உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மும்மொழி கொள்கை ஒற்றுமையை சிதைக்கும்: தமிழக காங்கிரஸ் கண்டனம்

 மும்மொழி கொள்கை ஒற்றுமையை சிதைக்கும்: தமிழக காங்கிரஸ் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை: மாநில அரசுகளிடம் ஆலோசிக்காமல், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் கட்டாயம் என மோடி அரசு அறிவித்துள்ளது. தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையாலும், பெரும் அழுத்தத்தை தராத மாநில பாடத்திட்டத்தாலும் தான், சமூக, பொருளாதார ரீதியாக தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், தங்கள் குறுகிய அரசியல் காரணங்களுக்காக, ஹிந்தி, சமஸ்கிருதத்தை இந்தியாவின் மொழியாக்க வேண்டும் என்பதற்காக, மாணவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தும் ஆபத்தான விளையாட்டை, மோடி அரசு தொடங்கியிருக்கிறது. மும்மொழி கொள்கை என்பது மிக மிக ஆபத்தானது. அது, மாணவர்களை பாதிப்பதோடு, இந்தியாவின் ஒற்றுமை, சமூக நீதி, மதச்சார்பின்மை கொள்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்; இந்தியாவின் ஒற்றுமையையும் சிதைக்கும். எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் கட்டாயம் என்ற அறிவிப்பை, மோடி அரசு திரும்பப் பெற வேண்டும். பள்ளிக் கல்வியை, 100 சதவீதம் மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

panneer selvam
ஜூலை 09, 2026 13:54

Manikam JI , do not preach us while your Kerela, Karnataka and Telangana Congress Chief Ministers are following the three-language education in their states. You want to keep Tamils in backward denying job opportunity in other states . How cruel you and your party in Tamilnadu ?


M Ramachandran
ஜூலை 09, 2026 13:25

சும்பன் நிசும்பன். அதாவது செ பாலாஜி அண்ட் அசோக்குமார் உடன் சேர்ந்து பயணிந்த நினைவலியய்கள் இன்னும் டாகுர் மனதில் அசைய்ய வாய்க்காலிய்ய போடுது போல.


M Ramachandran
ஜூலை 09, 2026 13:19

தமிழ் நட்டு மக்கலிய்ய என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஜாக்கிரதையாக வார்த்தைய்யகளை பிரயோகிக்கவும்.


theruvasagan
ஜூலை 05, 2026 21:09

மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்கும் மற்ற தென்மாநிலங்களில் தேச ஒற்றுமைக்கு எதிரான போக்கு தென்படுகிறதா. அதை கடைப்பிடிக்காத தமிழகத்தில்தான் தேச ஒற்றுமைக்கு எதிரான ஏனென்றால் தேச சிந்தனை நிலவுகிறது என்பது கண்டபடி உளறும் சின்னபுத்திக்கார தற்குறிகளுக்கு புரியாது.


M Ramachandran
ஜூலை 05, 2026 15:58

வாய்யை மூடிக்கோயா. இப்படி சொல்லி சொல்லி ஒரு திராவிட கட்சியை அழிந்தது. மக்கள் விருப்பம் உன்னையார் முந்திரி கொட்டாய் தனமாக பேச சொன்னது. ராகுலுக்கு உண் பேச்சு பிடிக்காது.


duruvasar
ஜூலை 05, 2026 15:48

மூளை சிதைவு உள்ளவர்களின் பேச்சு. டெலிங்கானாவில் போய் பேசு. நீதான் தைரியமான பெருச்சாளி ஆயிற்றே


VSMani
ஜூலை 05, 2026 15:41

மும்மொழி கொள்கை இந்தியாவின் ஒற்றுமையை எப்படி சிதைக்கும்?. ஞானம் இல்லாதவர் போல பேசக்கூடாது. மாணவர்கள் எத்தனை மொழிகள் கூடுதலாக படிக்கிறார்களா அத்தனையும் மாணவர்களுக்கு நல்லதுதான். நிறைய மொழிகள் படித்தால் ஒற்றுமை உருவாகும். :


Tetra
ஜூலை 05, 2026 15:05

ஒற்றுமையை‌குலைக்கும்னு 8 கோடி தமிழர்களும் இவர் கிட்ட சொன்னார்களா. அதெப்படி ஆங்கிலம் ஃப்ரென்ச் ஜெர்மன்‌ பாஷையெல்லாம் இவங்க நடத்தற பள்ளிகள்ல ஒற்றுமையை வளர்க்குது? இவற்றையெல்லாம் தேர்ந்தெடுத்த த்ராவிடன்கள சொல்லோணும்


Siva Subramaniam
ஜூலை 05, 2026 13:29

Allow every citizen to learn any language, of their choice, and NEVER impose any language. Language issue is just political under vote bank politics. It is sad that people are misguided by politicians for their own interest, and not understood by the masses.


Varadarajan Nagarajan
ஜூலை 05, 2026 13:11

மாணவர்கள் எந்த மொழி படிக்கவேண்டும் எத்தனை மொழி படிக்கவேண்டும் என மாணவர்களே தீர்மானித்துக்கொள்வார்கள். அரசியல்வியாதிகள் இதில் தலையிடவேண்டாம். இப்பொழுதும் ஒன்றும் மோசமில்லை. இருமொழி போதும் என சொல்பவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கலாம். உங்கள் கட்சியின் முந்தய மாநிலத்தலைவர்கூட தமிழ் மொழியில் அரசு பள்ளியில் பயின்றுள்ளதாக கூறினார். அவரும் உங்கள் கட்சி தலைவர் ராகுலின் மேடைப்பேச்சை கூட மொழிபெயர்த்துள்ளார். இது ஜனநாயக நாடு, எனவே மாணவர்கள் எதை விரும்புகிறார்களோ எதை படித்தால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என நினைக்கின்றார்களோ அவற்றை பயில அவர்களுக்கு முழு சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்படவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை