உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!

இன்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் வெவ்வேறு ஊர்களில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி, வி.ஏ.ஓ.,க்கள் இருவர் என மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டு உள்ளனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், சிவசுப்ரமணியம் என்பவர் தனது மனைவி பெயரில் இருந்த தற்காலிக மின் இணைப்பை மாற்றக் கோரி, விண்ணப்பித்து இருந்தார். இதனை செய்து கொடுக்க வடக்கு வணிக ஆய்வாளர் ஜெயக்குமார், 56, ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.இதனைக் கொடுக்க விரும்பாத சிவசுப்ரமணியம் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில், சிவசுப்ரமணியம் ரூ.3 ஆயிரம் லஞ்சப் பணத்தை மின்வாரிய அதிகாரி ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், அதிகாரி ஜெயக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரது அலுவலகத்தில் கணக்கில் வராத 13 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கிராம நிர்வாக அதிகாரி கைதுதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கூட்டு பட்டாவை பிரித்து தனிப்பட்டா வழங்க ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய பெரியூர் கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) ராஜ்குமாரை, 41, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., பால் சுதர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.ரூ.10 ஆயிரம் லஞ்சம்; விஏஓ கைதுவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வரிக்கல் விஏஓ தேவராஜ், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

கடல் நண்டு
அக் 09, 2025 20:23

இது போன்ற பிச்சைகார்ர்களுக்கு எதிராக தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும்.. நிச்சயமாக இந்த திராவிட ஆட்சியில் நடக்காது..


dhandapani
அக் 09, 2025 19:25

அண்ணாமலையே ஆட்சிக்குவந்தாலும் இவனுக அண்ணாமலைக்கே அரோகரா போட்டுருவானுக


Indhuindian
அக் 09, 2025 19:22

During fifties, an english newspaper used to carry prominently VIP Vists and Departures and would report X arrived by G T from Delhi, Y left for New Delhi by Jupiter Airlines and so on. People would know the movement of VIPS. Of course this is not possible now since the travel by politicians run to hundreds everyday. But a distict colum about the arrests related to corruption departmentwise would be an intersting reading although the public take these corruption in its stride and doesnot bother since corruption is a way of life.


M S RAGHUNATHAN
அக் 09, 2025 19:08

The government should impose a condition that if a person who gets into employment under Reservation quota, will forfeit his job straight away if he is found to have indulged in misconduct in service, especially embezzling government funds or caught in bribery case.


Chandru
அக் 09, 2025 18:55

Why dmk ministers photos are not coming out under this title?


D.Ambujavalli
அக் 09, 2025 18:44

இந்த மாதிரி சில ஆயிரம் லஞ்ச case களைப் பிடித்துக் கணக்கு காட்டும் ல . ஒ துறையினர், CMDA, water connection transport போன்ற துறைகள் பக்கம் திரும்ப மாட்டார்கள் அங்கெல்லாம் லட்சக்கணக்கில் புழக்கம் இருக்கும், கமுக்கமாக வர வேண்டியது வந்துவிடும். ‘நாங்களும் கடமையைச் செய்கிறோம்’ என்று நாலு சில்லறை வழக்குகளை பிடித்துவிட்டு முடித்துக்கொள்வார்கள்


Kannan Chandran
அக் 09, 2025 18:40

அட போங்கப்பா, கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் கைதான நபர்களே விடுதலை ஆகும்போது இவர்கள் எம்மாத்திரம்..


David DS
அக் 09, 2025 18:24

விஜிலென்ஸ் அய்யாக்களுக்கு வணக்கம், தூத்துக்குடி டிஸ்டிரிக்ட் கோவில்பட்டி தாலுகாவில் வேலை பாக்கும் வி.ஏ.ஓ குடித்து விட்டு தான் வேளைக்கு வருவார். பணம் வாங்கி விட்டு ஒழுங்காக வேலையும் முடித்து கொடுக்கவில்லய். இவரது அண்ணனும் இப்படித்தான், அவரும் வி.ஏ.ஓ வேலை தான் பார்க்கிறார். தட்டிக் கேட்டால் ஜாதி சொல்லி திட்டியதாக வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என்று இரண்டு பெருமே மிரட்டுகிறார்கள். பிளீஸ் நடவடிக்கை எடுங்க.


Ramona
அக் 09, 2025 18:20

லட்ச லட்சமா சம்பளம். குறைந்த வட்டியில் வீடு கட்ட, வாங்க, பிஎப், கிராஜுவட்டி, நேரத்துக்கு வரவேண்டிய கட்டாயம் இல்ல, உயர் அதிகாரி கோப படக்கூடாது,ஏன் லேட் என்று கேட்கவே கூடாது,மீறினால் சங்கத்தில் முறையிடலாம், வேலை செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது, மலிவு விலையில் மருத்துவம், காப்பீடு


spr
அக் 09, 2025 18:10

பாவப்பட்ட ஜென்மங்கள். "பொழைக்கத் தெரியாதவன்யா" என்று இன்னும் சிக்காத எத்தனையோ பேர்வழிகள் வெளியில் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே


சமீபத்திய செய்தி