உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ஆட்சி உங்களுக்கு நிரந்தரமானது மட்டும் அல்ல. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது. துணை முதல்வர் தொகுதி என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதா? மக்கள் மனதில் மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது. முறையாக அனுமதி கேட்டு ஒரு வாரம் ஆகிறது.ஆட்சி உங்களுக்கு நிரந்தரமானது மட்டும் அல்ல. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும். பா.ஜ.,வின் வளர்ச்சியை தடுக்க பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். நிருபர்: திருமாவளவன் அ.தி.மு.க., விஜய் உடன் கூட்டணி கதவை மூடிவிட்டோம். அ.தி.மு.க., கூட்டணி ஆட்சிக்கு அழைத்தார்கள்? என கூறியுள்ளாரே?நயினார் நாகேந்திரன் பதில்: திருமாவளவன் ஒரு கூட்டணியில் இருக்கிறார். இவர் எப்படி அ.தி.மு.க., கதவை மூடமுடியும். விஜய் கதவை மூடிவிட்டோம் என்று எப்படி சொல்ல முடியும். முதலில் அவரது வீட்டு டோரை குளோஸ் பண்ணட்டும். அடுத்த வீட்டை பற்றி அவர் கவலைப்பட வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

பல்லவி
ஏப் 28, 2025 11:15

இலவு காத்த கிளி கதை தெரியாது போல அய்யா உங்களுக்கு


MP.K
ஏப் 27, 2025 21:30

அதிமுக என்ற குதிரையை மிரட்டி சவாரி செய்வோம் என்கிறார்.ஏற்கனவே நான்கு ஆண்டுகள் அப்படித்தானே ஆண்டோம் அம்மா மறைந்த பிறகு


J.Isaac
ஏப் 27, 2025 21:51

மண்குதிரை ஆக போகிறது


sankaranarayanan
ஏப் 27, 2025 20:55

மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது. மனம் வரவில்லை மனமில்லை மனமில்லா மானிடரை காண்பதே தின் திராவிட மாடல் அரசாட்சியின்போதுதான் ஏனிப்படி இவ்வளவு பகைமை யார் சொத்தை யார் எடுத்துக்கொண்டு சொல்லப்போகிறார்கள் எல்லோரும் கைகளை விருத்திக்கொண்டுதான் செல்லவேண்டும்


Sampath Kumar
ஏப் 27, 2025 18:24

அது எல்லாம் நிகழாது வேட்டி மாற்றம் வேண்டுமானால் நிகழும் போவியா


bogu
ஏப் 27, 2025 17:59

1000 கோடி Tasmac ஊழல் பற்றி பேசுவியா மாட்ட 4 கோடி பத்தி பேச வந்துட்ட


J.Isaac
ஏப் 27, 2025 17:24

பாவம் அதிமுக.


M Ramachandran
ஏப் 27, 2025 17:23

நினைப்பு தான் பொளப்ப கெடுக்குது. பூனையை பழனியை மடியில் வைத்து கட்டி கொண்டு சகுனம் பார்த்த கதை தான்.


M Ramachandran
ஏப் 27, 2025 17:20

யேம்ப்பா பணக்குவியலிடமேல்லாம் மோதனும். ஒரு ஓட்டுக்கு 5000 சர்வ சாதாரணமா செலவு செய்ய கூடிய கும்பலிடம் எல்லாம் போட்டி எல்லாம் போட கூடாது. முடியாது. ஏதவது பின் பக்கம் வழி இருக்கானு தான் பார்க்கணும். அப்புறம் அடிவேலு மாதிரி புலம்ப வேண்டியதாக இருக்கும்.


thehindu
ஏப் 27, 2025 16:18

இப்படி ஒரு சிரிய நாடக குழுவை வைத்துக்கொண்டு பத்திரிகைகளில் பொழுது போக்க நாடகமாடலாம்.


Velan Iyengaar
ஏப் 27, 2025 14:50

எவ்ளோ ஆழமிக்க பதில்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை