உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது எங்கள் உட்கட்சி விவகாரம்: அன்புமணி சொல்வது இதுதான்!

இது எங்கள் உட்கட்சி விவகாரம்: அன்புமணி சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''இது எங்கள் உட்கட்சி விவகாரம். எங்களுக்குள் பேசிக்கொள்வோம்'' என தலைவர் பதவி நீக்கம் குறித்து நிருபர்கள் சந்திப்பில் பா.ம.க.,வின் அன்புமணி தெரிவித்தார்.பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக, கடந்த 10ம் தேதி ராமதாஸ் அறிவித்தார். அத்துடன் 'இனி நானே தலைவராக செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராக இருப்பார்' என்றார். இது, கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பேசிய ராமதாஸ், 'நல்லதே நடக்கும்' என்று கூறியது, அவர்களுக்கு மன நிம்மதியை தந்துள்ளது. ஆனாலும், அவரின் மகன் முரண்டு பிடிப்பதால், கட்சி நிர்வாகிகள் மீண்டும் சமரச முயற்சியை தொடர்ந்துள்ளனர்.இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பகுதியில் மே 11ம் தேதி பாமக சார்பில் சித்திரை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து அன்புமணி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.பின்னர், நிருபர்கள் சந்திப்பில் பா.ம.க., தலைவர் பதவி விவகாரம் குறித்து நிருபர்கள் சந்திப்பில் அன்புமணி கூறியதாவது: இது எங்கள் உட்கட்சி விவகாரம். எங்களுக்குள் பேசிக்கொள்வோம். ராமதாஸ் வழிகாட்டுதலுடன் அவரது கொள்கைகளை நிலைநாட்டவும், பா.ம.க.,வை ஆளும் கட்சியாக மாற்றவும் அனைவரும் சேர்ந்து உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஏப் 14, 2025 12:38

உள்கட்சியில் விவகாரத்தை வைத்துக்கொண்டு, மக்கள் விவகாரத்தை எப்படி தீர்ப்பீர்கள், ஒருவேளை நீங்கள் ஆட்சிக்கு வந்தால்?


Vasan
ஏப் 14, 2025 12:19

US President Trump should intervene and resolve this conflict between the 2 Doctors of PMK, before this becomes a global issue.


KRISHNAN R
ஏப் 14, 2025 11:20

அப்போ இது அரசியல் அமைப்பு.. இல்லை என்று வருமா


Oviya Vijay
ஏப் 14, 2025 11:06

பாமக எந்தக் காலத்திலும் தமிழக ஆட்சிக் கட்டிலில் அமரப் போவதே இல்லை என்று சொல்வதைக் காட்டிலும் தமிழக மக்கள் அவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தப் போவதேயில்லை என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்... பாமக என்றால் தமிழக மக்கள் மனதில் பதிந்தது என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் இருக்கும் ஒரு ஜாதிக் கட்சி... மரம் வெட்டும் ஒரு கிரிமினல் கும்பல்... அவ்வளவே... இந்த லட்சணத்தில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவிக்கப் பட்ட போது இதே மகன் தன் தந்தைக்கு கண்ணீர் மல்க போன் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்ததாக ஒரு ட்ராமா வீடியோ இன்றளவும் நம் கண் முன்னே வந்து போகிறது... தன் சமூகத்தினரை ஏமாற்ற போடப்பட்ட நகைச்சுவை ட்ராமா அது... அதுக்கு வெச்சான் பாரு ஆப்பு என்பதைப் போல சுப்ரீம் கோர்ட் அந்த உத்தரவை ரத்து செய்தது... இனிமேலும் தமிழகத்தில் இந்த கட்சியினரை திருப்திப் படுத்தும் நோக்கில் அவ்வாறு இட ஒதுக்கீடு வேறு எந்தக் கட்சியேனும் இவர்களுக்கு வழங்கினாலும் மீண்டும் அதனை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்யுமேயன்றி ஒருநாளும் இவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு ஒத்துக் கொள்ளாது... எத்தனை காலம் ஆனாலும் மற்ற கட்சிகளைச் சார்ந்திருந்து பெட்டிகள் வாங்கிக்கொண்டு காலம் தள்ளலாமேயன்றி என்றைக்கும் முதல்வர் பதவி என்பது பாமகவிற்கு எட்டாக் கனி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை...


RAMAKRISHNAN NATESAN
ஏப் 14, 2025 09:32

உள்கட்சி விவகாரம், ஊட்டு விவகாரம் ன்னா ஏன் சந்திக்கு வருது ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை