உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலையில் இதை அனுமதிக்க கூடாது; ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்!

திருப்பரங்குன்றம் மலையில் இதை அனுமதிக்க கூடாது; ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் மலை மீது ஆடு கோழி மாடு பலியிடவோ, மலை மீது அசைவ உணவு கொண்டு செல்லவோ தடை விதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த மாதம் ராஜபாளையத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆடு, சேவலுடன் திருப்பரங்குன்றம் மலை மேல் செல்ல முன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஜன.,18ல் மலை மேல் தர்காவில் ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்கப் போவதாக சில முஸ்லிம் அமைப்பினர் மலையேற முயன்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ncihkqmi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்களையும் போலீசார் தடுத்தனர். இந்நிலையில், இன்று (ஜன.,28) ஐகோர்ட் மதுரைக் கிளையில் ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத்தலைவர் சோலை கண்ணன் வழக்கு தாக்கல் செய்தார். அவர், 'மதுரை திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் மலை மீது ஆடு கோழி மாடு பலியிடவோ,மலை மீது அசைவ உணவு கொண்டு செல்லவோ தடை விதிக்க வேண்டும். மலையின் பெயரை மாற்றக்கூடாது. மலையின் புனிதத்தை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார். ஏற்கனவே இது போல் நிலுவையில் உள்ள மற்றொரு வழக்குடன் சேர்த்து, பிப்.4ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

BALACHANDRAN
ஜன 29, 2025 08:35

இந்து அறநிலையத்துறை சட்டம் போட்டாலே போதுமே. எதுக்காக கோர்ட்


Tvkerin
ஜன 29, 2025 17:48

ஆனால் அறநிலையத்துறை செய்யாது


RAMESH
ஜன 29, 2025 06:13

.சிவன் சொத்து குல நாசம்....மதுரை மக்கள் வேடிக்கை பார்த்தது போதும்...இனியும் திராவிட மாடலை நம்ப வேண்டாம்


தத்வமசி
ஜன 28, 2025 21:55

பெரும்பான்மை சமுதாயம் இப்படி கையேந்தி நிற்க வேண்டிய அவலம் இந்தியாவில் மட்டும் தான். உலகில் வேறு எங்கும் கிடையாது.


subramanian
ஜன 28, 2025 19:06

நீதிபதிகள், நீதிமன்றம் , வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், முஸ்லிம் மக்கள், தீவிரவாதிகள் - நீங்கள் மனசாட்சி படி நடக்கவில்லை என்றால் அது உங்களுக்கு அழிவை ஏற்படுத்தும்.


Kasimani Baskaran
ஜன 28, 2025 14:42

மதக்கலவரத்தை உண்டுபண்ண ஒரு கூட்டம் தயாராகிவருகிறது. ஓட்டுக்காக திராவிடம் அதை அனுமதிக்கும் போல தெரிகிறது.


KumaR
ஜன 28, 2025 15:56

அத பன்னுறதே திருட்டு திராவிடம் தான். சிறுபான்மையர் ஓட்டு பிச்சைக்காக பண்ணிட்டு இருக்காங்க..


Thirumal Kumaresan
ஜன 28, 2025 14:35

திருப்பரங்குன்றம் மலை முருக பெருமானுக்கு சொந்தம் யாரும் உரிமை கொண்டாட விடமாட்டோம். பக்தர்களாக மட்டும் வரலாம்


Kannan
ஜன 28, 2025 14:22

இழுத்தடிக்காமல் விரைந்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.


Sudha
ஜன 28, 2025 14:15

இது இந்திய நாடு இந்துக்களும் இங்கே வசிக்கலாமே தவிர எதுவும் எதிர்பார்க்க கூடாது என்று தீர்ப்பு சொல்லுங்க


திகழ்ஓவியன்
ஜன 28, 2025 13:51

முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவில் மிகவும் பரபரப்பாக இருக்கும், பணக்கார கோயிலான ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் ஆறு பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். கோயிலில் இலவச தரிசனத்துக்கான அனுமதிச் சீட்டு வாங்க ஆயிரக்கணக்கான பேர் ஒன்று கூடியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உத்தரப் பிரதேசத்தின் பாக்பத்தில் ஜைன சமய விழாவில் தற்காலிக மேடை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். ஜைன மத சீடர்கள், காவலர்கள் உட்பட பலர் காயமடைந்தனர்.அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத் அரசை சாடியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக யோகி அரசு மதத்தின் பெயரால் ஒரு காட்சியை உருவாக்குகிறது, ஆனால் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் வசதிகளும் கிடைக்கவில்லை.கூட்டத்தை கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள், வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகள் செய்யப்படவில்லை அல்லது அதற்கான முன்னேற்பாடுகள் கூட செய்யப்படவில்லை. அதனால் தான் மத நிகழ்வுகளில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. ஊழலில் மட்டுமே ஈடுபட்டுள்ள யோகி, பாஜக அரசு இதனையெல்லாம் ஏன் பார்க்க மறுக்கிறது?. அவர்கள் வெட்கமின்றி ஒப்பாரி வைத்து கூச்சலிடுகிறார்கள், ஆனால் அவர்களின் முயற்சி வீணாகவே முடிகிறது.” என்று தெரிவித்துள்ளார்.


PR Makudeswaran
ஜன 28, 2025 15:11

ஏன் அரபு நாடுகளில் சாவும் இழவும் இல்லையா?எல்லா ஊரிலும் தான் இருக்கிறது. அங்கு போய் ஒப்பாரி வைக்க வேண்டாமா?


Ganesh Subbarao
ஜன 28, 2025 16:12

திமுக ராசு என்ன புடுங்கிச்சு? நேரடியா உபி, ஆந்திர தானா? கும்பமேளா எப்படி நடக்குதுன்னு பாரு கொத்தடிமையே


sridhar
ஜன 28, 2025 16:50

சின்ன பதிவு போட்ட்டாலே ரூ 200 கிடைக்குமே , எதற்கு இந்த சம்பந்தம் இல்லாத நீண்ட பதிவு .வேஸ்ட்.


sankarkumar
ஜன 28, 2025 18:35

ஒரு அளவா ஜால்ரா அடிப்பா கொத்தடிமை


தத்வமசி
ஜன 28, 2025 21:59

அண்ணா பல்கலைகழக விவகாரத்தை திசை திருப்ப ராமசாமி அவர்களை திட்டும் சீமானின் நாடகம் போலவா ? திருப்பரங்குன்றம் கோவில் மலையை காப்பதற்கு இயலாத அறநிலயத்துரையை கோர்ட்டார் கலைக்க வேண்டும்.


A1Suresh
ஜன 28, 2025 13:48

43 ஆண்டுகள் அரசாண்ட மதுரை சுல்தான்களில் எட்டாவது கொடுங்கோல் சுல்தானான அலாவுதீன் சிக்கந்தா ஷா என்பவனின் உடலைத்தான் திருப்பரங்குன்றம் மலையில் புதைத்ததாக சொல்கின்றனர். இவன் பெயரில் நாணயமும் வெளியிட்டிருக்கிறான். எனது கேள்வி யாதெனில் கொடுங்கோல சுல்தானின் கல்லறை கட்ட மதுரையில் வேறு இடமே இல்லையா? பல சுல்தான்களின் உடல்கள் தோண்டி வேறிடத்தில் அமைந்தது என வாசிக்கிறோம். உதாரணமாக முகலாய அரசர் பாபரின் உடல் முதலில் ஆக்ராவில் யமுனைக்கரையில் புதைக்கப்பட்டது. பிறகு தான் அவரது உயிலின் படி தோண்டப்பட்டு காபூலுக்கு கொண்டு செல்லப்பட்டு அவரே முன்னர் அமைத்த அழகான் பூங்காவில் புதைக்கப்பட்டது என படிக்கிறோம். அது போலவே இந்த கொடுங்கோலன் சிக்கந்தரையும் செய்யலாம். மதுரையில் வேறு இடமா இல்லை ?