முதல்வருடன் இருப்பவர்கள் அவரை ஏமாற்றுகின்றனர்
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்கள், சுயமரியாதை திருமணங்களை ஊக்குவித்தன. ஆனாலும், கலப்பு திருமணம் செய்வோரை பெற்றோரே கூலிப்படை வைத்து கொல்லும் மோசமான போக்கு, திராவிட இயக்க ஆட்சியில் தான் அதிகரித்துள்ளது. கவுரவக் கொலைக்கு எதிராக, மத்திய, மாநில அரசுகள் கடும் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி, ஆக., 17ல் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். தேர்தல் நெருங்கும் நேரத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' போன்ற திட்டங்களை அறிவிப்பது தி.மு.க.,வின் பதற்றத்தை காட்டுகிறது. வெறும் போட்டோஷூட் மட்டும் தான் நடக்கிறது. அரசுக்கும், மக்களுக்குமான தொடர்பே இல்லாமல் போய்விட்டது. கள நிலவரம் தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்; உடன் இருப்பவர்கள், அவரை நன்றாக ஏமாற்றுவது போல தோன்றுகிறது. - கிருஷ்ணசாமி தலைவர், புதிய தமிழகம்