உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 100 சதவீதம் ஒத்துழைப்பு; தொகுதி மறுவரையறை கூட்டுக்குழுவில் ஸ்டாலினுக்கு பஞ்சாப் முதல்வர் உறுதி

100 சதவீதம் ஒத்துழைப்பு; தொகுதி மறுவரையறை கூட்டுக்குழுவில் ஸ்டாலினுக்கு பஞ்சாப் முதல்வர் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது' என பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பேசினார்.சென்னை கிண்டியில் நடந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, கூட்டுக்குழு கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பேசியதாவது: அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க முன்னெடுப்பை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தண்டனை தொகுதி மறுசீரமைப்பு. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது. தமிழகம், பஞ்சாப் மட்டுமல்ல மக்கள் தொகையை கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களும் பாதிப்பை சந்திக்கும். தொகுதி மறுசீரமைப்பால் தொகுதிகள் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது. எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளதோ, அதனை தக்க வைக்க பா.ஜ., முயற்சிக்கிறது. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

अप्पावी
மார் 22, 2025 16:04

பஞ்சாப் ல தமிழ் பயிற்றுவிக்கப் படப் போகிறது. தாலியாவ் பஜாவோ. பல்லெ பல்லே பல்லே


M Ramachandran
மார் 22, 2025 16:00

ஒய் சர்தார் உங்களையெல்லாம் தீ மு கா காரங்க பீடா வாயன்கள். ஒன்னும் தெரியாத ......... சொல்றாங்களே நீக பாட்டும் மண்டையாய் ஆட்டி கொண்டிருக்கிறீரே.


naranam
மார் 22, 2025 14:09

டாஸ்மாக் அழைத்துச் சென்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்.


நல்லதை நினைப்பேன்
மார் 22, 2025 13:54

80 கோடி மக்கள் தொகைக்கு 543, இன்று 145, கோடி மக்கள் தொகைக்கு அதே 543 தானா.? அப்போ மக்கள் பிரநிதித்துவம் என்னாகும்


அசோகன்
மார் 22, 2025 13:15

விவசாயிகளை கூண்டோடு அடித்து சிறையில் போட்டதுமட்டுமில்லாமல் புல்டோஸ்ர் வைத்து இடித்து தள்ளுகிறது பஞ்சாப் அரசு..... இதை பத்தி பேசாமல் காற்றில் கம்பு சுத்துகிறார்கள் இந்த indi கூட்டணி


Balaa
மார் 22, 2025 13:12

நாங்களும் சாராய ஊழல், நீங்களும் சாராய ஊழல் . So, முழு ஒத்துழைப்பு...ஸ்டாலின் ஜீ..


Nedumaran
மார் 22, 2025 13:01

மக்கள் தொகை அடிப்படையில் தான் மக்கள் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்


ஆரூர் ரங்
மார் 22, 2025 12:49

இவரது கட்சிக்கும் இங்குள்ள ஆளும் கட்சிக்கும் ஒற்றுமை உண்டு. அதான் சரக்கு ஊழல்.


நாஞ்சில் நாடோடி
மார் 22, 2025 12:42

ஹிந்தி தெரியாது போடா என்று தி மு க வினருக்கு இப்போது சொல்ல முடியுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை