உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை: திமுக கூட்டணியில் திருமாவின் திருவிளையாடல்

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை: திமுக கூட்டணியில் திருமாவின் திருவிளையாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛கூட்டணியில் இருக்கணும், ஆனா இருக்கக் கூடாது'' என்ற ரீதியில் செயல்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் திருவிளையாட்டு எந்த அளவுக்கு எடுபடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.‛‛கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு தர வேண்டும்'' என்று கொளுத்திப் போட்டு திமுக கூட்டணியில் முதன்முதலில் புகைச்சலை ஏற்படுத்தினார் திருமா. அதைத் தொடர்ந்து அவரை முதல்வர் ஸ்டாலின் அழைத்துப் பேசியதும், தனது கருத்தில் இருந்து ஜகா வாங்கினார்.ஆனால் தனது தம்பிகளுக்கு வேறு அறிவுரைகளை வழங்கி விட்டோரோ என்று எண்ணும் வகையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என்று கோவையில் வி.சி., தம்பிகள் போஸ்டர் ஒட்டினர். இதற்கு திருமா எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. கோவை தம்பிகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கோவை தம்பிகளின் கருத்து, திருமாவின் மறைமுக கருத்து தான் என்று திமுகவினர் நம்ப துவங்கினர்.புகைச்சல் ஓரளவு தணிந்துவிட்டதோ என்று திமுகவின் மற்ற கூட்டணி கட்சியினர் நினைத்துக்கொண்டு இருக்க, மீண்டும் இன்னொரு வெடியை கொளுத்திப் போட்டார் வி.சி., துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா. ஒரு கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு கூட்டணியின் மற்ற கட்சிகளின் பங்கு இருக்கும்போது, அதிகாரத்தில் ஏன் பங்கு தரக் கூடாது. ஆந்திராவில் சந்திரபாபு அப்படி பங்கு கொடுத்திருக்கிறாரே என்று ஆதவ் கேள்வி எழுப்பினார்.இதனால் எரிச்சல் அடைந்த திமுகவை லேசாக சமாதானப்படுத்துவதற்கு வி.சி., எம்பி ரவிக்குமாரை ஒரு அறிக்கை விட வைத்து, அதில் ஆதவை கண்டிப்பது போல் கண்டிக்க வைத்தார் திருமா. ‛‛ஆதவை கண்டிக்காவிட்டால் அடுத்த முறை சீட் வாங்குவதற்கு ஆபத்து வந்துவிடக் கூடாது'' என்று ரவிக்குமார் பதறுகிறார்.இதை எல்லாம் மற்ற கூட்டணி கட்சிகள் ஆர்வத்துடன் கவனித்து வந்தன. வி.சி.,க்கு ஏதாவது அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் தாங்களும் அதை வைத்து பங்கு கேட்கலாமே என்பது அக்கட்சிகளின் எண்ணம்.இந்நிலையில் இன்று (செப். 25) பேட்டி அளித்த திருமா, திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. விரிசல் எழாது. ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கப்படும்'' என்று திமுகவுக்கு வலிக்காமல் பேட்டி கொடுத்திருக்கிறார்.இது பற்றி அரசியல் நிபுணர்கள் கூறும்போது, ‛‛அடுத்த தேர்தலை மனதில் வைத்து கல்லை எறிந்து பார்க்கிறார் திருமா. அதே நேரம், திமுகவுடன் மோதுவது போல் பாவ்லா காட்டி, அதிமுக கூட்டணியிலும் துண்டு போடுகிறார். திருமாவுக்கு திமுக கூட்டணியும் வேண்டும் அதிமுக கூட்டணியும் வேண்டும் என்பது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல் இருக்கிறது. சட்டசபை தேர்தல் நெருங்கும் போது தான் ஜெயிப்பது கூழா மீசையா என்று தெரியும்'' என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Raa
செப் 25, 2024 19:23

அழிஞ்சுபோகவேண்டியது.எங்கிருந்து அழிஞ்சாலும் பிரச்னை இல்லை.


VENKATASUBRAMANIAN
செப் 25, 2024 19:06

இவர்களை இன்னுமா மக்கள் நம்புகின்றனர். காசுக்கு ஓட்டு போட்டால் இப்படித்தான் நடக்கும்.மக்கள் சிந்திக்க வேண்டும்


இசக்கிமுத்து,தூத்துக்குடி
செப் 25, 2024 19:25

ஒன்றிய மோடி அரசு தமிழகத்தில் மது விற்பதை நிறுத்தும் வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையிலான அவரது கட்சியின் மகளிரணியின் சாராய பாட்டில் உடைப்பு,மது ஒழிப்பு போராட்டம் தொடரும்!


nagendhiran
செப் 25, 2024 18:49

ஒட்டு திண்ணையா?


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
செப் 25, 2024 19:30

திமுககாரனுக குருமாவின் மீசையை எடுத்து விட போறானுங்க ஆனானப்பட்ட எம்ஜிஆரையே ஒரு கை பார்த்தவனுகளுக்கு இந்த பிசாத்து திருமா எம்மாத்திரம் கூடிய விரைவில் திருமா கட்சி இரண்டு அல்லது முன்று துண்டுகளாக உடைய வாய்ப்பிருக்கிறது.


கமலாபதி
செப் 25, 2024 17:47

எல்லாம் புட்டினையும், ஜெலன்ஸ்கியையும் கட்டிப்புடிக்கிற அரசியல்தான்.


Rajarajan
செப் 25, 2024 17:45

ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்.


sundaran manogaran
செப் 25, 2024 17:24

தமிழகத்தில் நடப்பது அரசியல் வணிகம் அதில் மூலதனம் மக்களின் அறியாமை.கட்சிக்கம்பெனிகள் லாப நட்ட கணக்கு பார்ப்பதும் முதலாளிகளின் குடும்பத்தினர்வழி வழியாக பதவிக்கு வருவதும் இயல்புதான்.இதை ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகின்றன.அவ்வளவே...இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை


sankaranarayanan
செப் 25, 2024 17:10

இரண்டுமே வேண்டாம் பேசாமல் பாஜாபாவுடம் அகில இந்தியாவில் உள்ளதுபோன்று வி.சி. கவும் கூட்டு சேர்ந்தால் நிச்சயம் தமிழகத்தில் முதல்வர் ஆகுவதற்கு வாய்ப்புகள் அதிகள். இல்லையேல் இந்த ஜென்மத்துக்கு அமைச்சரோ அல்லது துணைமுதல்வரோ அல்லது முதல்வர் பதவியோ நினைத்தும் பார்க்கவே வேண்டாம் வேண்டாம்


sridhar
செப் 25, 2024 18:50

ஏற்கனவே திமுகவோடு ஒரு முறை கூட்டு வைத்த தவறு போதும், vck ஒரு ஜாதிய விஷம் , வேண்டவே வேண்டாம் .


Lion Drsekar
செப் 25, 2024 17:10

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் ,,, இதனை பள்ளியில் படிக்கும்போது மதிப்பெண் பெருவத்ற்காக படிக்கும் குழந்தைகள் வளர்ந்த பின்பு நேர்மாறாக இவ்வையத்தில் இயங்க வேண்டிய ஒரு கால நிலை, வந்தே மாதரம்


Ms Mahadevan Mahadevan
செப் 25, 2024 16:52

வளர்த்த கிடா மார்பில் பாயும். ஜாதிய, மதவாத கட்சிகளை வளர விட்டதன் பலன் அதிக கட்சிகள் இருப்பது நாட்டுக்கும் ஜனநாயகத்திற்கும் கெடு. எல்லா கட்சிகளும் 2026 இல் தனித்து போட்டி போட்டு பார்க்கட்டும். 20 சதவீத வாக்கு பெறாத கட்சிகள் அரசியலை விட்டே விலகிவிட வேண்டும். தனித்து போட்டி இட தைரியம் இல்லாதவர்கள் தலைவன் என்று சொல்ல லாய்க்கற்றவர்கள்


கூமூட்டை
செப் 25, 2024 16:42

இது தான் கூமூட்டை ஊசிப்போன குருமா மற்றும் சுண்டல் மாடல் மக்கள் மாங்காய் மடையர்கள் மாடல்


புதிய வீடியோ