உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மயிலாடுதுறை அருகே இரட்டைக்கொலை; சாராய வியாபாரி உள்ளிட்ட மூவர் கைது

மயிலாடுதுறை அருகே இரட்டைக்கொலை; சாராய வியாபாரி உள்ளிட்ட மூவர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரம் குறித்து போலீசுக்கு தகவல் சொன்னதாக இருவரை கத்தியால் குத்தி கொலை செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் போலீஸ் சரகம் முட்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்.30. சாராய வியாபாரி. மதுவிலக்கு அமலாக்க பிரிவு வழக்கில் சிறை சென்று ஜாமினில் வந்துள்ளார். சாராய வியாபாரம் குறித்து போலீசுக்கு தகவல் சொல்வதாக அதே பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் முடித்துவிட்டு வேலை தேடி வந்த ஹரிஷ்.25, என்பவர் மீது ராஜ்குமாருக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஹரிஷ், அவரது நண்பரும் இன்ஜினியரிங் மாணவருமான சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிசக்தி.22., தினேஷ் ஆகிய மூவரும் முட்டம் வடக்கு தெரு முனையில் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ராஜ்குமார், அவரது மைத்துனர்கள் மூவேந்தன்.35, தங்கதுரை.28. ஆகிய மூவரும் கத்தியால் ஹரிஷை குத்தியுள்ளனர். தடுக்க வந்த ஹரி சக்தியையும் அவர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஹரிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஹரி சக்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். இதனை அறிந்த உறவினர்கள் ராஜ்குமார் வீட்டின் முன்புறம் இருந்த கொட்டகையை தீ வைத்து கொளுத்தியதுடன் மூவேந்தன் வீட்டில் புகுந்து பொருட்களை அடித்து உடைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் விரைந்து வந்து இறந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயிலாடுதுறை எஸ்பி. ஸ்டாலின் நேரில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து இறந்தவர்களின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாராயத்தால் ஏற்பட்ட முன்விரோதத்தில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்விரோதம் காரணம்; போலீசார் விளக்கம்

இது குறித்து, மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறையில் இருவர் கொல்லப்பட்ட விவகாரத்திற்கு சாராய விற்பனை காரணம் அல்ல. ஒரே தெருவில் வசித்த இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறே காரணம். தினேஷ், மூவேந்தன் ஆகியோர் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவ தினத்தன்று மூவேந்தன் உள்ளிட்டோர் தினேஷிடம் தகராறு செய்து தாக்கி உள்ளனர். மதுவிற்பனை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் சம்பவம் நடந்ததாக கூறுவது தவறு. கொலை தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தீ வைப்பு

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 சாராய வியாபாரிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Mathiyazhagan Kaliyaperumal
பிப் 15, 2025 15:08

அவரோட ஆசியில்தானே இதெல்லாம் நடக்குது. அவர் நோக்கமே தமிழக மக்கள் குடியால் சீரழிந்து சுய சிந்தனையின்றி தொடர்ந்து தி.மு.க வுக்கே வாக்களித்து இன்பநிதியையும் முதல்வராக்க காய் நகர்த்துகிறார்.


Barakat Ali
பிப் 15, 2025 13:42

மயிலாடுதுறை எஸ்பி. ஸ்டாலின் நேரில் விசாரணை நடத்தினார் ....... இவரோட இரும்புக்கையாச்சும் துருப்பிடிக்காமே இருக்கா ????


essemm
பிப் 15, 2025 13:25

முதலில். குருற்றவாளியாக முதல்வர் அமைச்சர்கள் மற்றும் காவல் துறையினரை கைது செய்து கடுமையான தண்டனையை கொடுக்கவேண்டும். இவர்களுக்குதெரியாமல். இந்த கள்ளச்சாராய விற்பனை நடக்காவாய்ப்பே இல்லை. இதனால் பழி போனது அப்பாவிகள் உயிர். திராவிட மாடல் ஆட்சியில் வாயாய் திறந்தால். வாயிலேயே வெட்டுவோம்னாங்கள். வெறும் 200 ம் குஏர்டெரும் மட்டும் பித்தும்.


கண்னுசாமி
பிப் 15, 2025 13:04

தொழிலில் போட்டு குடுக்குறவனுக்கும், புடிக்கவர போலீசுக்கும் ஒரு பாடம். யாரு கிட்டே? திராவிடண்டா


Svs Yaadum oore
பிப் 15, 2025 13:03

இங்கு கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தறவன் தான் திராவிட மந்திரி ....இவனுங்களுக்கு வோட்டு போட்டு மந்திரிகளாக பதவியில் அமர்த்தினால் இது போல சீரழிவுதான் ......சினிமா தொலைக்காட்சி பத்திரிகை பள்ளி கல்வி என்று அனைத்தும் தங்கள் கட்டுக்குள் வைத்து இங்குள்ள மக்களை மூளை சலவை செய்து வைத்திருப்பது மதம் மாற்றிகள் .....


Ramesh Sargam
பிப் 15, 2025 12:37

இதிலிருந்து என்ன தெரிகிறது. தமிழகம், பெண்கள் வாழ மட்டும் தகுதி அற்ற மாநிலம் அல்ல, ஆண்களும் வாழ தகுதி அற்ற மாநிலமாக மாறிவிட்டது. தப்பு நடக்கிறது என்று தகவல் கொடுத்தவர்களை, கொன்றுவிட்டால், இனி யார் அப்படி தகவல் கொடுக்க முன்வருவார்கள். இதுபோன்ற குற்றங்கள் நடப்பது முதல்வருக்கு தெரியாதா? என்ன பதில் அவரிடமிருந்து இதற்கு?


RAMESH
பிப் 15, 2025 11:59

கள்ள சாராயம் காச்சுவது இந்த இரு மாணவர்களுக்கு தெரிந்த விஷயம் போலீசுக்கு தெரியாதா . போலீஸின் பக்க பலத்துடன் வலம் வருபவர்கள்தான் இந்த கஞ்சா விற்பவர்கள், சாராயம் காச்சுபவர்கள். போலீசுக்கு இந்த விஷயம் தெரிந்தால் மேலிடம் வரை தொடர்பு இருக்கும் . கள்ளசாராயத்தை ஒழிக் காதவர்கள் எப்படி டாஸ்மாக் ஆலைகளை மூடுவார்கள் . ஒருவர் சாவிலும் வருமானம் பார்க்கும் இந்த அரசாங்கம் எப்படி மக்கள் நலனுக்கான திட்டங்களை அமல் படுத்துவார்கள் . திராவிட சொரியான் மண்ணில் தினம் தினம் கொலை, கற்பழிப்பு , திருட்டு , உருட்டு, மிரட்டல் , ஆள் கடத்தல் , கந்து வட்டி , கஞ்சா, ரவுடி மாணவர்கள், பெண்களை சீரழிக்கும் ஆசிரியர்கள் , எதிலும் லஞ்சம். இது எல்லாம் தெரிந்தும் இந்த கொள்ளைக்கார பாவிகளுக்கு முட்டு கொடுக்கும் கொத்தடிமைகள்.


Raja
பிப் 15, 2025 11:34

இது குறித்து, மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறையில் இருவர் கொல்லப்பட்ட விவகாரத்திற்கு சாராய விற்பனை காரணம் அல்ல. — சூப்பர் தமிழகத்தில் சாராயம் தொடர்பான கொலைகள் நடக்க வாய்ப்பில்லை.


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 15, 2025 11:30

கள்ளச்சாராயம் கனிமவள கொள்ளை நில அபகரிப்பு வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்துள்ளது பள்ளி கல்லூரி பாலியல் சீண்டல்கள். இவையெல்லாம் திமுக திராவிட கட்சிகள் டிரேட் மார்க் வியாபாரம். பேட்டன்ட் ரைட்ஸ் கூட வாங்கி வைத்து உள்ளார்கள். இதை தடுத்தாலோ வேறு யாராவது இந்த தொழில் செய்தாலோ ஷரியத் சட்டபடி தண்டனை தரப்படும். ஆகவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தேர்தல் நேரத்தில் கிடைக்கும் 2000 ரூபாய் கால் கை கொலுசு பிளாஸ்டிக் சேர் போன்ற பொருட்கள் பெற்று கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யவும். வருகிற 2026 தேர்தலில் ஓட்டுக்கு 5000 ரூபாய் வீட்டிற்கு சோபா அல்லது தேக்கு மர சாய்வு நாற்காலி கிடைத்தாலும் கிடைக்கும். கனிம வளத்தில் பல இலட்சம் கோடி இலாபம் கிடைத்திருந்தாலும் கிடைத்திருக்கும். திராவிட கட்சி வேட்பாளர்கள் யார் குறைந்தது 500 கோடி செலவு செய்ய முடியுமோ அவர்கள் மட்டுமே எம்எல்ஏ பதவிக்கு திராவிட கட்சிகளிடம் விருப்ப மனு அளிக்க வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்.


Murugesan
பிப் 15, 2025 11:28

கேவலமான கேடுகெட்ட ஆட்சி ,அயோக்கியகர்களின் சொர்க்கம்


முக்கிய வீடியோ