உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெரிய இடம் கொடுத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது: தேஜ கூட்டணி எம்பிக்கள் குழு பேட்டி

பெரிய இடம் கொடுத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது: தேஜ கூட்டணி எம்பிக்கள் குழு பேட்டி

கரூர்: '' விஜய் பிரசாரத்துக்கு பெரிய இடம் கொடுத்து இருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது,'' என கரூரில் தேஜ கூட்டணி எம்பிக்கள் குழு நிருபர்கள் சந்திப்பில் ஹேமமாலினி தெரிவித்தார்.கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவினர் ஆய்வு செய்தனர். ஹேமமாலினி தலைமையிலான அக்குழுவினர், அப்பகுதி மக்களிடம் சம்பவம் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். பின்னர் தே.ஜ., கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவினர் கூட்டாக நிருபர்களை சந்தித்து பேசினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lc5visdh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது தே.ஜ., கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவில் உள்ள பாஜ., எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் சம்பவத்தின் போது போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை அரசு விளக்க வேண்டும். சம்பவ இடத்திற்குச் சென்றபோது எங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரிய இடம் ஒதுக்கியிருந்தால் இது நடந்திருக்காது. எங்கள் அறிக்கையை வார இறுதிக்குள் பாஜ தலைமையிடம் அளிப்போம். 300 பேர் நிற்க முடியாத இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். ஏற்பாட்டாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். பணியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.குழுவின் தலைவர் பாஜ எம்பி ஹேமமாலினி நிருபர்களிடம் கூறியதாவது: என்ன நடந்தது என்ற அனைத்து தகவல்களையும் சேகரித்து உள்ளோம். பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயம் இல்லை. விஜயை பார்க்கவே பெண்கள், சிறுமிகள் என பலரும் வந்துள்ளனர். பெரிய இடம் கொடுத்திருந்தால் இது நடந்திருக்காது. கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினோம். அரசியல் வரலாற்றில் இது போன்ற விபத்து இதுவரை நடந்ததில்லை. தவெகவினர் சிறிய இடத்தை கேட்டிருந்தாலும் அரசு பெரிய இடத்தை தந்திருக்க வேண்டும். இவ்வாறு ஹேமமாலினி கூறினார்.

கார் விபத்து

கரூர் செல்வதற்காக தேஜ எம்பிக்கள் குழு விமானம் மூலம் கோவை வந்தடைந்தது. அங்கிருந்து கரூருக்கு காரில் எம்பிக்கள் குழுவினர் சென்றனர். அப்போது, கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியது. ஹேமமாலினி சென்ற காரின் முன்பகுதி லேசாக சேதம் அடைந்தது.யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து அதே காரில், ஹேமமாலினி கரூருக்கு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sun
செப் 30, 2025 20:04

அரசு, விஜய் தரப்பு இரண்டு தரப்பிலும் தவறு உள்ளது. உடனடி தவறு விஜய் மீதுதான். வேண்டுமென்றே கூட்டத்தை அதிகம் காண்பிக்க லேட்டாக வந்தது. ஏற்கெனவே அதே இடத்தில் நடந்த அரசியல் கட்சி கூட்டத்தை விட தனக்கு தான் அதிக கூட்டம் என மக்களிடையே காண்பிக்க நினைத்தது ,வந்த மக்களுக்கு தண்ணீர் கூட தராதது, கூட்டம் அதிகம் உள்ள சூழ்நிலையில் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் நடக்காதது. சினிமாவில் முதல் என்ட்ரி கொடுப்பது போல் வெகு நேரம் காத்திருந்த மக்களிடையே கடைசி நேரத்தில் திடீரென எழுந்து முகத்தை காண்பித்தது. இதுதான் மக்கள் முண்டியடிக்க முக்கிய காரணம். அரசு தரப்பு கூட்டம் அதிகம் வரும் என கணிக்காமல் இந்த இடத்தை கொடுத்தது. அதிக கூட்டம் சாயந்தரம் இருந்த போதே போலீஸ் உஷார் ஆகி இருக்க வேண்டாமா? உளவுத் துறை இதையெல்லாம் கணிக்க வேண்டாமா?


sundarsvpr
செப் 30, 2025 18:20

தமிழ்நாட்டின் தலைமை அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வருகை இருந்தால் கூட்டம் குறைவாய் இருக்கும் என்று அறிந்தாலும் தேவைக்கு மேல் காவல் பணியாளர்கள். ஆனால் விஜய் ஜோசப்பிற்கு பெரிய கூட்டம் வரும் என்பது தெரிந்தும் போதிய பாதுகாப்பு வழங்க இயலாது என்றால் அரசு வெட்கப்படாமல் மறுத்து இருக்கவேண்டும். இதுதான் திறனுள்ள அரசு. விஜய் ஜோசப் நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறலாம். கூட்டம் நடுத்துவர்களுக்கும் தார்மீக பொறுப்பு உண்டு.


VENKATASUBRAMANIAN
செப் 30, 2025 18:17

முட்டாள்தனமாகசிலர் மெரினாவில் கொடுக்க வேண்டுமா என்று கேட்கிறார். எதற்காக இந்த இடத்தை கொடுத்தார்கள். விஜய்க்கு 10000 பேர் மட்டுமா வருவார்கள். கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா. மேலும் செருப்பு கல் வீசியது விஜய் ரசிகர்களா. இதிலிருந்து எவ்வாறு சதி வேலை நடந்துள்ளது என்ற எண்ண தோன்றுகின்றது. விஜய் பலி கடா ஆக்கப்பட்டுள்ளார்.இதற்கு போதிய அரசியல் அனுபவம் இல்லை. திமுக விடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்


கனோஜ் ஆங்ரே
செப் 30, 2025 18:01

////பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயம் இல்லை.-/// நீ நடிகைதானே... அதுதான் நடிகருக்கு சிறிய சாலை ஒதுக்கியது பத்தி பேசுற...? ஏன், ஒண்ணு செய்வோமே... சென்னை மெரீனா பீச் கொடுக்கலாமா...? இவர் பெரிய சுதந்திர போராட்ட தியாகி, சுதந்திரத்துக்காக தூக்கு கயிற்றை முத்தமிட்ட தியாகி, விடுதலைக்காக தன் சொத்து எல்லாத்தையும் இழந்து கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்த செக்கிழுத்த செம்மல்... இதுவே கூத்தாடி.. இதுக்கு சப்போர் இந்த கூத்தாடி...? இனம் இனத்துக்குத்தானே சப்போர்ட் பண்ணும்...


RAMESH KUMAR R V
செப் 30, 2025 17:04

எல்லாம் அந்த இறைவனுக்கே வெளிச்சம்


நல்லவன்
செப் 30, 2025 16:54

The situation is under control by BJP ... They vl handle... Better u TVK just listen ur " Kolgai ethiri" ....u TVK fools ... Better get rid of politics... Team of jokers


முருகன்
செப் 30, 2025 16:32

பெரிய இடம் என்றால் மெரினாவில் தான் கொடுத்து இருக்க முடியும் ரோடு ஷோ நடந்த முடியாது இதுக்கூட தெரியாமல்


என்னத்த சொல்ல
செப் 30, 2025 16:21

roadshow சாலையில் தான் நடத்துவார்கள். அந்த இடம் தமக்கு பத்தாது என்றல், வேண்டாம் என மறுத்திருக்கலாமே. விஜயை தொடர்ந்து எல்லா முன்னாள் பாயிண்ட்-ல இருந்து பின் தொடர்த்திக்கங்க. அண்ணாமலையிடம் மட்டும் விசாரிக்காமல், எல்லோரிடமும் விசாரித்து சொல்லவும்.


ஆரூர் ரங்
செப் 30, 2025 16:08

பெரிய இடம்? பெரிய இடமாகக் கொடுத்திருந்தால் கூட்டம் சிறியதாக தெரிந்திருக்கும். பெரிய கூட்டத்தைக் காண்பித்தால்தான் சிறிய கட்சி பெரிய கட்சியாகும். இதெல்லாம் பெரிய அரசியல் தந்திரம். உங்கள் கட்சி பெரிய இடத்தைக் கொடுத்தால் ஒப்புக் கொள்ளுமா?


Priyan Vadanad
செப் 30, 2025 15:33

அடி சக்கே. கரெக்ட்டா பிடிசிட்டாங்கப்பா. யாருக்குமே இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை .


புதிய வீடியோ