உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மார்ச் 07) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:அப்ப திருட்டு; இப்ப போக்சோவிழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, 15 வயது மாணவி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். இவர், அப்பகுதியில் அரசு மாணவியர் விடுதியில் தங்கியுள்ளார். கடந்த, 24ம் தேதி சொந்த ஊருக்கு செல்வதாக விடுதி காப்பாளரிடம் கூறிவிட்டு சென்ற மாணவி, வீடு செல்லவில்லை. மாணவியின் தந்தை தேசூர் போலீசில் கடந்த, 3ம் தேதி புகார் செய்தார். விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த தாழனுாரைச் சேர்ந்த உதயசங்கர், 22, மாணவியை காதலித்து, திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. போக்சோவில் உதயசங்கரை போலீசார் கைது செய்தனர். உதயசங்கர், இரு ஆண்டுகளுக்கு முன், மழையூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை சுவற்றை துளையிட்டு திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

10 வயது சிறுமி சீரழிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட, கிராமத்தைச் சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும், 10 வயது மாணவி, பள்ளியில் இரண்டு நாட்களாக சோர்வாக இருந்துள்ளார். கண்காணித்த ஆசிரியை, மாணவியிடம் விசாரித்தபோது, மாணவி தன்னி டம் இரண்டு பேர் தவறாக நடந்து கொண்டதாகக் கூறியுள்ளார். உடனே பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. சிறுமியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரிய வந்தது.

சிறுமியின் பெற்றோர் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் அளித்தனர். போலீசார் சிறுமியிடம் விசாரித்து, ராஜேஷ், 35, முகிலரசன், 40, ஆகிய இருவர் சிறுமிக்கு தொல்லை அளித்தது தெரிந்து, அவர்களை கைது செய்தனர். விசாரணையில், ராஜேஷ், முகிலரசன் அப்பகுதி சிறுவர்கள், சிறுமியருக்கு நொறுக்குத் தீனி வாங்கிக்கொடுத்து இப்படி செய்துள்ளனர். பெண்களை ஆபாசமாக போட்டோ எடுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தந்தை, மகனுக்கு 'காப்பு'

அரியலுார் மாவட்டம், ஓலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் மகன் பிரவீன்குமார், 30; கூலித் தொழிலாளி. இவர், 10ம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர், பிரவீன்குமாரை கண்டித்தனர். ஆத்திரம் அடைந்த பிரவீன்குமாரும், அவருக்கு ஆதரவாக அவரது தந்தையும் சேர்ந்து சிறுமியையும், சிறுமியின் பெற்றோரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்துமகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் பிரவீன்குமாரையும், சிவகுருநாதனையும் போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Sampath Kumar
மார் 08, 2025 13:36

நல்லது அப்படியே இந்திய உலகை ஒரு ரவுண்டு பொய் இந்த மாதிரி செய்தி அங்கிருந்து போட்டால் ரோம்ப மக்களுக்கு உதவியாக இருக்கும் செய்வீர்களா ??


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 08, 2025 12:00

போலீஸ் கண்டு பொது மக்களுக்கும் பயமில்லை அதிகாரிகளுக்கும் பயமில்லை. திருடனுகளுக்கும் பயமில்லை கொலை காரனுகளுக்கும் பயமில்லை. நேற்று பாருங்கள் போலீஸை பார்த்து அதிகாரிகளுக்கு சிறிதும் பயமில்லாததால் 3 மணி நேரம் போலீஸ்காரர்களை வேகதா வெய்யில் நிறுத்தி தமிழிசை செளந்தரராஜன் கேரோ செய்ய விட்டு உள்ளனர். அந்த போலீஸ் காரர்களும் எந்த சாரோ ஆர்டர் போட்டத்தற்க்கு பயந்து போய் தமிழிசை செளந்தரராஜன் மறியல் செய்து போராட்டம் செய்து உள்ளார்கள் பணியில் இருக்கும் போதே. போலீஸ் காரர்கள் பயந்து போனதால் அவர்களுக்கு ஆதரவாக திமுகவினர் திரண்டு வந்து பாதுகாப்பு கொடுத்து உள்ளார்கள். தமிழகத்தின் இன்றைய நிலை இது தான். தமிழக அரசு பாலியல் சீண்டல்களை ஏதோ ஒரு வைரஸ் தாக்கிய நோய் என்று நினைத்து கொண்டு உள்ளது போல் தெரிகிறது. அடுத்து பாருங்கள் அஸ்ட்ரோ ஜென் நிறுவனத்திடம் சொல்லி செங்கல்பட்டில் பயன் பாட்டில் இல்லாத தடுப்பு ஊசி தயாரிக்கும் அது தாங்க நம்ம மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பதவியேற்றவுடனே தமிழகத்திற்கு தனியா கோரோணா தடுப்பு ஊசி தாயாரிக்கிறேன் என்று போனாரே அந்த இடத்தில் பாலியல் சீண்டல்கள் தடுப்பு ஊசி தயாரிக்கும் திட்டம் தீட்டினாலும் தீட்டு வார்கள்.


Anantharaman Srinivasan
மார் 08, 2025 12:00

ஆயுள் தண்டனை கொடுக்கணும்.


Anantharaman Srinivasan
மார் 08, 2025 12:00

மாடுகள் அடுத்ததவன் தோட்டத்தில் மேய்வதுபோல் பயமின்றி சிறுமிகளை பலாத்காரம் செய்கிறார்கள் கயவர்கள். ஆயுள் தண்டனை கொடுத்து பட்டினி போட்டு சாகடிக்கணும்.


Anantharaman Srinivasan
மார் 08, 2025 12:00

மாடுகள் அடுத்ததவன் தோட்டத்தில் மேய்வதுபோல் பயமின்றி சிறுமிகளை பலாத்காரம் செய்கிறார்கள் கயவர்கள். ஆயுள் தண்டனை கொடுத்து பட்டினி போட்டு சாகடிக்கணும்.


Kanns
மார் 08, 2025 11:56

People DONT BELIEVE All Such VestedFALSE STORIES AS Atleast 50%CASES are FALSE & COOKEDUP incl Evidences/Witnesses etc by Vested-Biased-Selfish-CONSPIRING CASE/NEWS/VOTE/POWER HUNGRY& PowerMISUSING CRIMINAL GANGS incl False Complainants Proof: SelfDeclared SAINTS When Entire Society Criminalised NEVER Booked-FIRd Defamed Arrested Prosecuted Convicted ln Same Trials. HOWEVER, GENUINECASES Must be Investigated-Tried UNBIASEDLY& Fast for PUNISHING REAL ACCUSED Not Scapegoats INCLUDING All False-Complainants& PowerMisusers in Same Trials SACK& PUNISH 95%JUDGES NOT PUNISHING SO


GSR
மார் 08, 2025 11:39

"நேற்றைய" என தலைப்பிட்டு தினமும் / அடிக்கடி வருகிறது. எனவே தலைப்பை இந்த வருடத்தில் / மாதத்தில் எத்தனையாவது நாள் என தலைப்பிட்டால் இன்னும் பளிச் என சீரியஸ்னஸ் விளங்கும்


முருகன்
மார் 08, 2025 10:48

பாலியல் குற்றத்திற்கு மத்திய அரசு நினைத்தால் சட்டத்தை திருத்தி கடும் தண்டனை வழங்க முடியும்


Perumal Pillai
மார் 08, 2025 10:29

ஒரு ஸ்கூல் - ஐ பார்த்தவுடன் தற்போது போக்ஸோ தான் ஞாபகம் வருது. இவ்வளவு வருஷங்களாக எந்த வித கட்டுப்படும் இன்றி புகுந்து விளையாடியிருக்கின்றனர் ஓநாய்கள் .


rasaa
மார் 08, 2025 10:07

Daily s. Pl send it to DGP. Yesterday he released a statement on reduction in crime rates.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை