உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல்!

லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல்!

திருச்சி: திருச்சி அருகே, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மின்வாரிய ஆய்வாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மின்வாரிய ஆய்வாளர் கைது

திருச்சி மாவட்டம், செங்குறிச்சியை சேர்ந்த பிரவீன்குமார் என்ற மின் ஒயரிங் கான்ட்ராக்டர், கோவிந்தராஜ் என்பவருக்கு மேக்குடி என்ற இடத்தில் வீடு கட்ட, தற்காலிக மின்இணைப்பு கேட்டு, மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.இதுதொடர்பாக, மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளர் அருளானந்தம், 48, என்பவரை அணுகிய போது, அவர், 10,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான், மின் இணைப்பு வழங்கப்படும் என, தெரிவித்துள்ளார்.தர விரும்பாத பிரவீன்குமார், திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மணிகண்டனிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுறுத்தல்படி, நேற்று காலை, மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில், பிரவீன்குமார் பணத்தை கொடுத்த போது, அதை வாங்கிய அருளானந்தத்தை, போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த இனகபீரனபள்ளியை சேர்ந்தவர் கதிரப்பா, 49, விவசாயி. இவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த மாதம் அவரது விவசாய நிலத்தில் கோழி பண்ணை அமைத்து, தொழில் தொடங்க முடிவு செய்தார். இதனால் நிலத்தின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றி, இடமாற்றம் செய்ய ஆன்லைனில், 2,145 ரூபாய் அரசுக்கு செலுத்தி, தமிழ்நாடு மின் பகிர்மான கழக, அத்தி முகம் உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால், மின்கம்பத்தை மாற்றிஅமைக்க, 15,000 ரூபாய் லஞ்சமாக அத்திமுகம் மின்வாரிய உதவி பொறியாளர் உதயகுமார் கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி கதிரப்பா, இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ரவி ஆலோசனை படி, ரசாயனம் தடவிய, 15,000 ரூபாயை, உதவி பொறியாளர் உதயகுமாரிடம் நேற்று மாலை கதிரப்பா கொடுத்தார்.அதை அவர் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ., மஞ்சு நாதன் மற்றும் போலீசார், உதயகுமாரை கைது செய்தனர்.

2 சார் பதிவாளர்கள் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக்; வழக்கறிஞர். இவர் தனது தாயின் பெயரில் உள்ள சொத்தை மாற்றம் செய்ய புதுச்சேரி சாரம் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு கடந்தாண்டு சென்றார். அங்கு பணியில் இருந்த சார் பதிவாளர் ஸ்ரீகாந்த், பத்திரம் பதிவு செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு அசோக் லஞ்சம் எதற்கு கொடுக்க வேண்டும் என, கேட்டுள்ளார்.அதற்கு ஸ்ரீகாந்த் பத்திரம் பிரெஞ்ச் மொழியில் இருப்பதால், அதனை மொழிபெயர்ப்பு செய்து அதன் பிறகு தான் மாற்ற முடியும் என, கூறி ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து அசோக் பணம் எடுத்து வந்தபோது, ஸ்ரீகாந்த் அவரை அலுவலக கழிவறைக்கு அழைத்து சென்று, 20 ஆயிரத்தை வாங்கியுள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த அசோக் கடந்த சில நாட்களுக்கு முன், சமூக வலை தளங்களில் வெளியிட்டார்.இது குறித்து விசாரணை நடத்திய பத்திரப்பதிவுத் துறை ஆணையரான கலெக்டர் குலோத்துங்கன், லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் ஸ்ரீகாந்தை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இது குறித்து தலைமை செயலர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.அதன்படி, மாவட்ட பதிவாளர் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஸ்ரீகாந்த் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட மற்றொரு சார் பதிவாளர் பாஸ்கரன் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் வெங்கடாசலபதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

சர்வேயர் கைது

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் அடுத்த மணியம்பாடியில் நிலம் அளவீடு செய்ய ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக சர்வேயர் விஜயகுமார்,28, என்பவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

S.jayaram
ஜூலை 14, 2025 11:59

திருடனாய் பார்த்து திருந்தா விட்டாள் திருட்டை யும் ஒழிக்க முடியாது ஆனால் அதற்கு மேலேயும் உள்ளவர்கள் திருந்த வேண்டும்


Selvaradha Shandhi
ஜூலை 12, 2025 10:27

Super


Rajagopalan R
ஜூலை 12, 2025 09:06

எல்லாம் சரி அடுத்து வந்தவர்கள் அவர்களது அப்ப்ளிகேஷனை குப்பையில் போட்டு இருப்பார்கள். காம்ப்லின்ட் பண்ணதுதான் மிச்சம்


Gajageswari
ஜூலை 12, 2025 05:30

கொஞ்சம்கூட வெட்கமே இல்லை. காசேதான் கடவுளடா. பிடிபடும் வர்கள் மிக குறைவு அதில் தண்டனை பெறுபவர்கள் மிக மிக குறைவு. தண்டனை மிக மிக மிக குறைவு


David DS
ஜூலை 11, 2025 17:16

தூத்துக்குடி டிஸ்ட்ரிக்ட் கோவில்பட்டி தாலுகா ஆபீசில் டிப்டி தாசில்தார் மேலும் நடவடிக்கை எடுங்க


RAVINDRAN.G
ஜூலை 11, 2025 16:13

உடனே பதவி உயர்வு கொடுத்து சம்பளம் ஏற்றும் இந்த மாடல் அரசு


c.mohanraj raj
ஜூலை 11, 2025 13:53

சம்பளம் 70000 80 ஆயிரம் வாங்கினாலும் பத்தவில்லை என்றால் இவர்களை வேறு நாட்டிற்கு கடத்தி விட வேண்டியது தான் இந்த வெங்காயங்கள் எதற்கு நமக்கு


syam shan
ஜூலை 11, 2025 13:41

99% அரசு அதிகாரிகளும் லஞ்ச வாங்கும் பிச்சைக்காரர்கள் தான், இவனுங்க சோறு தின்றது எப்படி ஜீரணம் ஆகுது,


Natchimuthu Chithiraisamy
ஜூலை 11, 2025 13:01

ஏமாந்தவர்களை அப்பாவிகளை போலீசார் போட்டு தள்ளுகிறார்கள் என்று சொல்ல வேண்டியுள்ளது. பணம் பெறாத அரசு அதிகாரி உள்ளதாக யார் சத்தியம் செய்து சொல்ல முடியும். முடியாது. காங்கேயம் படியூரில் ஒரு அப்பாவி மாட்டியுள்ளார்.


Ravichandran Ramalingam
ஜூலை 11, 2025 12:55

அரசு ஊழியர்கள். என்ன செய்ய. முன்பு பிராமணன் அரசு ஊழியர்களாக இருந்த போது லஞ்சம் ஒரு சதவீதம் இருக்க வாய்ப்பு. நிர்வாகம் நன்றாக இருந்தது. தற்போது அவங்க ஒடுக்க படுவதால் லஞ்சம் 99 சதவீதம். ஊழல் ஊழல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை