உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் இனி நடக்க கூடாது; கவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த நயினார் பேட்டி

தமிழகத்தில் இனி நடக்க கூடாது; கவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த நயினார் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நடைபெறாமல் இருக்க வேண்டும் என கவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த பின் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.திருநெல்வலேியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்பி மற்றும் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sc2o4s9n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: இளைஞர் கவின் படுகொலை செய்யப்பட்டு இருப்பது மிகவும் கண்டிக்கதகுந்தது. மிகவும் வருந்ததக்கது. இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நடைபெறாமல் இருக்க வேண்டும். அதற்காக அரசாங்கம் தனியாக ஒரு சட்டமே கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொள்கிறேன். சம்பந்தபட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.இது போன்ற நிகழ்வுகளை தடுப்பதற்கு அந்தந்த மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Sakshi
ஜூலை 31, 2025 17:36

The problem is gent side only. He know very well about this community back ground and family back ground. He should have married his community only. If you cross the border, you will face repercussion. This will be applicable all.


Svs Yaadum oore
ஜூலை 31, 2025 16:14

2022 அக்டோபரில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஒரு தலை காதலில் கல்லூரி மாணவியை மின்சார ரயில் வரும்போது, எட்டி உதைக்க மாணவியின் உடல் ரயிலில் மோதி துண்டு துண்டாக சிதறி விழுந்தது. போலீஸ் துறையை சேர்ந்த மாணவியின் தந்தையும் அன்றே அதிர்ச்சியில் மரணம். இதில் கொலை செய்தவன் எந்த ஜாதி? இது போல பல மரணங்கள்.. இதுபோன்ற கொலைகளையும் ஆணவ கொலை என்ற கணக்கில் சேர்க்கலாமா? அப்போதெல்லாம் ஆணவ கொலை என்று யாரும் பிரச்னை கிளப்பவில்லேயே?? சமீபத்தில் கன்யாகுமரி குலசேகரம் பகுதியில் காதலி வீட்டில் IT என்ஜினீயர் மர்ம சாவு ....இது வேறு மதம் என்பதால் சமூக நீதி மத சார்பின்மையாக இது ஆணவ கொலை என்ற கணக்கில் வராது ..இந்த கொலையை அப்படியே ஊத்தி மூடி விட்டார்கள் ..இந்த வரலாற்றை படித்து பார்த்தால் இதில் உள்ள அரசியல் சூழ்ச்சி புரியும் ....பாதிப்பு ரெண்டு பக்கமும்தான் ...ஆனால் அரசியல் கட்சிகள் இது ஆணவ கொலை என்று இதிலும் லாபம் பார்க்கும் ...


ராஜா
ஜூலை 31, 2025 14:43

ஒரே பழமொழி தான் பொருந்தும் ஆனால் நயனாருக்கு பொருந்துமா தெரியவில்லை ஆடு நனையுதே என்று ஓநாய் அழுதது போல் தெரிகிறது


Anand
ஜூலை 31, 2025 13:46

நாங்கள் காதலித்தோம் என சம்பந்தப்பட்டவர்கள் கூறியதாக தெரியவில்லை, அப்படியிருக்க இந்த விஷயத்தில் ஊடகங்கள்/ ஊடகத்தில் பலர் கூட இருந்து பார்த்தது போல பலவிதமாக ஏன் கதையளக்கிறார்கள்? ஒருவேளை கொலையானவருக்கும் கொலை செய்தவனுக்கும் இடையே வேறு ஏதாவது பிரச்சனையில் இது நடந்திருக்கலாம் அல்லவா? எதையும் தீர விசாரித்தால் தான் விடை தெரியும்.


Ramesh Sargam
ஜூலை 31, 2025 12:51

வொவொருமுறை கொலை நடந்தபிறகும் இப்படித்தான் - தமிழகத்தில் இனி நடக்க கூடாது என்று கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனால் கொலை குற்றங்கள் நின்றபாடில்லையே. காவலர்களின் கைகள் கட்டிபோடப்பட்டிருக்கின்றன அந்த ஒரு துருப்பிடித்த இரும்புக்கரத்தின் சொந்தக்காரரால்.


Kulandai kannan
ஜூலை 31, 2025 12:24

தன் இனப் பெண்ணையே மணந்து அந்த குடும்பத்தை உயர்த்தி இருக்கலாமே. பொதுவாகவே பெண்களுக்கு மற்றவரின் hidden agenda புரிவதில்லை. அதனால்தான் பல பழமொழிகள் உருவாகின


Anand
ஜூலை 31, 2025 12:16

ஒரு கொலை நடந்தால், கொலை செய்தவன் குடும்பத்தையும் சேர்த்து கைது செய்வார்களா? புதுசா இருக்கே, ராம்குமார் வழக்கில் இப்படி ஏதும் நடந்ததாக தெரியவில்லை.


கூத்தாடி வாக்கியம்
ஜூலை 31, 2025 11:32

அது என்ன அந்த கத்தரிக்காய் குடும்பம் பார்த்து தனக்கு மேல் உள்ள ஜாதி பார்த்து நல்ல படிப்பு பார்த்து நல்ல அழகு பார்த்து வருகிறதோ


kumar
ஜூலை 31, 2025 11:23

காதல் பேரில் நடக்கும் நாடகத்தை நிருத்துங்க


Arul. K
ஜூலை 31, 2025 11:14

அப்போ சட்டம் இல்லையென்றால் யார் எவரை வேண்டுமென்றாலும் கொல்லலாம் என்று சொல்கிறீர்களா? மது புட்டியில் கூட குடி குடியை கெடுக்கும் என்று எழுதியுள்ளது. யார் குடிக்காமல் இருக்கிறார்கள். நடுத்தர மக்கள் அரசாங்க சாராய கடையில் குடிக்கிறார்கள். பணம் படைத்தவர்கள் உயர்தர சாராயத்தை வீட்டிற்குள்ளேயே குடிக்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை