உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராகுலுக்கு மிரட்டல் விடுப்பதா? பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ராகுலுக்கு மிரட்டல் விடுப்பதா? பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுலின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ., நிர்வாகி தர்விந்தர் சிங் மார்வா மீது நடவடிக்கை கோரி, டில்லி துக்ளக் சாலை போலீஸ் ஸ்டேஷனில் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., நிர்வாகி தர்விந்தர் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனுவை தேர்தல் கமிஷனுக்கும் காங்கிரஸ் அனுப்பி உள்ளது.

முதல்வர் கண்டனம்!

இந்நிலையில், சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ''லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுலின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இந்திராவுக்கு நேர்ந்தது தான் ராகுலுக்கு நடக்கும் என பா.ஜ.,வினர் மிரட்டியது கண்டிக்கத்தக்கது.ராகுல் நாக்கை அறுப்பவர்களுக்கு பரிசு என்று சிவசேனா எம்.எல்.ஏ., கூறியதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். மக்கள் மத்தியில், எனது தம்பி ராகுலுக்கான ஆதரவு அதிகரித்தது சிலரை நிலைகுலையச் செய்துள்ளது. ஜனநாயக நாட்டில் மிரட்டல், வன்முறைக்கு இடமில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

R.Varadarajan
செப் 19, 2024 06:56

இந்த பச்சைப்புள்ள ஏன் உளருகிரது? நாவை அடக்கச்சொல்லுங்க தேச துரோகம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு கூடாது , நாடு கடத்தப்படவேண்டும். வாழும் நாட்டையே காட்டிக்கொடுப்பவனை என்ன செய்ய?


xyzabc
செப் 18, 2024 22:53

இந்த அண்ணன் தம்பி மோசமான குடும்பம் . தேசத்திற்கு ஆபத்து


R.MURALIKRISHNAN
செப் 18, 2024 22:23

வந்துட்டார்யா ஜோக்கர்


Murugesan
செப் 18, 2024 20:41

இரண்டு தேச விரோதி குடும்பத்தை அந்தமான் சிறையில அடைக்க வேண்டிய நேரம் சீக்கிரமாக வரும்.


பெரிய குத்தூசி
செப் 18, 2024 19:40

ரெண்டு தீவிரவாதிகளும் கூட்டு சேந்துட்டானுக


Ganapathy
செப் 18, 2024 14:37

இவருக்கு ஓட்டு போட்டவன் இன்றும் ....


Dharmavaan
செப் 18, 2024 13:13

ராகுல் கான் என்ன பெரிய தியாகியா .தேசத்துரோகி வெளிநாட்டில் நம் நாட்டை அவமானப்படுத்தியவன் வேறு எந்த நாட்டுக்கு அரசியல்வாதியும் செய்யாத கிருமினல் குற்றவாளி


sankar
செப் 18, 2024 13:09

ராகுல்தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுகிறார் - தத்துபித்தென்று உளறிக்கொண்டு தேசத்தில் கண்ணியத்தை கெடுத்துக்கொண்டு இருக்கிறார் - அவரிடம் இருந்துதான் தேசத்தை காப்பாற்றியாகவேண்டும்


ram
செப் 18, 2024 13:01

ராஹுல் திருட்டு திமுக ஆட்களால் இந்திய தேசத்துக்கே ஆபத்து


சமீபத்திய செய்தி