உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மே 25) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய போக்சோ

சிறுமி கர்ப்பம்மயிலாடுதுறை அருகே, அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 16 வயது மாணவன், அதே வகுப்பில் படிக்கும் மாணவியுடன் ஓராண்டாக நெருங்கி பழகியுள்ளார். சிறுமிக்கு உடல் நலம் பாதிப்பால், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் பரிசோதனையில், சிறுமி ஆறு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மயிலாடுதுறை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, சிறுவனை கைது செய்து, தஞ்சாவூர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.

மேலாளர் போக்சோவில் கைது

திருச்சி, பாலக்கரை, துரைசாமிபுரம் விஸ்தரிப்பை சேர்ந்தவர் சையத் அப்துல் ரகீம், 30; மாநகராட்சி ஒப்பந்த பணிகளை செய்யும் எஸ்.ஆர்., வேதா நிறுவனத்தில், மண்டல மேலாளராக பணியாற்றுகிறார். எதிர் வீட்டில் வசிக்கும் சிறுமியிடம், இவர், தன் வீட்டுக்கு வருமாறு சைகை காட்டி, நிர்வாணமாக நின்றுள்ளார்.அதை சிறுமி, தாயிடம் கூறினார். அப்பகுதி இளைஞர்கள் சிலர், சையத் அப்துல் ரகீமை அடித்து, உதைத்து, பாலக்கரை போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்தி, கோட்டை அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். சையத் அப்துல் ரகீம் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி