உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம்: விசாரணையை துவக்கியது சி.பி.ஐ.,

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம்: விசாரணையை துவக்கியது சி.பி.ஐ.,

சென்னை: திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீசார் விசாரணையின் போது மரணமடைந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது. விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி., மோகித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் காளி கோவில் காவலாளி அஜித்குமார், 30; பேராசிரியை நிகிதாவின் நகை மாயம் குறித்த புகாரில் தனிப்படை போலீசாரால் விசாரிக்கப்பட்ட போது இறந்தார். கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, போலீசார் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், தனிப்படை வாகன டிரைவர் ராமச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் பிஎன்எஸ்., சட்டப்பிரிவு 103 ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த சட்டத்தின்படி, கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

விசாரணை அதிகாரி நியமனம்

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி., மோகித்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நாளை மதுரை வந்து, திங்கட்கிழமை முதல் விசாரணையை துவக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூலை 12, 2025 20:04

இந்த வழக்கு முடிவுக்கு வந்து, குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு முன்பு மேலும் இதுபோன்று பல அக்கிரமங்கள், அட்டூழியங்கள், அராஜகங்கள் தமிழகத்தில் நிறைவேறும். யாராவது மறுக்கிறீர்களா?


Chandru
ஜூலை 12, 2025 17:02

All the best Shri. Mohit Ji. Tamilnadu is expecting a exceptional investigation from your team. Prove to the world that CBI is smarter than TN police and bring out in the glaring lapses. Bharat Mata ki Jai


SUBBU,MADURAI
ஜூலை 12, 2025 16:02

அண்ணா பல்கலை கழக மாணவி திமுக ரௌடியால் கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட போது சிபிஐ விசாரனையை தடுக்க உச்சநீதிமன்றம் வரை சென்று பீடா வாயன்களான வடக்கன்ஸ் வக்கீல் கபில்சிபல் அபிஷேக் மனு சிங்வியை வைத்து வாதாடிய திமுக இந்த அஜித்குமார் மரணத்திற்கு மட்டும் உடனே சிபிஐ விசாரனைக்கு ஒத்துக் கொண்டது ஏன்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை