உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூன் 14) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.17 வயது சிறுமி கர்ப்பம் ஈரோடு, சூரம்பட்டி, நாராயணசாமி வீதியை சேர்ந்த பாலன் மகன் தினேஷ், 19, கூலி தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார். மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரில், ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து தினேஷ், அவரது தாய் கவுரி, சிறுமியின் பெற்றோர் என நான்கு பேர் மீது, குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொழிலாளிக்கு 'காப்பு' அரியலுார் மாவட்டம், மலங்கன் குடியிருப்பு மேலத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன், 26; கூலி தொழிலாளி. இவர், 17 வயது சிறுமியை, இரு ஆண்டுகளாக காதலித்து, பாலி யல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமி தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள் ளார். சிறுமி புகாரில், ஜெயங்கொண்டம் போலீசார், போக்சோ சட்டத்தில், மாரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்

திருவாரூர் மாவட்டம், வலங்கை மான் அருகே, நல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி, 31. இவர், அதே ஊரைச் சேர்ந்த உறவினரான, 15 வயது சிறுமியை, ஜூன், 6ல் தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அன்றே, சிறுமிக்கு தாலிகட்டி, அவரிடம் தவறாக நடந்துள்ளார். நேற்று முன்தினம், நன்னிலம் போலீசில் சிறுமி புகார் செய்தார். போலீசார், முரளியை போக்சோவில் கைது செய்தனர்.பள்ளி தற்காலிக ஆசிரியர் கைது அரியலுார் மாவட்டம், மணப்பத்துார் கிராமத்தில் தங்கி, வங்காரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வராஜ், 43. சில நாட்களுக்கு முன், அப்பள்ளியில் பயிலும், 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவியருக்கு, அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம், பள்ளியை இழுத்து பூட்டி, ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி, மாண வியரின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். தளவாய் போலீசார், செல்வராஜை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.பிளஸ் 2 மாணவிக்கு தொல்லை திருநெல்வேலி, மேலப்பாளையத்தை சேர்ந்த, 17 வயது மாணவி, பிளஸ் 2 படிக்கிறார். இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில், ராமநாதபுரம் மாவட்டம், காஞ்சிரங் குடியை சேர்ந்த மாதேஸ்வரன், 23, என்பவருடன் பழகி வந்தார். 'ஏசி' மெக்கானிக் வேலை பார்த்த அவர், திருநெல்வேலி வந்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி, ராமநாதபுரம் அழைத்து சென்றுள்ளார். மேலப்பாளையம் போலீசார் சிறுமியை மீட்டனர். போக்சோவில் மாதேஸ்வரனை கைது செய்தனர்.

10 வயது குழந்தை பலாத்காரம்

வேலுாரை சேர்ந்தவர் கணேஷ், 34. இவரது மனைவியின் தோழி ஒருவர், சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். அவருக்கு, மூன்று மகன்கள், 10 வயதில் மகள் உள்ளனர். குழந்தைகளின் தந்தை கூலி வேலை செய்வதால், மகளை மட்டும் தன் வீட்டில் தங்கி படிக்க கணேஷின் மனைவி ஏற்பாடு செய்தார். கடந்த மாதம், வீட்டில் அனைவரும் துாங்கிய பின், சிறுமியை கணேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த ஒரு வர், குழந்தைகள் உதவி மைய எண்ணிற்கு நடந்த விபரங்களை தெரிவித்துள்ளார். வேலுார் போலீசார் கணேஷை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

balasubramani
ஜூன் 15, 2025 13:56

please stop this kind of news first of all its irritating.


Ramesh Sargam
ஜூன் 15, 2025 12:11

இதுபோன்ற நாட்டு நடப்புக்கள் நமது முதல்வருக்கு தெரியுமா? தெரிஞ்சு என்ன செய்யப்போகிறார்? இது எதிர்கட்சியினரின் புரளி என்றுகூறி கழக கண்மணிகள் வாயை அடைத்துவிடுவார்.


V RAMASWAMY
ஜூன் 15, 2025 09:18

தினசரி வானிலை அறிக்கை, ராசி பலன் மாதிரி போய்க்கொண்டிருக்கிறது போக்ஸோ கைதுகள், கொலை குற்றங்கள். கேவலம்.


Prakash
ஜூன் 15, 2025 09:11

இப்படி போக்சோ சட்டத்தில் கைது செய்வதை விட்டு விட்டு அவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக் தள்ளுங்கள்.. பாலியல் குற்றங்கள் குறையும். நம்முடைய உப்பு சப்பில்லாத சட்ட நடைமுறைகள் தான் குற்றம் அதிகரிக்க காரணம்.. வக்கீல்களும் நீதிபதிகளும் லஞ்சம் பெற்றுக்கொண்டும் இருப்பதால் தான் இன்னும் குற்றங்கள் குறையாமல் இருக்க காரணம்.....


தாமரை மலர்கிறது
ஜூன் 15, 2025 09:11

திராவிட திருநாட்டில் தினமும் போக்சோ பொங்கல் நிரம்பி வழிகிறது. இனி தினமும் தூக்கு தண்டனை தொடர்ந்து கொடுத்து விட்டால் தான் இந்த மனநோயாளிகள் திருந்துவார்கள்.


Mario
ஜூன் 15, 2025 08:45

மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான போக்சோ வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. டெல்லி நீதிமன்றம், ஒரு மைனர் மல்யுத்த வீரரின் புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கை மூடிவிட்டது. துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்கணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை