உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நுகர்வோர் தேவை, முதலீட்டை ஊக்குவிக்க இதுவே சரியான தருணம்: ரிசர்வ் வங்கி

நுகர்வோர் தேவை, முதலீட்டை ஊக்குவிக்க இதுவே சரியான தருணம்: ரிசர்வ் வங்கி

புதுடில்லி:அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், நுகர்வோர் தேவை மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க, இதுவே சரியான தருணம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலை குறித்து, அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் மதிப்பீட்டின் படி, நடப்பு நிதியாண்டிலும் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ந்து மூன்று நிதியாண்டுகளாக 7 சதவீதத்துக்கும் கூடுதலான வளர்ச்சியைப் பதிவு செய்து வந்த நிலையில், இந்த நிதியாண்டில் வளர்ச்சி 6.40 சதவீதமாக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், பொருளாதாரம் எதிர்கொண்ட பல்வேறு சவால்களின் பிரதிபலிப்பே ஆகும். குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடுதல் மழை காரணமாக, விவசாயம் அல்லாத பிற தொழில்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, அரசு மற்றும் தனியார் மூலதன செலவினத்தில் ஏற்பட்டுள்ள சரிவு, தயாரிப்பு துறை முதலீட்டில் சரிவு ஆகியவை, ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதித்துஉள்ளது. சிறப்பான கரீப் பருவ சாகுபடி, வலுவான ராபி பருவ விதைப்பு ஆகியவற்றால், விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் நல்ல நிலையில் உள்ளன. இதனால், கிராமப்புற பொருளாதாரத்தின் கண்ணோட்டமும் முன்னேற்றம் அடைந்துள்ளது. நுகர்வோர் தேவை மற்றும் முதலீட்டை ஊக்குவித்து, பொருளாதாரத்தின் விலங்கு போன்ற வலிமையை கட்டவிழ்த்து விட, இதுவே சரியான நேரம். நுகர்வுக்கு ஊக்கமளிப்பது இதனை சாத்தியப்படுத்தும். நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில், நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சிப் பாதைக்கு திரும்புவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. கடந்த டிசம்பர் காலாண்டில் நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி, முந்தைய இரண்டு காலாண்டுகளைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை