பணம் வாங்க என்ன செய்யணுமோ அதை செஞ்சா பணம் வரபோவுது.. அதை விட்டு விட்டு வெட்டி கதை எதுக்குண்ணே..


ஆரூர் ரங்
மார் 26, 2025 11:59

ஏராளமான மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் ஃபெயில் ஆகிறார்கள்? டிகிரி படித்த முதல்வருக்கே ஆங்கிலம் பேச வரவில்லை. அதற்கு பதில் இரண்டாவது மொழியாக வேறொரு இந்திய மொழியை அறிமுகப்படுத்தினால் என்ன?? அது தெலுங்காக இருந்தால் அவருக்கே வசதியாக இருக்கும்?


Subramanian Marappan
மார் 26, 2025 08:56

தமிழ் படிக்கவே தடுமாறும் முதல்வர் துணை முதல்வர் எதிர்கட்சி தலைவர் இவர்கள் சொல்கிறார்கள் இருமொழிக் கொள்கையால் தமிழன் உயர்ந்தான் என்று. தமிழ்வழிக் கல்வி பயின்ற எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் தகவல் தொழில்நுட்ப துறையில் கோலோச்சுகின்றனர்? ஏதாவது தரவுகள் உங்களிடம் உள்ளதா? அவர்கள் ஆங்கில புலமை என்னவென்று தெரியுமா? 1980 களில் இருந்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தனியார் பள்ளிகளில் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களால் போதிக்கப்படுகிறது. அவர்கள் தமிழர்கள் இல்லையா? கிராமங்களில் கூட ஆங்கில வழி கல்வி கிடைக்கிறது தனியார் மூலமாக. அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆங்கில ஆசிரியர் ஆங்கில புலமையை யாரேனும் சோதித்தது உண்டா? ஆசிரியராக இருந்த தமிழ்நாட்டு பாடநூல் கழக தலைவர் எப் = எம் ஏ என்பதற்கு கூட விளக்கம் அளிக்க தெரியாதவர். இந்த மாதிரி அரசியல்வாதிகள் கல்வியறிவு பற்றி பேச என்ன தகுதி உள்ளது?


sankaranarayanan
மார் 26, 2025 08:18

மூன்றாவது மொழி ஹிந்தி என்று எங்குமே குறிப்பிடவில்லையே இதை இங்குள்ள அரசியல் கட்சிகள் முழுவதும் நன்றாக புரிந்துகொண்டபின் செயல்பட வேண்டும் இவர்கள் அந்நிய மொழியை கற்கும்போது மூன்றாவது மொழி எந்த இந்திய மொழியானாலும் பரவாயில்லை என்று மத்திய அரசு கூறும்போது இவர்களுக்கு ஏனெந்த பிடிவாதம்


Murugesan
மார் 26, 2025 07:58

திராவிட அயோக்கியனுங்க திருடுவதே இவனுங்க குலத்தொழில், தமிழகத்தை சீரழித்த சுயநல திருடனுங்க


ram
மார் 26, 2025 03:55

எந்த நிதியை நீங்க சரியா மக்களுக்காக மட்டும் கொண்டுபோய் சேர்த்திடுக்கிறீங்க.. உங்களோட கணக்குக்குத்தானே பெறும்பாலும் போய் சேருது..


Kasimani Baskaran
மார் 26, 2025 03:50

நிபுணர்களை வைத்து உருவாக்கப்பட்டதுதான் பிஎம்ஸ்ரீ - அதில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் ஒரு மூன்றாவது மொழி. இதில் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் நிதி கொடுக்கப்படும். ஆனால் திராவிடர்கள் இதை புரிய துப்பில்லாதவர்கள். பணத்தை வாங்கி அபேஸ் செய்து விட்டு உருட்டுகிறார்கள்.


A Viswanathan
மார் 26, 2025 13:52

ஒரே குட்டையில் உறிய மட்டைகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை