உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாய்க்கடியும் இருக்கக்கூடாது; நாயை கொல்லவும் கூடாது; அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை

நாய்க்கடியும் இருக்கக்கூடாது; நாயை கொல்லவும் கூடாது; அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நாய்க்கடி சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம், நாய்களை துன்புறுத்தக் கூடாது என அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை வழங்கி உள்ளது.சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: சென்னை மாநகரில், பொது மக்களுக்கு அச்சுறுத்தலாகவும், மூர்க்கத்தனமாகவும் உள்ள நாய்களை, அவற்றின் உரிமையாளர்கள் முகக்கவசம் அணியாமல், தெருக்களில் அழைத்து செல்கின்றனர்.இதுபோல, உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல், அழைத்து செல்லப்பட்ட வெளிநாட்டு வகையைச் சேர்ந்த 'ராட்வைலர்' நாய்கள் கடித்து, சிறுவர், சிறுமியர், வயதானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதுபோன்ற ஆக்ரோஷமான நாய்களை தடை செய்ய வேண்டும் அல்லது முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி கால்நடை துறை தலைமை அதிகாரி கமல் ஹுசைன் ஆஜரானார்.மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர் அருண்பாபு, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தனர்.அதன் விபரம்: சென்னை மாநகராட்சியில், நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள், அதற்கு உரிய சான்றிதழை பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மாநகரில், தற்போது 1 லட்சத்து 80,157 நாய்கள் உள்ளன. தெரு நாய்களை கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.ஒரு இடத்தில் பிடிக்கப்படும் நாய்கள், கருத்தடை, தடுப்பூசி போடப்பட்டு, மீண்டும் அதே பகுதியில் விடப்படுகின்றன. ஐந்து கருத்தடை மையங்கள் உள்ளன. கூடுதலாக, 10 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வழக்கு விசாரணையின்போது, 'எத்தனை நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன' என, தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கால்நடைத் துறை தலைமை அதிகாரி, 'உத்தேசமாக கடந்த ஓராண்டில், 20,000 சம்பவங்கள் நடந்திருக்கலாம்' என்றார்.அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தெரு நாய்களை பிடித்து, கருத்தடை மற்றும் தடுப்பூசி போட்டு, மீண்டும் அதே பகுதியில் விடுவதற்கு பதிலாக, அவற்றை தனி காப்பகங்கள் அமைத்து பராமரிக்க வேண்டும்.அவற்றுக்கு முறையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். இது சம்பந்தமாக விரிவான திட்டத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.நாய்க்கடி சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம், நாய்களை துன்புறுத்தக் கூடாது. நாய்க்கடி முக்கிய பிரச்னையாக உள்ளது.'நோ பைட்; நோ கில்' என்ற நிலையை, அதாவது நாய்க்கடியும் இருக்கக் கூடாது; நாயை கொல்லவும் கூடாது என்ற நிலையை, தமிழகத்தில் கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.பின், தெரு நாய் பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருவதால், இந்த வழக்கின் விசாரணையை, மூன்று வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

போராளி
ஆக 16, 2025 07:41

தேர்தல் கமிஷன் மாதிரி.மக்களும் ஓட்டு போடனும்.எங்க ஆளுங்களும் ஓட்டு போடுவாங்க.எங்களுக்கு வேண்டியவர்களை ஜெயிக்க வைப்போம்ங்கிற மாதிரி


Sun
ஆக 15, 2025 23:43

இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு நாய் கடிக்கு மட்டும்தானா? இல்லை கொசுக் கடிக்கும் பொருந்துமா?


S.L.Narasimman
ஆக 15, 2025 19:53

உங்கள் தீர்ப்பின்படி நடக்கனும்னா எல்லா நாய்களின் பற்களை பிறந்தவுடன் பிடுங்கி விடவேண்டும்.


Techzone Coimbatore
ஆக 16, 2025 15:47

அப்பொழுது கொலை செய்த மனிதனின் கையை வெட்டி விடுங்கள். செய்வீரா? பாலியல் குற்றம் செய்தவனுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யுங்கள். மனிதன் ஆயிரம் குற்றம் செய்யலாம். அப்பாடி எவளோ மனிதநேயமற்ற குணம் . தினம் தினம் ஆயிரக்கணக்கான மரணங்கள் விபத்தினால் போகிறது. அதை தடுக்க வக்கு இல்லை. நாய் பல்லை புடுங்கனுமாம்?


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 17, 2025 10:38

வேணும்ன்னா தெருநாய்களில் ஒரு பத்தை எடுத்து உன் வீட்டில் சோறு போட்டு வளர்க்க வேண்டியது தானே? அதுக்குன்னா வலிக்குது, இல்லே? வீட்டில் வளர்க்கவென்று வாங்கப்பட்ட நாய்கள் தான் அதை வாங்கி வளர்க்த் துப்பில்லாத நாய்கள் விரட்டியதால் தெரு நாய்களாகி, பல்கி பெருகி உள்ளன. மேலைநாட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குட்டிகளை விற்பவர்கள் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடும் உண்டு. அவைகளை கருணைக் கொலை செய்வதே அவைகளுக்கு செய்யப்படும் நல்ல காரியம் எனலாம்.


Rathna
ஆக 15, 2025 17:37

இப்போது இள வயது பெண்கள் நாய்களின் தாயார், பூனைகளின் தாயார் என்று சோசியல் மீடியாவில் போட்டுக்கொள்ளவே விரும்புகிறார்கள். குடும்பத்தை விரும்பாத சூழல் மேற்கத்திய கலாச்சாரத்தால் உருவாகியுள்ளது.


சந்திரன்
ஆக 15, 2025 17:20

குற்றவாளிகளை தண்டிக்க கூடாது ஆனால் குற்றமே நடக்க கூடாது


J.V. Iyer
ஆக 15, 2025 17:02

இதற்கு ஒரே வழி, இந்த நாய்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதே.


visu
ஆக 15, 2025 16:05

முதலில் பெண் நாய்களையெல்லாம் மட்டும் காப்பகத்தில் அடையுங்கள் இல்லை வட இந்தியாவுக்கு அனுப்பிடுங்க வட இந்தியாவுல ஆன் நாய்களை மட்டும் பிடித்து தென் இந்தியாவுக்கு அனுபிடுங்க


J.Isaac
ஆக 15, 2025 14:53

நமக்கும் நாய் புத்தி தான் இருக்கும்


Ram pollachi
ஆக 15, 2025 14:40

விவரம் இல்லாத குழந்தைகள் நாயை இழுப்பது அடிப்பது,:கொஞ்சி விளையாடுது, திண்பண்டங்களை வீசுவது மற்றும் அதன் கண் முன்னால் நின்று நாம் தின்றால் கடி உறுதி.


Ram pollachi
ஆக 15, 2025 14:35

அன்பாக ஆசை ஆசையாக எப்படி வளர்த்தாலும் கடிப்பது உறுதி.... தொப்புளை சுற்றி ஊசி போட வேண்டும்... குறிப்பாக கடிச்சு வைத்த நாய் சாகாமல் இருக்கிறாதா என்பதை கண்காணிக்க வேண்டும், பத்திய சாப்பாடு. என்ன செய்ய?


Keshavan.J
ஆக 15, 2025 19:34

தொப்புளை சுற்றி ஊசி போட வேண்டும் என்று கூறும் திரு ராம் அவர்களே எந்த காலத்தில் இருக்கிறீர்கள். 30 வருஷம் முன்பே என்னை நாய் கடித்தது. ஒரே ஒரு ஊசிதான் . ஹார்ஸ் சிரும் இன்ஜெக்ஷன். Horse sirum


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை