உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., ஆட்சியில் ஊழல் இருக்காது; ஊழல்வாதிகள் இருக்கவே மாட்டார்கள்: கோவையில் நடிகர் விஜய் பேச்சு

த.வெ.க., ஆட்சியில் ஊழல் இருக்காது; ஊழல்வாதிகள் இருக்கவே மாட்டார்கள்: கோவையில் நடிகர் விஜய் பேச்சு

கோவை : ''த.வெ.க., ஆட்சியில் ஊழல் இருக்காது; ஊழல்வாதிகள் இருக்கவே மாட்டார்கள்,'' என, அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். தமிழக வெற்றிக் கழகமான, த.வெ.க., பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம், கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் நாளாக நேற்று நடந்தது.

கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:

த.வெ.க., வெறும் அரசியல் ஆதாயத்துக்காக துவக்கப்படவில்லை. சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதே நேரம் இதனால் மக்களுக்கு ஒரு நல்லது நடக்கும் என்றால், எந்த ஒரு எல்லைக்கும் போக தயங்க மாட்டோம்.

மக்களை நேசி

நம் ஆட்சி ஒரு சுத்தமான ஆட்சியாக இருக்கும். நம் ஆட்சியில் ஊழல் இருக்காது; ஊழல்வாதிகள் இருக்க மாட்டார்கள். அதனால், எந்த விதமான தயக்கமும் இன்றி பூத் கமிட்டி முகவர்கள் தைரியமாக மக்களை சந்திக்கலாம். 'மக்களிடம் செல், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்; மக்களுடன் வாழ், அவர்களுடன் சேர்ந்து திட்டமிடு; மக்களை நேசி; அவர்களுக்காக சேவை செய்' என, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை கூறினார். இதை புரிந்துகொண்டு நீங்கள் செயல்பட்டால், உங்கள் ஊர், சிறுவாணி நீர் போல சுத்தமான ஆட்சியாக இது அமையும். இன்னும் உறுதியாக கூற வேண்டும் என்றால், த.வெ.க.,வின் ஆட்சி தெளிவான, உண்மையான, வெளிப்படையான நிர்வாகம் செய்யக்கூடிய ஆட்சியாக இருக்கும்.இதை மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். நீங்கள் பார்ப்பீர்கள், த.வெ.க., ஓர் அரசியல் கட்சி மட்டும் அல்ல. அது விடுதலைக்கான பேரணி என்பது தெரியும்.

நல்லதே நடக்கும்

அந்த வெற்றியை நாம் அடைய, உங்கள் செயல்பாடு தான் மிக முக்கியம். நீங்கள் தான் முதுகெலும்பு. அதை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.

'ஓட்டு போடுவதை மக்கள் கொண்டாட்டமாக செய்யணும்'

விஜய் பேசுகையில், ''ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டு போடும் மக்களுக்கு, உதவியாக இருக்க வேண்டும். குடும்பமாக கோவிலுக்கு செல்வது போல், பண்டிகையை கொண்டாடுவது போல், நமக்காக குடும்பமாக ஓட்டுபோட வரும் மக்களும், அதை கொண்டாட்டமாக செய்ய வேண்டும். அப்படி ஒரு எண்ணத்தை, முகவர்களான நீங்கள் அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Matt P
ஏப் 28, 2025 17:41

எம்ஜிஆரும் இப்படி தான் சொன்னாரு. அப்புறம் எல்லாமே மாறிச்சு. வரும்போது புனிதமா தான் வருவானுக. பொறுக்கிகளையும் குண்டர்களை நம்பியே நடக்கும் அரசியலில் அதுவும் குடியரசு நாட்டில் வூழலே இல்லாத ஆட்ச்சி நடத்த முடியுமா? என்றால் சந்தேகமே. நடந்தால் மகிழ்ச்ச்சி.


Mecca Shivan
ஏப் 28, 2025 16:06

அது சரி.. படத்தோட டைட்டில் என்ன ஜோசப்பு ? யாரு பேனர் ? ரெட் ஜைண்டா இல்ல சன் பிக்ச்சர்ஸா ? கதாநாயகி ஆண்டிரியாத்தானே ?


Sankara Narayanan
ஏப் 28, 2025 14:41

அவ்வளவு சுலபத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியுமா ? ஓட்டுக்கு காசு வாங்கி பழக்கப்பட்ட மக்கள் விஜய்க்கு வோட் அளிப்பார்களா என்பது சந்தேகமே .


Matt P
ஏப் 29, 2025 06:32

விஜய் அதிகமாக கொடுத்தால் வாக்களிப்பார்கள்.


SRITHAR MADHAVAN
ஏப் 28, 2025 14:21

சினிமா வசனங்களை வெளியே சொல்லாதீங்க., சினிமால பண்ற மாதிரி நீங்க காஷ்மீருக்குப் போய் சண்டை போட முடியாது. லஞ்சம் இல்லாம எந்த அரசாங்கமும் இருக்காது. இதை மனசுல வச்சுக்கோங்க. நீங்க தேர்ந்தெடுக்கப்பட்டா, யாராவது லஞ்சம் வாங்குனத கண்டுபிடிச்சா, தெரியப்படுத்தினா, ராஜினாமா செய்வீங்களா?


Anand
ஏப் 28, 2025 14:02

நம்ம தத்தியை விட கோமாளியா இருப்பான் போலிருக்கு...


Narasimhan
ஏப் 28, 2025 13:53

இப்படித்தான் அரவிந்த் கேஜ்ரிவாலும் சொல்லி வோட்டு கேட்டார். கடைசியில் ஊழல் தலைவன் என்று பெயரெடுத்தார். நீங்கள் நல்லவராக இருந்தாலும் உங்களுக்கு கீழ் உள்ளவர்கள் ஊழலில் ஈடுபடமாட்டார்கள் என்று எப்படி நம்புவது.


TRE
ஏப் 28, 2025 13:44

வட இந்திய முதலாளிகள் சொல்படிதான் நடப்பார்கள்


Anbuselvan
ஏப் 28, 2025 13:07

அது சரி. ஊழல் அதிகாரிகள்தான் அதிகம் உள்ளனர்? அவர்களை எப்படி கட்டுப்படுத்த போகிறீர்கள் என்பதையும் தெளிவாக எடுத்து கூறி விட்டால் நல்லது.


Ramesh Sargam
ஏப் 28, 2025 13:02

விலை உயர்ந்த காருக்கு இறக்குமதி வரி கட்டாமல் ஏமாற்றியது ஒருவகை ஊழல்தான். அதை செய்த நீயும் ஒரு ஊழல்வாதிதான்.


saravan
ஏப் 28, 2025 10:53

ஒழுங்கா வரி கட்டிவிட்டு வா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை