உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மும்மொழி கொள்கையில் அரசியல் நிலைப்பாடு கூடாது: தமிழக அரசுக்கு தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்

மும்மொழி கொள்கையில் அரசியல் நிலைப்பாடு கூடாது: தமிழக அரசுக்கு தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்

சென்னை: மும்மொழி கொள்கையில் அரசியல் நிலைப்பாடு கூடாது என தமிழக அரசுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fqgfutpj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை ஐஐடியில் நிருபர்களிடம் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: கல்வி நிதி விவகாரம் குறித்து இரண்டு வருடமாக நான் பேசி வருகிறேன். மீண்டும் சொல்கிறேன். இந்த விஷயத்தை தமிழக அரசு அரசியல் விவகாரமாக பார்க்கிறது. இது குறித்து பார்லிமென்டில் நான் பேசி இருக்கிறேன். தேசிய கல்விக்கொள்கையை நாடே ஏற்றுக்கொண்டது. மத்திய அரசு தமிழகத்தில் கல்விக்கு ஆண்டுதோறும் நிதி வழங்கி வருகிறது.

கல்வி நிதி

மதிய உணவு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி வழங்கி உள்ளது. இந்த ஆண்டு வரை தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வி சார்ந்த நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. கல்வி நிதி விவகாரம் தொடர்பாக தமிழக கல்வித்துறை அமைச்சர் மகேஷ், திமுக எம்பி கனிமொழி என்னை சந்தித்தனர். அவர்களிடம் நான் தெளிவாக கூறிவிட்டேன். மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் சமக்ர சிக்ஷா கல்வி நிதியை மத்திய அரசு வழங்கும்.

அரசியல் நிலைப்பாடு

இது மாணவர்களின் நலனுக்கான விஷயம். இதில் அரசியல் கூடாது. இருதரப்பும் பஸ்பர மரியாதையுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் அரசு மும்மொழி கொள்கையை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது. மும்மொழி கற்பதில் என்ன பிரச்னை? தமிழக அரசு தனது அரசியல் நிலைப்பாட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்க கூடாது. இருமொழிக் கொள்கை என்பதை அரசியல் நிலைப்பாடாக திமுக வைத்துள்ளது. தமிழக மாநில பாடத்திட்ட பள்ளிகளில் தெலுங்கு, உருது, மலையாளம் என பல மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

3வது மொழி

தாய்மொழியுடன் ஏதாவது இரு மொழிகளை கற்கலாம் என்பதே தேசிய கல்விக்கொள்கையின் நோக்கம். 3வது மொழியாக ஏதாவது ஒரு மொழியை படிக்க சொல்கிறோம். மத்திய அரசு எந்த மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. தேசியக்கல்வி 3வது மொழியை ஊக்குவிக்கிறது. மும்மொழி கொள்கையில் அரசியல் நிலைப்பாடு கூடாது. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மாணவர்கள் 10 மொழிகள் கற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.

தமிழ் கற்கணும்!

சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: காசி முதல், தென்காசி வரை உள்ள மக்கள் ஒரே கலாசாரத்தை பின்பற்றுகின்றனர். நான் தமிழ் மொழி கற்க விரும்புகிறேன். அது ஒரு துடிப்பான மொழி. பல மொழிகளை கற்றுக் கொள்வதற்கு தாய்மொழியில் புலமை பெற்று இருப்பது அவசியம். நம் நாட்டில் 30 கோடி மாணவர்கள் இருக்கின்றனர். 12ம் வகுப்பு படிக்கும்போது 30% மாணவர்கள் படிப்பினை தொடர்வதில்லை. அனைத்து மாணவர்களும் கல்லூரிகளில் சேர்வதில்லை. பள்ளிக்கல்வியில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Padmasridharan
செப் 22, 2025 20:28

வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளிகளை அவமதிப்பது போல் உள்ளது பேசக்கூடிய அரசியல்வாதிகளின் மொழிக்கொள்கை. தென்னிந்தியர்கள் முதலில் இங்கிருக்கும் மொழிகளை கற்கட்டும். சினிமாக்காரர்கள் dubbing / remakes திரைப்படங்களை நிறுத்தட்டும் சாமி. Sign language க்கு முக்கியத்துவம் கொடுக்கட்டும்.


Mr Krish Tamilnadu
செப் 22, 2025 13:17

பேசி பேசி அலுத்து போன விசயம். மாநில லிமிட். மத்திய லிமிட் என்ன?. மும்மொழியின் அவசியம் என்ன?. பயன் என்ன?. தமிழ்நாட்டை விட்டு தாண்டாத வர்கள் ஏன் பிற மொழி கற்று கொள்ள வேண்டும்?. சிபிஎஸ்இ யில் இந்தி பயிற்சி தரப்படுகிறது. யாரும் தடுக்கவில்லை. அந்த பாடத்திட்டம் இந்திய பாடத்திட்டம் அதில் இந்தி உண்டு. சென்னை மாகாணத்தில் இருந்து தமிழ் நாடு வந்தது, இன்னும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசி மொழி சுதந்திரத்துடன் தமிழகத்தில் இருக்கிறார்கள். அன்று தொட்டு பல அயல்நாட்டு வணிகங்களால், பல மொழிகளை தமிழ் உள்வாங்கி விட்டது. பல தமிழ் நூல்களை தொலைத்தும் விட்டோம். நாம் பிற மொழி கற்பவர்களை வேண்டாம் என தடுப்பதில்லை. மனம் ரீதியாக வேற்றுமையை தான் வளர்க்கிறது. ஜோசப் விஜய், மலையாளி, வடக்கன், சிங்களன் என கூட இருக்கும்போதே எட்டி பார்த்து விடுகிறது வேற்றுமை. இத்தனை வருடங்கள் உள்ள ஆங்கிலம் நமக்கு, நமது இளைய சமுதாயத்திற்கு புதிரான மொழியாகவே உள்ளது.


ManiMurugan Murugan
செப் 22, 2025 00:17

ManiMurugan Murugan தமிழகத்தில் ஏற்கனவே அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கார் கட்சி தி மு கா கூட்டணி குழும பள்ளிகள் எல்லாம் மு ம் மொழி கொள்கை மானியம் பெறவே ஏற்று நடக்கிறது அவதிமாஓவிமோ ஊகதிமுகா கூட்டணி திரை கதை வசனம் நாடகம் போடுகிறது


GMM
செப் 21, 2025 21:21

தேசிய கல்வி கொள்கை 3 மொழி கொண்டது. இந்தியல்ல. இந்திய மொழியில் ஒன்று. ஆங்கிலம், உருது இந்திய மொழி அல்ல. தமிழ் மட்டும் திராவிடர் படிப்பது இல்லை. மக்களை இணைக்க ஒரு இந்திய மொழி தேவை. பெரும்பாலான மக்கள் இந்தி பேசுவதால் அதனை ஏற்கலாம். ஆபத்து வரும் போது, அன்னியர் தாக்கும் போது தான் தேசிய மொழியின் அவசியம் தெரியும். இரு மொழி கொள்கை நாட்டின் ஒரு மாநிலம் மட்டும் வகுப்பதை நீதிமன்றம் அனுமதித்து இருக்க கூடாது. பாதிக்கு மேற்பட்ட மாநில கருத்து தேவை. மத்திய அரசு நீதிமன்றத்தில் எடுத்து சொல்ல வேண்டும். திராவிட இரு மொழி கொள்கை சட்ட விரோதம்.


Iyer
செப் 21, 2025 21:15

ஹிந்தியை எதிர்க்கும் தமிழக சகோதரர்களுக்கு கேள்வி, பாரதத்தின் தேசிய மொழியாக - நீங்கள் எதை கருதுகிறீர்கள்?? நமது பாரத மக்களின் இணைப்பு மொழியாக நீங்கள் எதை கருதுகிறீர்கள்?


Gokul Krishnan
செப் 22, 2025 08:55

உங்கள் கேள்வியே தவறானது இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எந்த மொழியும் கிடையாது இல்லாத ஒன்றை திரும்ப திரும்ப சொல்வதால் இருப்பது ஆகி விடாது


Rathna
செப் 21, 2025 20:27

மும்மொழி கொள்கையில் கட்டாயமாக ஹிந்தி தான் பாடமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை. உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் - பிரெஞ்சு, ஸ்பானிஷ் அது தவிர என்ஜினீரிங்கில் ஜெர்மன். இவற்றை பாடமாக கற்பித்தால் ஐரோப்பா, கனடா, லத்தீன் அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் என்ஜினீயர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் நல்ல வேலை கிடைக்கும். சென்னை தாண்டினால் தமிழுக்கு வேலை இல்லை. இது தான் உண்மை.


தாமரை மலர்கிறது
செப் 21, 2025 19:30

தமிழகத்திற்கான ஒட்டுமொத்த நிதியை நிறுத்துங்கள். அந்த நிதியை உபி, பீகார், குஜராத்துக்கு கொடுங்கள். ஸ்டாலினை கதறவிடுங்கள். அதுவரை திமுக திருந்தாது .


Indian
செப் 22, 2025 09:17

வந்தேறிகள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமானால் இதுபோன்று கமெண்ட்ஸ் தான் வரும்


T.Gajendran
செப் 21, 2025 19:16

ஐய்யா ஒன்றிய அமைச்சரே , மும்மொழி கொள்கையை, ஏற்றால்தான், கல்விக்கு, பணம் கொடுக்க முடியும், என்று கூறுகிறீர்கள், நாளை இதே கருத்தை, மூன்றாவது, மொழியாக, ஹிந்தியை, ஏற்றால்தான், பணம் கொடுக்க முடியும், என்று, இதே வாதத்தை முன் வைத்தால், என்னா செய்வது, இங்கே தமிழகத்தில்,தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில், ஓசூர், தேன்கனிக்கோட்டை, பாலக்கோடு, தாலுக்காக்களில், அரசு பள்ளிகளில், தேவைப்படும், பகுதிகளில், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கற்பிக்க படுகிறது, தேவையிருந்தால், கற்கலாம், திணிக்கவோ, வற்புறுத்தவோ, கூடாது, இதுதான் தமிழ்நாட்டின், 80%, மக்களின், கோரிக்கை, கொள்கை... எந்த குறுக்கு வழியில், வந்தாலும், அதிகாரம் பெற்று, இந்தி இங்கே கால்லூன்ற முடியாது, விரும்பும் மக்கள் கற்றுக்கொள்ளலாம் யாரும் எதிர்கமாட்டார்கள்,


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 21, 2025 19:51

விரும்பும் மக்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை என்பதுதான் பிரச்சனையே. புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், கரூர், திருவண்ணாமலை... இங்கெல்லாம் படிக்கும் குழந்தைகள் எங்கு போய் மூன்றாவது மொழி கற்பார்கள்? விரும்பினாலும், இல்லை, முடியாது என்பதுதான் உண்மை.


Iyer
செப் 21, 2025 20:29

ஐயா, ஹிந்தி மொழிக்கும் மற்ற எல்லா இந்திய மொழிக்கும் 40 -80 % பொதுச்சொற்கள் உள்ளன. தமிழுக்கும் ஹிந்திக்கும் 40% பொதுச்சொற்கள் உள்ளன. தமிழகத்தை தவிர - மற்ற ஹிந்தி பேசாத மாநில மக்கள் - ஓரளவு ஹிந்தி பேசி - சமாளிக்கிறார்கள். ஒரு தமிழர் சுற்றுலாவாக HP அல்லது அசாம் சென்றால் அவர் என்ன மொழியில் அங்கு COMMUNICATE செய்வார் ? ஹிந்தி நம் நாட்டின் இணைப்பு மொழி. நாம் பாரதமக்கள் எல்லோரும் ஹிந்தி கற்பது அவசியம்.


Venugopal S
செப் 21, 2025 19:05

இவர் தமிழ் கற்றுக் கொள்ள துடிப்பாக இருக்கிறாராம், நம்பச் சொல்கிறார்! மத்திய பாஜக அரசில் பிரதமர் மோடி, அமித்ஷா தொடங்கி இவர் வரை ஏதாவது ஒரு வட இந்திய பாஜக தலைவராவது தமிழ் பேச இந்த பத்தாண்டுகளில் கற்றுக் கொண்டார்களா? வெறும் வாய்ச் சவடால் பேர்வழிகள்!


அப்பாவி
செப் 21, 2025 18:51

வடக்கன் ஒருத்தனும் அங்கே தமிழ் படிக்க மாட்டான். இங்கே இந்தியைத் திணிச்சு தமிழையே ஒழிச்சுக் கட்டிருவான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை