உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் அரசியலில் இது அவசியம் இல்லாதது; விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு குறித்து சீமான் பதில்

மக்கள் அரசியலில் இது அவசியம் இல்லாதது; விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு குறித்து சீமான் பதில்

திருவண்ணாமலை: விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''மக்கள் அரசியலில் இது அவசியம் இல்லாதது'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார்.நடிகர் விஜய்க்கு, மத்திய அரசு வழங்கிய 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அமலுக்கு வந்தது. இது குறித்து நிருபர்கள் கேள்விக்கு சீமான் அளித்த பதில்: தம்பிக்கு தேவைப்படுகிறது. அவர் கேட்டு பெற்று இருக்கிறார். எனக்கு தேவைப்படவில்லை. நான் நினைப்பேன். இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் நான் தான் பாதுகாப்பு. எனக்கு எதுக்கு பாதுகாப்பு. நான் என் தம்பி, தங்கச்சியை சந்திக்கிறேன். மக்கள் அரசியலில் இது அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இது ராணுவ அரசியலுக்கு தான் தேவை.மக்கள் அரசியலில், புகைப்படம் எடுத்து கொள்ளலாமா என்று கேட்பார்கள். அவர்களுக்காக தான் வேலை செய்ய வந்திருக்கிறோம். மண்ணை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் மனதை வெல்ல வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.புதிய பா.ஜ., மாநில தலைவர் நியமன செய்யப்பட உள்ளது என்கிறார்கள் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'அது அவர்கள் கட்சி. அவர்களது கட்சி தலைமை முடிவு எடுக்கும். எல்லாத்திலும் கருத்து சொல்லுங்கள் என்று கேட்டு கொண்டு இருக்க கூடாது. அது அவர்கள் கட்சி. அவர்கள் தலைமை முடிவின் படி இயங்குவார்கள்' என சீமான் பதில் அளித்தார். நிருபர்: த.வெ.க.,வினர் போராட்டத்தில் சட்டத்தை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரியவில்லை. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்?சீமான்: எல்லோருக்கும் எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அது தவறு. எதிராக போராட வேண்டும் என்ற உணர்வு மதிக்கதக்கது. நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கே ஏதும் தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Murugesan
ஏப் 05, 2025 20:18

மண்டையில மூளையற்ற தகுதியற்ற கூத்தாடிக்கு மக்களின் பணத்தில பாதுகாப்பு தேவையில்ல,


தத்வமசி
ஏப் 05, 2025 20:02

இப்படி பார்த்தால் லட்டர் பேடு கட்சிகள் எதற்கு ? பெரிய கட்சியிடம் ஒட்டிக் கொண்டு, காசு வாங்கிக் கொண்டு, ஓட்டைப் பிரித்து வெற்றி பெற வேண்டியவர்களை தோற்கடிப்பது, டோல்கேட்டை உடைப்பது, வசூல் செய்வது, வாயைத் திறந்தால் புரட்டு, புளுகு என்று மேடை எங்கும் முழங்குவது.. இது தானே வேலை. இவைகளையும் நீக்கச்சொல்லி சொல்லலாமே சீமான் ?


Mediagoons
ஏப் 05, 2025 19:47

தமிழகத்தை ஆக்கிரமிக்கும் முயற்சி.பா.ஜ.,வுக்கு விஜய் ஒரு கேடயம்


Yaro Oruvan
ஏப் 05, 2025 21:04

ஹா ஹா மாம்ஸ்.. நாய்க்கு எங்க அடிபட்டாலும் காலைத்தான் நொண்டும் .. நம்ம கான்+கிராஸ் கும்பலுக்கு எங்க அரிச்சாலும் அதுக்கு பாஜக தான் காரணம்பானுவ


சிட்டுக்குருவி
ஏப் 05, 2025 19:21

சீமானின் கருத்து வரவேற்கத்தக்கது .மக்களுக்காக உழைக்க வரும் உங்களுக்கு மக்களே தான் .பாதுகாப்பு .மத்திய அரசு வழங்கும் எல்லா பிரிவு பாதுகாவலுக்கும் பாதுகாப்பு கேட்பவரே எல்லாவித செலவினங்களை பார்த்துக்கொள்ளவேண்டும் .மக்கள் வரிப்பணத்தில் கூடாது .


K.Ramakrishnan
ஏப் 05, 2025 18:50

அதாவதுங்க... அரசியலுக்கு ஏன் அறிவு? முட்டாள்களின் கூடாரமே அரசியல் தானே.. அதனால் விஜய் கட்சிக்காரங்களுக்கு அறிவுக்கூர்மை இல்லை என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார் சீமான். மண்ணை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் மனதை வெல்ல வேண்டும் என்றும் சொல்கிறார். இவர் மண்ணையும் வெல்லப் போவதில்லை. மக்கள் மனதையும் வெல்லப்போவதில்லை. அதனால்தான் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கிறார்.


GMM
ஏப் 05, 2025 17:31

விஜய்க்கு மாநில போலீஸ் பாதுகாப்பு போதும். ரசிகர்கள் போதும். ஜெயாவை தனி பாதுகாப்பு வளையத்தில் வைத்து தான் சசி குரூப் ,


அரவழகன்
ஏப் 05, 2025 17:12

அண்ணன் எத்தனையோ பெரிய பிரச்னைகளை சந்தித்தாலும் ஒரு பாதுகாப்பு தர மனசில்லை பா.ஜ.க.வுக்கு


முக்கிய வீடியோ