உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் பேச்சு அரசியல் யுக்தி; சொல்கிறார் திருமாவளவன்

சீமான் பேச்சு அரசியல் யுக்தி; சொல்கிறார் திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஈவெராவுடன் சீமான் என்னை ஒப்பிட்டு பேசியது ஒரு அரசியல் அணுகுமுறை அல்லது அரசியல் யுக்தி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; என் மீது சீமான் வைத்திருக்கும் மதிப்பீட்டுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். ஈவெராவை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டு, சீமான் இவ்வாறு பேசுவது ஒரு அரசியல் அணுகுமுறை அல்லது அரசியல் யுக்தியாகத் தான் பார்க்க முடிகிறது. அவர் சாமர்த்தியமாக இந்தப் பிரச்னையை கையாளுவதாகத் தான் நான் கருதுகிறேன்.ஈவெராவின் பகைவர்கள் என்ன யுக்தியை கையாள்கிறார்களோ, அவரை வீழ்த்துவதற்காக போராடிக் கொண்டிருக்கும் சக்திகள் யார் என்று அவருக்கே தெரியும். அவர்களின் நோக்கம் நிறைவேறுவதற்கு, உங்களின் அரசியல் ஏதுவாக அமைந்துவிடக் கூடாது என்பது தான் எங்களின் கவலை. திக மற்றும் திமுகவோடு முரண்பாடுகள் இருக்கலாம், அந்த இயக்கங்களின் முன்னணி தலைவர்களின் அணுகுமுறைகளில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஈவெராவின் நிலைப்பாடுகளில் முன்னுக்குப்பின் சில முரண்கள் காணக்கூடியதாக இருக்கலாம்.விடுதலை சிறுத்தைகள் பேசும் அரசியலுக்கு இத்தகைய தாக்குதல்கள் நிகழுமானால், இதை எப்படி கண்டும், காணாமல் இருக்க முடியும். இதன் காரணமாகவே எதிர்வினையாற்றுகிறோம். யார் மீதும் எங்களுக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

krishna
ஜன 04, 2026 22:13

SEEMAN SONNADHIL ENNA THAVARU.ADHARKK7 BADHILILLAMAL KURUMA ENNAMO.ULARUVADHU KEVALAM.


V Venkatachalam, Chennai-87
ஜன 04, 2026 21:55

கண்டு படிச்சேன் கண்டு புடிச்சேன் அரசியல் யுக்தியை கண்டு புடிச்சேன். அது சரி குருமா பண்றதை நாம் கண்டு புடிச்சோம். அதுதான் குருமாவின் அரசியல் குயுக்தி. சைமன் அரசியல் யுக்தியை பண்ணட்டுமே அதுனால என்னா ஆயிடும். குருமா பயப்படாமல் இருப்பது குருமாவுக்கு நல்லது. மரக்காணம் முதல் கூவத்தூர் வரை முன்பு குருமா படம் தான் நிறைய இடங்களில் இருக்கும். இப்போ அந்த இடத்தில் எல்லாம் ஆக்டர் விஜய் படம் இருக்கு. குருமா போட்ட பாடிகாட் ஐ ஒடச்சி போட்டுட்டு ஆக்டர் விஜய்க்கு கொடி புடிக்க போய்ட்டானுங்க. முதல்ல குருமா அதை போய் கவனிக்கணும்.


T.Senthilsigamani
ஜன 04, 2026 19:20

ஈவெராவின் நிலைப்பாடுகளில் முன்னுக்குப்பின் சில முரண்கள் காணக்கூடியதாக இருக்கலாம். சபாஷ் திருமாவளவன் - அது என்ன என்ன என இப்போதாவது தெரியும்மா ? தெரியாதா ? பெரியாரின் முரண்பாடுகள் அல்ல இது பெரியாரின் உண்மை முகமே இது - பெரியார், வெள்ளையர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்ததை ஆதரிக்கவில்லை . சுதந்திர தினத்தை "கருப்பு தினமாக" அனுசரிக்கவும் செய்தார். திருக்குறளை தங்க தட்டில் வைக்கப்பட்ட மழம் என்றார் .தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார் . பகுத்தறிவை வளர்க்க விநாயகர் சிலைகளை உடைத்தார் .1960-இல் தமிழக முதல்வர் காமராசர் அமைச்சரவையில் இருந்த கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் உயர்நிலைக் கல்வியில் தமிழைப் பாட மொழியாகக் கொண்டு வர அறிவிப்பு செய்தபோது, அதைப் பெரியார் மிக மிக கடுமையாக எதிர்த்தார். தமிழைப் பாட மொழியாக அறிவிக்கக் கோரியவர்களைத் தாய்ப்பால் பைத்தியங்கள் என்று வசை பாடினார் இது வரலாற்று பதிவு . அது மட்டும் அல்ல ,இந்தியத் தேசியம் என்பதே ஓர் ஏமாற்றுச் சொல் - அபாயகரமான சொல் என்ற கருத்தில் பெரியார் மிக மிக தெளிவாக இருந்தார்.இவரை பெரியார் என அழைப்பதே பாவம்


mindum vasantham
ஜன 04, 2026 18:44

சீமான் தமிழால் இணைக்கிறார்


naranam
ஜன 04, 2026 18:36

ஈவேரா வீரமணி திருமா ஸ்டாலின் ஆகியோர் அணிவகுத்து நிற்கின்றனர்..


ratnam
ஜன 04, 2026 18:24

எனக்கு ஓம்மேலத்தான் சந்தேகம்…


Venkatesan Ramasamay
ஜன 04, 2026 18:05

திருமாவளவன் தேர்தலுக்கு பிறகு ...


பேசும் தமிழன்
ஜன 04, 2026 17:57

அதை தானே அடுத்தவர்களும் செய்வார்கள்..... அவர்களை பற்றி தவறாக பேசினால்.... பதிலடி கொடுக்கத் தானே செய்வார்கள் ?


SUBBU,MADURAI
ஜன 04, 2026 17:47

இந்த திருமா வர வர கமலைப் போலவே பேச ஆரம்பித்து விட்டார்.அநேகமாக விரக்தியில் இருப்பார் போல தெரிகிறது. திருமாவளவனின் சமீபத்திய பேச்சுக்கள் நடவடிக்கைகள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கிறது. ஒரு சமயம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று பேசுகிறார் அப்றம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விட்டு வந்த பிறகு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பது விசிகவின் முழக்கம் ஆனால் அதுவே எங்கள் நோக்கமல்ல என்று ஒரு புரியாத விளக்கத்தை தருகிறார். எங்களுக்கு கொள்கைதான் முக்கியம் தொகுதிகள் அல்ல என்றவர் சில நாட்களுக்கு முன் அதிக தொகுதிகள் கேட்டு திமுகவுடன் சண்டை போடுவோம் என்கிறார்.


nagendhiran
ஜன 04, 2026 17:28

சீமனை கூட நம்பிடலாம்? உன்ன மாதிரி ஆளுங்களைதான் நம்ப முடியாது?


புதிய வீடியோ