உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுக - பாஜ கூட்டணியை உடைக்க விரும்பும் திருமா: அவர் நினைப்பு நடப்புக்கு வருமா?

அதிமுக - பாஜ கூட்டணியை உடைக்க விரும்பும் திருமா: அவர் நினைப்பு நடப்புக்கு வருமா?

அதிமுக - பாஜ கூட்டணி ஏற்பட்டது முதல் விசிக தலைவர் திருமாவளவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அதை உடைக்கும் நோக்கத்தில் தினம் ஒரு கருத்தை உதிர்த்து வருகிறார்.‛‛கேட்கும் தொகுதிகளை கொடுக்காவிட்டாலோ அல்லது கூட்டணி ஆட்சியில் இடம் தராவிட்டாலோ அதிமுக கூட்டணி பக்கம் தாவி விடுவேன்'' என்று திமுகவை மறைமுகமாக மிரட்டிக்கொண்டு இருந்தார் திருமா. அதிமுக கூட்டணியில் திண்ணை காலியாக இருக்கும் வரை திருமாவின் மிரட்டலுக்கு மதிப்பு இருந்தது. ஆனால், திண்ணையில் என்று பாஜ வந்து உட்கார்ந்ததோ அன்றே திருமாவின் ஆசையில் அடி விழுந்தது.இருந்தாலும் அவர் மனம் தளரவில்லை. அதிமுக கூட்டணியை உடைத்து, திண்ணையை காலி செய்ய வைத்து தான் போய் அமர்ந்துகொள்ளலாம் என விசிக நினைக்கிறது. அதற்கு ஏற்ப தினமும் ஒரு கருத்தை அதிமுக மீது அக்கறை உள்ளவர் போல காட்டிக்கொண்டு இருக்கிறார் திருமா.கடந்த சில நாட்களில் அவர் உதிர்த்த கருத்துகள்:* அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர வளராது* ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணியை அறிவிக்க அதிமுகவுக்கு என்ன அழுத்தம்?* அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் முழு திட்டம். இதனை அதிமுகவினர் எப்போது புரிந்து கொள்ள போகிறார்கள்?* முருகன் மாநாட்டில் ஈவெராவையும், அண்ணாதுரையையும் இழிவுபடுத்திய பாஜக உடன் எப்படி அதிமுக பயணிக்க முடியும்; இது தற்கொலைக்கு சமமானது.* அதிமுக - பாஜ இடையே இணைப்புதான் இருக்கிறது; பிணைப்பு இல்லை* பாஜவால் அதிமுகவிற்கு ஏற்படும் பாதிப்பை அறியாமல் இருக்கிறார் இபிஎஸ். அதிமுக தோழமை கட்சி என கருதுவதால்தான் கூட்டணி குறித்து விமர்சிக்கிறோம்.* நான் ஆதாயம் கருதினால் அதிமுக - பாஜக இணைந்தே இருக்கட்டும் என வாழ்த்துவேன்.* அதிமுக-பாஜக கூட்டணி பொருந்தாதது. அமித்ஷா, அதிமுகவை கிள்ளுக்கீரையாக கருதுகிறார்.ஆனால் என்ன, இவ்வளவு சொன்ன பிறகும் அதிமுக அல்லது பாஜ சைடில் இருந்து பெரிதாக ரியாக்ஷன் எதுவும் வரவில்லை. அது தான் திருமாவுக்கு இன்னமும் ஏமாற்றமாக இருக்கிறது. திமுக கூட்டணியில் தனக்கு ‛‛டிமாண்ட்'' குறைகிறதே என்ற கவலையும் அவரது கருத்துகளில் தொனிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

VSMani
ஆக 28, 2025 13:05

திமுக அதிமுக பிஜேபி காங்கிரஸ் போன்ற கட்சிகள் விசிக, பாமக இது போன்ற ஜாதிக்கட்சிகளை கூட்டணி சேர்க்கக்கூடாது, பணம் கொடுக்க கூடாது. தானாகவே இந்த சாதிக்கட்சிகள் அழிந்துவிடும்.


Raj S
ஜூலை 15, 2025 22:55

நாள் தவறாம பொலம்பறான்...


theruvasagan
ஜூலை 15, 2025 22:14

வாயில ஏழரை வந்து வாட்டமா குந்திகிச்சு. இக்கரையும் இல்லை. அக்கரையும் இல்லை. நட்டாத்துல தள்ளி விட்டுடும்.


Ramesh Sargam
ஜூலை 15, 2025 20:07

திமுக வீசி எறியும் சில்லறையில் பிழைக்கும் பல கட்சிகளில் இவர் கட்சியும் ஒன்று.


தாமரை மலர்கிறது
ஜூலை 15, 2025 19:29

இரட்டை இலை உயிரோடு இருக்க, தாமரை தேவை. மலரின்றி இலை இல்லை. திருமாவின் கனவு பலிக்காது. பிஜேபியுடன் அதிமுக கூட்டணி இல்லை என்றால், அடுத்த நொடியே ஸ்டாலின் எடப்பாடியை ஜெயிலில் தள்ளிவிடுவார்.


vijay
ஜூலை 15, 2025 19:26

அப்போ, பிஜேபி நிக்குற ஒகுதியிலே ADMK காரன் பிஜேபி க்கு ஓட்டு போட மாட்டன், பிஜேபி யை தோற்கடிக்க வைப்பான். ஆனா பிஜேபி காரன் மட்டும் admk க்கு கரெக்டா ஓட்டை போட்டுட்டு போய் நின்னு மிக்சர் சாப்பிடணும். அப்புறம் வழக்கம் போல அதிமுக ஆட்சியை பிடித்து ஊழல் பண்ணனும். இதுக்கு தான் செல்வாக்கு மிக்க அண்ணாமலையையும் மாற்றி துரோகியுடன் கூட்டணி சேர்ந்தார்கள்.நல்லவர்களுக்கு காலம் இல்லை இந்த நாட்டில். அண்ணாமலை அவர்களே தனி ஆட்சியை தொடங்குங்கள் , உங்களுக்கு வெற்றி நிச்சயம் .


Balaa
ஜூலை 15, 2025 18:53

பொறைக்கு வால் ஆட்டும் ஜென்மம்


நிக்கோல்தாம்சன்
ஜூலை 15, 2025 18:51

கெடுவான் கேடு நினைப்பான்


ஆதிநாராயணன், குவைத்
ஜூலை 15, 2025 18:42

கல்விக் கண் காமராஜர் மற்றும் இந்திராகாந்தியை வசை பாடிய தி.மு.க வுடன் எப்படி காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது அதற்கு முதலில் திருமாளவனிடம் பதில் உள்ளதா


Raghu Raja
ஜூலை 15, 2025 17:38

உண்மை அதிமுக தொண்டன் அதிமுகவுக்கு மட்டுமே வாக்களிப்பான் BJP நிற்கும் அதிமுக கூட்டணியோடு தொகுதிகளில் அவன் வேறு கட்சிக்கு காசு அதிகம் தரும் வாக்களிப்பான் அதே போல ஒவ்வொரு முறையும் கட்சி மாறி வாக்களிக்கும் பொது வாக்காளர்கள் இந்த முறை DMK அல்லது TVK அல்லது சீமான் கட்சிக்கு வாக்களிப்பார்கள் விடுதலை சிறுத்தைகள் எப்போதும் திருமாவளவன் பக்கமே நிற்பார்கள், அவர் காட்டும் நபருக்கே வாக்களிப்பார்கள் இதுதான் நிதர்சனமான உண்மை உண்மை பாதிப்பு BJP க்கு தான். EPS க்கு இதில் பெரிய நஷ்டம் ஒன்னும் இல்லை தோத்துட்டா BJP மேல பழியை போட்டு விட்டு போய்கிட்டே இருப்பார் இதில் திருமாவளவன் ஏன் அதிமுக வ பார்த்து கவலை பட வேண்டும் உண்மையில் VCK கூட கூட்டணி வைக்க ADMK தான் விருப்பப்படுறாங்க BJP also


Loganathan Balakrishnan
ஜூலை 15, 2025 18:01

இவ்வளவு அருமையா கருத்து போட்டு இருக்கீங்க உங்களுக்கு இருக்கறது கூட உங்க தலைவருக்கு இல்ல. அவங்க யாரோட கூட்டணி வச்சா உங்க தலைவருக்கு ஏன் எரியுது.அவங்கதான் தோக்கற கூட்டணி தானே அத பத்தி ஏன் பேசணும்


SUBBU,MADURAI
ஜூலை 15, 2025 19:26

ஊர் ஊருக்கு சைடு பார்வையில் முறைத்து பார்த்து மீசையை முறுக்கி விட்டு Pose கொடுக்கும் தாய் சிறுத்தைக்கு வக்காலத்து வாங்கும் குட்டி சிறுத்தை போல தெரியுது.. உங்களால தலித் மக்களுக்கு இதுவரை எந்த ஒரு நன்மையாவது விளைந்தது உண்டா? திமுகவுடன் சேர்ந்து கொண்டு இனியும் அந்த அப்பாவி தலித் மக்களை ஏமாற்ற வேண்டாம்.


சந்திரன்,போத்தனூர்
ஜூலை 15, 2025 19:31

நீயே கடனை ஒடனை வாங்கிட்டு துபாய்க்கு போய் ஒட்டகம் மேய்க்கிற.அப்படி இருக்கும் போது இந்த குருமா பயலுக்கு இவ்வளவு நீளத்துக்கு ஜால்ரா கருத்து தேவையா?