உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமாவளவன் - வைகை - நாகேந்திரன் ஒரே ஹோட்டலில் சந்திப்பு; நடந்தது என்ன?

திருமாவளவன் - வைகை - நாகேந்திரன் ஒரே ஹோட்டலில் சந்திப்பு; நடந்தது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருச்சியில் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் சந்தித்து பேசியது, தமிழக அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.கடந்த ஏப்., 11ல், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அறிவிக்கப்பட்டது. 'கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்; தி.மு.க.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்போம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறி வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nn64cgyh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கூட்டணி ஆட்சி

அதேபோல, 'தி.மு.க., கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வரும்' என சில நாட்களாக, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து சொல்லி வருகிறார். இதற்கிடையில், 'வரும் 2026 சட்டசபை தேர்தலில், கூடுதல் இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க., விட்டுக்கொடுக்க வேண்டும்' என, மா.கம்யூ., மாநிலச் செயலர் சண்முகம் கூறி வருகிறார்.வி.சி., தலைவர் திருமாவளவனும், 'கடந்த சட்டசபை தேர்தலில் போட்டி யிட்டதைவிட, அதிக தொகுதிகளை வி.சி.,க்கள் போட்டியிட தி.மு.க., தலைமையிடம் கேட்போம்' என தெரிவித்து வருவதோடு, 'அடுத்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமைய வேண்டும். அதுதான் வி.சி.,க்களின் நிலைப்பாடு; இதைத்தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்' என மேடை தோறும் சொல்லி வருகிறார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி, வி.சி., சார்பில் நடந்த, 'மதச்சார்பின்மை காப்போம்' என்ற பேரணிக்காக திருச்சி வந்த திருமாவளவன், அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார்.அதே ஹோட்டலில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் ஆகியோரும் தங்கி இருந்தனர். அப்போது, நயினார் நாகேந்திரனை சந்தித்த வைகைசெல்வன், அவருக்கு, தான் எழுதிய 'உலக நாகரிகங்களில் ஓர் உலா' என்ற புத்தகத்தை வழங்கினார்.பிறகு, தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில், மேலும் சில கட்சிகளை இணைப்பது குறித்தும் இருவரும் பேசியுள்ளனர்.

அதிருப்தி

அதைத் தொடர்ந்து, அதே ஹோட்டலில் தங்கியிருந்த வி.சி., தலைவர் திருமாவளவனை, வைகை செல்வன் சந்தித்தார்.அவருக்கு, தான் எழுதிய 'பேசு பேசு நல்லா பேசு' என்ற புத்தகத்தை வைகைசெல்வன் வழங்கினார். பின்னர், இருவரும் நடப்பு அரசியல் நிலவரம் குறித்து, 30 நிமிடங்களுக்கு மேலாக பேசியுள்ளனர்.

இது தொடர்பாக, அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:

பா.ஜ., - பா.ம.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என திருமாவளவன் தொடர்ந்து பேசி வருகிறார். தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், அக்கட்சி தலைமையோடு, வி.சி.,க்களுக்கு சுமூகமான உறவு இல்லை. அதனால், அ.தி.மு.க., கூட்டணிக்கு வி.சி.,க்கள் வந்தால், கூட்டணி வலுப்பெறும் என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நினைக்கிறார். அதற்காக, திருமாவளவனிடம் பேசுமாறு கட்சியினரை உசுப்பி விட்டுள்ளார். அதனால், தி.மு.க., கூட்டணியை விட்டு வி.சி.,க்கள் விலகினால், அ.தி.மு.க., கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில் தான், வைகைசெல்வன், திருமாவளவனை சந்தித்து பேசி உள்ளார். இது யதார்த்தமாக நடந்த சந்திப்புதான் என்றாலும், தி.மு.க., தலைமை மீது திருமாவளவனுக்கு இருக்கும் அதிருப்தி, வி.சி.,க்கள் அ.தி.மு.க., கூட்டணிக்கு வர வேண்டும் என்ற பழனிசாமியின் விருப்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பரிமாறப்பட்டுள்ளன.

வெற்றிப் பயணம்

கடந்த 2006 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., கூட்டணியில் தனக்கு போதுமான எண்ணிக்கையில் 'சீட்'கள் ஒதுக்கவில்லை என்ற அதிருப்தியில், கூட்டணியில் இருந்து விலகிய திருமாவளவன், எச்சில் இலையில் பரிமாற்றம் நடக்கிறது என கடுமையான விமர்சனத்தை வைத்துவிட்டு, அ.தி.மு.க., பக்கம் சென்றார்.அங்கே, வி.சி.,-க்களுக்கு ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன் பின்னரே, தமிழக தேர்தல் அரசியலில் வி.சி.,க்கள் வெற்றிப் பயணம் துவங்கியது. இந்த விபரங்களையெல்லாம் தன் சந்திப்பின் போது, திருமாவளவனிடம் நினைவுகூர்ந்த வைகைசெல்வன், மீண்டும் அ.தி.மு.க., கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Amar Akbar Antony
ஜூன் 17, 2025 22:07

இந்த சந்திப்புகள் எல்லாம் திருமாவுக்கு தான் பெட்டிகளும் இடமும் கூட்டித்தருமேயன்றி வேறொன்றும் இல்லை. ஒருவேளை வி சி இவர்களுடன் சேர்ந்துவிட்டால் முதல்வருக்கு வன்னியர் மீது பாயசம் பொங்கி இட ஒதுக்கீடு கொடுப்பார். பா ம க தலை அங்கே உருண்டோடிவிடும்.


ramesh
ஜூன் 17, 2025 20:45

சிறுத்தைகள் வெளியேறினால் அந்த இடத்தில pmk உள்ளே வரும்


Manaimaran
ஜூன் 17, 2025 18:59

இது நட்பு ரீதியிலானது.நாளையே வளவன் அறிவிப்பு வெளியிடும்


சிட்டுக்குருவி
ஜூன் 17, 2025 18:21

சிறுத்தை சிறுத்தையாகவே இருந்தால் தான் சிறுத்தைக்கு மதிப்பு .சிறுத்தை பூனையானால் எலிகூட மதிக்காது .


sridhar
ஜூன் 17, 2025 20:39

பிளாஸ்டிக் chair பொம்மை சிறுத்தைக்கு எப்போதுமே மதிப்பு கிடையாது தான்.


madhesh varan
ஜூன் 17, 2025 18:06

எடப்பாடியாரை நம்பி ஏமாறுவதற்கு திருமா ஒன்னும் அண்ணாமலையோ தமிழிசையோ சசிகலாவோ தினகரனோ இல்லை திருமாவளவன்


Rajah
ஜூன் 17, 2025 17:45

விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ஆகியோரை தவிர்க்க வேண்டும். இந்த உலகிற்கு தீவிரவாதம் எவ்வளவு அச்சுறுத்தலோ அதேபோல் திராவிட மாடலும் இந்தியாவின் இறையான்மைக்கு அச்சுறுதலாகும். தமிழகம் தீவிரவாதிகளின் கோட்டையாக ஏற்கனவே மாறிவிட்டது. தமிழகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் திராவிட மாடல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூன் 17, 2025 09:19

திமுக 200 சீட் தக்கவைத்துக் கொள்ள முடிவெடுத்திருப்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆளுக்கு ஒன்றிரண்டு சீட்தான் கொடுக்கும். அதனால் வெறுப்பில் உள்ளனர். அதனைப் பயன்படுத்தி சிறுத்தைகள் போன்ற கூட்டங்களை உள்ளே விடுவது அதிமுக பிஜெபி க்கு நல்லதல்ல.


Oviya Vijay
ஜூன் 17, 2025 08:23

என் கருத்துக்களை படிப்பதில்லை என்று சொல்லிவிட்டு ஆனாலும் அதனைப் படித்துவிட்டு இங்கே கமெண்ட் செய்யும் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி Haja அவர்களே... உங்களுக்கு ஒன்றை தெளிவுப்படுத்த நான் கடமைப் பட்டுள்ளேன்... நீங்கள் மனதில் நினைப்பதையே நானும் எழுத வேண்டும் என்று ஒன்றும் அவசியமில்லையே. என்னால் என்ன யூகிக்க முடிகிறதோ அதையே இங்கே எழுதுகிறேன். என் யூகங்களுக்கு தகுந்த காரணங்களையும் நான் என் பதிவுகளில் குறிப்பிடுகிறேன்... என் யூகம் பெரும்பாலான நேரங்களில் சரியாக இருந்திருக்கிறது. காலம் அதை உங்களுக்கு உணர்த்தும்...


vivek
ஜூன் 17, 2025 11:22

புரிந்தது....இருநூறு ரூபாய் ஒழுங்காக வருகிறது.....


guna
ஜூன் 17, 2025 11:23

முற்றும் தெரிந்த இருநூறு ஞானி இவர்...


vivek
ஜூன் 17, 2025 11:32

திமுக உட்கட்சி பூசல் பற்றி இந்த கருத்து என்னவோ....


haja kuthpudeen
ஜூன் 17, 2025 07:21

உம்முடைய கருத்தையெல்லாம் நான் இப்போ படிப்பதே இல்லை...நீர் என்ன கருத்து எந்த செய்திக்கு எழுதுவீர் என்பது அனைவரும் அறிந்ததே...விடியலிடமிருந்து 200ரூபாய் ஒழுங்காக வருகிறதா...??? Check பண்ணும்...அவர்கள் அதிலும் ஆட்டையை போடுவதில் வல்லவர்கள்...!!!


ramesh
ஜூன் 18, 2025 21:03

உண்மையான பெயரில் கருத்து போட துணிச்சல் இல்லை . எதற்கு மாற்று மத பெயரில் கருத்து போடுகிறீர்கள்


Oviya Vijay
ஜூன் 17, 2025 05:49

2026 ல் நடக்கப் போகும் சட்டமன்ற தேர்தலை அடுத்து மூன்று வருடங்கள் கழித்து 2029 ல் நடக்கப் போகும் நாடாளுமன்ற தேர்தலிலோ அல்லது 2031 ல் நடக்கப் போகும் சட்டமன்ற தேர்தலிலோ வேண்டுமானால் ஏதோ காரணம் சொல்லி திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியே வர வாய்ப்புள்ளதேயன்றி எதிர்க்கட்சிகள் என்ன முக்கினாலும் 2026 தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து ஒரு கட்சியைக் கூட உருவ முடியாது என்பதே என் கணிப்பு. ஏனெனில் திமுக கூட்டணியிலிருந்து ஒரு கட்சியை உருவுவதற்கு கூட எதிர்க்கட்சிகளுக்கு ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி இப்போதைக்கு எந்த எதிர்க்கட்சிகளிடமும் இல்லை... வெளியேறினால் எதிர்க்கட்சி கூட்டணியில் ஜெயிக்க வேண்டுமே. அது நடக்காது என தெரியும் போது எப்படி வெளியேறுவர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை