உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் பலி

சென்னையில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வேளச்சேரியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில், மேலும் இருவர் உயிரிழந்தனர்.பெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் பல இடங்களில் சூறாவளி காற்று வீசி வருகிறது. பிராட்வே பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்கச் சென்ற வட மாநில வாலிபர் சந்தன் என்பவர் மின்சாரம் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zi4m4n9q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரண்டாவது சம்பவம்சென்னை வேளச்சேரி, விஜயநகர் இரண்டாவது மெயின்ரோடு சந்திப்பில் பலத்த காற்று காரணமாக மின்கம்பி அறுந்து கீழே விழுந்தது. அப்போது அந்த வழியாக வந்த சக்திவேல் என்பவர் மீது மின்கம்பி பட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.மூன்றாவதுவியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு இருந்த இசைவாணன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

A. Kumar
டிச 01, 2024 01:20

தமிழகத்தில் வெளிநாட்டில் போல் எங்கும் புதைவட மின்சாரம் தான் அது தேவை.உயிர்ப்பலி மற்றும் மின் திருட்டு நடக்காது.


S srinivasan
நவ 30, 2024 22:25

valzga Senrhil Balaji, great job by present govt


Sudha
நவ 30, 2024 21:57

ஒருவர் வட நாட்டவர், மற்றவர்கள்? கூடவே ஜாதி ,மதம் அனைத்தையும் veliyidungal.


கூமூட்டை
நவ 30, 2024 20:30

இதைப்பற்றி சற்று RSB Media வாய் பேசாது . இது ஊசிப்போன குருமா மற்றும் சுண்டல் மாடல் வாழ்க வளமுடன்


Ramesh Sargam
நவ 30, 2024 20:14

திமுக ஆட்சி அமைந்து இது முதல் மழையா? வருடத்திற்கு ஓரிரு முறை மழை, புயல் வருகிறது. அப்பவும் இந்த திருட்டு திமுக அரசு அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியாமல் திணறுகிறது. உயிர் பலிகள் தொடர்கிறது. மழையை எதிர்கொள்ள திறமை இல்லாவிட்டாலும், உயிர்பலிகளை தடுக்கவாவது நடவடிக்கை எடுக்கலாம் இல்லையா? அதையும் செய்வதில்லையே..


Priyan Vadanad
நவ 30, 2024 22:10

இன்னும் கொஞ்ச நாள் கழித்து புயலும் மழையும் தமிழ்நாட்டை தாக்காதவாறு திமுக அரசு , அந்தமான் கடல்பகுதியில் தடுப்பு சுவர் கட்டவேண்டும் என்று எழுதுவீர்கள் போல தெரிகிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 30, 2024 20:03

புயலின்போதுதான் ஏடி எம் செல்வோம் ன்னா எப்படி ???? இந்த புயலுக்கான எச்சரிக்கை ஒரு வாரம் முன்பே கொடுக்கப்பட்டதே ????


முக்கிய வீடியோ