உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக கூட்டணியில் விரிசல் விழாது; இபிஎஸ் ஆசை நிராசையாகும் என்கிறார் திருமா

திமுக கூட்டணியில் விரிசல் விழாது; இபிஎஸ் ஆசை நிராசையாகும் என்கிறார் திருமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'திமுக கூட்டணியில் விரிசல் விழும் என்ற இபிஎஸ் ஆசை நிராசையாகும்' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: திமுக கூட்டணியில் விரிசல் விழும் என்ற இபிஎஸ்ன் ஆசை நிராசையாகும். விரிசல் விழும் அளவுக்கு திமுக கூட்டணி இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. பாஜவின் ஆசையும் அதுவாக தான் இருக்கிறது.ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆசையும் அதுவாக தான் இருக்கிறது. அவர்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் தொண்டு செய்கிறவர்களின் கனவும் அதுவாக தான் இருக்கிறது. ஆனால் அந்த கனவு நினைவாகாது என்பது தான் எதார்த்த உண்மை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.தினம், தினம் எதிர்க்கட்சிகளை மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் கொண்ட திருமாவளவன் இன்று கூட்டணி கட்சிக்கு ஆதரவாக தனது கருத்துக்களை நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Thiagaraja boopathi.s
செப் 28, 2025 05:25

திருடர்கள் எப்பொழுதும் பிரிய மாட்டார்கள்


Murugesan
செப் 27, 2025 22:27

அயோக்கிய திருடனுங்க கூட்டம் எப்படி பிரியும், கூட்டு கொள்ளைக்காரர்கள்


Nathansamwi
செப் 27, 2025 21:42

தோ வந்துட்டாருல்ல ....


KRISHNAN R
செப் 27, 2025 21:19

சரி, அப்போ நான்கு கட்சி தலைவர்கள் முன்னர்.. ஒரு ஜீப்பில் தொங்கி சென்றது என்ன?


Naga Subramanian
செப் 27, 2025 20:24

தனியா நின்னாலே 234 சீட்டும் கிடைக்கும். தமிழகத்தில் அவ்வளவு நன்மதிப்பு உண்டு திருமாவுக்கு.


Vasan
செப் 27, 2025 19:48

சரியாக சொன்னீர்கள் திருமா அவர்களே. விசிக வின் கட்டமைப்பு உறுதியானது. திமுக வின் கட்டமைப்பும் உறுதியானது. இவை இரண்டும் பிணைந்திருக்கும் கூட்டணியும் அது போலவே. விரிசல் அல்ல, ஒரு கீறலுக்கு கூட வாய்ப்பில்லை. No crack, not even a scratch will be there in this alliance.


NellaiBaskar
செப் 27, 2025 19:35

தன்மானத்தை அடகு வைத்து விட்டால் விரிசலுக்கு இடமில்லை.


Haja Kuthubdeen
செப் 27, 2025 19:27

இந்த கொத்தடிமை திமுகவின் ஊது குழலா???


Venkatesan Ramasamay
செப் 27, 2025 19:10

அரசியல் கோமாளி .. சந்தர்ப்பவாதி.. ஒட்டுத்திண்ணை ....


பாரத புதல்வன்
செப் 27, 2025 19:08

இவர் புலம்பல் படி விரிசல் விழாது.... ஓட்டை விழும்..... திவால் முன்னேற்ற கழகம் கரை சேருவது கடினம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை