| ADDED : டிச 12, 2025 05:14 AM
முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு தனி கவனம் செலுத்தி வருகிறார்; 10 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும். தேர்தலில் 210 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறும் என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறுவது, அவரது ஆசையாக இருக்கலாம். ஆனால், 2026 தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின்போது உண்மையை அவர் அறிவார். பா.ஜ., எண்ணம் தமிழகத்தில் ஒரு போதும் ஈடேறாது.சிலர், எதுவுமே தெரியாமல், 'ஏ4' சீட்டில் எழுதி கொடுத்தால், அதைப்பார்த்து படிக்கின்றனர். தி.மு.க.,வை போட்டியாக கருதினால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் என நினைக்கின்றனர். தி.மு.க.,வை யாராலும், வீழ்த்த முடியாது; வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள். லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியை, சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., பெறும். போலி வாக்காளர்கள் என சொல்வதே தவறு. ஒரு முகவரியில் வசித்தவர்கள், வேறிடத்துக்கு சென்றிருப்பார்கள். அதை தேர்தல் கமிஷன் நீக்க வேண்டும். - செந்தில் பாலாஜி முன்னாள் அமைச்சர், தி.மு.க.,