உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது தான் திராவிட மாடலா: தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

இது தான் திராவிட மாடலா: தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

சென்னை: சத்துணவில் புழு நெளிவதால் உண்ண முடியவில்லை என்று ஏழை குழந்தை கூறும் நிலையில் இது தான் திராவிட மாடலா, என்று மாநில பா.ஜ., தலைவர் நயினார் நகேந்திரன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.கள்ளக்குறிச்சியில் உள்ள அரசுபள்ளியில் பயிலும் ஏழை குழந்தை, தான் வாங்கிய சத்துணவில் புழு, பூச்சி இருப்பதால் அதை எடுத்துப்போட்டாலும் திரும்ப,திரும்ப வருகிறது. இது பற்றி என்னுடைய பெற்றோரிடம் சொல்லியபிறகு அவர்கள் வந்து சம்பந்தபட்டவர்களிடம் கூறியபிறகும் பூச்சியாக உள்ளதாக கூறும் வீடியோவை நயினார் நாகேந்திரன் பகிர்ந்துள்ளார்.https://x.com/NainarBJP/status/1934924105649934740அவரது அறிக்கை:“தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடிய பாரதி பிறந்த மண்ணில், இன்று “சத்துணவில் புழு நெளிவதால் உண்ண முடியவில்லை” என ஒரு ஏழை வீட்டுக் குழந்தை மழலை மொழியில் புலம்புவது மனதை உலுக்குகிறது.ஏற்கனவே அடிப்படை வசதிகள் இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு அவலங்களால் தமிழக அரசுப்பள்ளிகள் சீரழிந்து கிடக்க, சத்துணவிலும் ஊழல் செய்து படிக்கும் பிள்ளைகளின் வயிற்றில் அடிப்பது கடும் கண்டனத்திற்குரியது.இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
ஜூன் 18, 2025 11:44

பிள்ளைகளுக்கு சைனீஸ் உணவு அளிக்கக் கூடாதா? அடுத்து வவ்வால் சூப்?.


ஆரூர் ரங்
ஜூன் 18, 2025 11:43

சனிக்கிழமை அமாவாசை போன்ற தினங்களில் சத்துணவு முட்டை சாப்பிட வேண்டாம் என பெற்றவர்கள் கூறி அனுப்பி விடுகின்றனர். இதனால் காண்டான திராவிஷ ஆட்கள் புழு பூச்சிகளின் மூலம் சத்துக்கள் கிடைக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில் செயல்படக்கூடாதா?


vivek
ஜூன் 18, 2025 11:04

அங்கே திருமா கழட்டிட்டு ஓட போறாரு.. இங்க நீ ரீல் விடுற


pmsamy
ஜூன் 18, 2025 07:59

பத்தாவது படித்து முடித்து இருந்தால் கேள்விகளுக்கு பதில் தெரிந்திருக்கும் பாவம்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 18, 2025 07:13

உண்மை ...


Bhaskaran
ஜூன் 18, 2025 06:52

அரசு தரும் நல்ல பொருட்களை ஆட்டையை போடும் சத்துணவு அமைப்பாளர்கள் துணைபோகும் அதிகாரிகள்


ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 17, 2025 20:38

அண்ணாமலே தனி ஆவர்த்தனம் பண்ணப் போறாராமே,


vivek
ஜூன் 18, 2025 05:43

பொய்.. இந்து உன்னை போல வாழ்நாள் கொத்தடிமையாக இருக்கணுமா


D.Ambujavalli
ஜூன் 17, 2025 18:21

இல்லாத வீட்டுப் பிள்ளைகள் தானே, எதை போட்டாலும் தின்றுவிட்டுப் போகாமல் நொட்டைச் சொல்வதா என்று நினைப்பு போலு. நாளை கெட்டுப்போன உணவினால் உடல்நிலை கெட்டுப்போனாலும், உயிரே போனாலும் என்ன கவலை இவர்களுக்கு?


சமீபத்திய செய்தி