திருப்பரங்குன்றம் தீர்ப்பு-
நாம் செய்த புண்ணியம் –ரமணன், மாநில துணை பொதுச்செயலாளர், இந்து மக்கள் கட்சி உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இப்பிரச்னைக்காக உயிர் நீத்தவர்களின் தியாகம் வீணாகவில்லை. வழக்கு தொடுத்தவர்கள், போராட்டம் செய்தவர்கள், உறுதுணையாக இருந்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி. ஹிந்துக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் நாளாக இந்த தீர்ப்பு நாள் அமைந்துள்ளது. சனாதான தர்மத்துக்கு கிடைத்த வெற்றியாகவே இது அமைந்துள்ளது. திருப்பரங்குன்றத்து தீபத்தை காண்பது நாம் செய்த புண்ணியமாகும். தொன்மையை பாதுகாப்போம் –குணசேகரன், மாநில ஊடகப்பிரிவு செயலாளர், இந்து மக்கள் கட்சி ஹிந்துகள் தங்கள் பாரம்பரிய வழிபாட்டு முறைகளை கூட போராடி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையின் தொன்மையை என்றும் பாதுகாக்கும் வகையில், ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும். தீபம் ஏற்ற உத்தரவிட்ட, மதுரை உயர்நீதிமன்றத்துக்கும், தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றத்துக்கும் ஹிந்துக்கள் கடமைப்பட்டுள்ளோம். வேண்டுதலுக்கு கிடைத்தது வெற்றி –சக்திவேல், ஹிந்து சாம்ராஜ்யம் நிறுவனர் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி கிடைத்துள்ளது ஹிந்து மக்களின் வேண்டுதலுக்கு கிடைத்த வெற்றியாகும். நலிந்தோருக்கும் எளிய மக்களுக்கும், சட்டத்தின் அடிப்படையில் நீதி கிடைத்தே தீரும். சட்டத்தின் வலிமையையும் நீதியின் மாண்பையும் இந்த நிகழ்வு மீண்டும் உணர்த்தியுள்ளது.