உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பசும்பொன்னில் மூன்றடுக்கு பாதுகாப்பு; வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

பசும்பொன்னில் மூன்றடுக்கு பாதுகாப்பு; வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கமுதி, முதுகுளத்துார் வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவர் 118வது ஜெயந்தி விழா, 62வது குருபூஜை விழா அக்.,28 முதல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விழாவில் கலந்துகொள்ள வருபவர்கள் போலீசாரிடம் உரிய அனுமதி பெற்று சொந்த வாகனத்தில் மட்டுமே வர வேண்டுமே. வாடகை வாகனங்கள், டூவீலர்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (அக்.,30) அரசு விழா கொண்டாடப்படும் நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அரசு, தனியார் பஸ்கள், சரக்கு வாகனங்கள் பார்த்திபனுார், கமுதி, முதுகுளத்துார், சாயல்குடி பகுதிகளுக்கு வர அனுமதி கிடையாது. மதுரையில் இருந்து வரும் பஸ்கள், சரக்கு வானங்கள் பூவந்தி, சிவகங்கை, காளையார்கோவில், சருகனி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம் வழியாக ராமநாதபுரம் வர வேண்டும். ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள், சரக்கு வாகனங்கள் இதே வழியில் செல்ல வேண்டும். பசும்பொன் விழாவிற்கு செல்வோரின் வசதிக்கேற்ப கிராமங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். சொந்த வாகனங்களில் வருபவர்கள் வெளிப்புறத்தில் தொங்குவது, கூரையின் மீது அமர்ந்து பயணிப்பது, வெடி வெடிப்பது போன்ற விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது. மேலும், சமுதாய ரீதியிலான கோஷங்களை எழுப்பக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க 38 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பஸ்களில் பாதுகாப்பு பணிக்காக 2 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பயணம் செய்பவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க உடையில் அணிந்து கொள்ளும் 300 பிரத்யேக கேமராக்கள் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளன. பசும்பொன் பகுதியில் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 57 டூவீலர்கள், 53 கார்களில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

MaRan
அக் 30, 2025 11:28

வெறும் ஓட்டுக்காக இந்த ஏற்பாடுகள்...தேவர் இன மக்கள் சிந்திக்க வேண்டும்


MaRan
அக் 30, 2025 11:27

தேவர் இருந்திருந்தால் .......


முதல் தமிழன்
அக் 30, 2025 08:59

தேவையற்ற வீண் வேலை. சில வருடங்கள் கண்டுக்காம விட்டால் எல்லாம் சரியாகிடும்.


Lakshumanan Aruna
அக் 30, 2025 13:25

நீ மத்த ஜாதியை பேசினா சமத்துவம் சமூக நீதி, மத்தவன் உன்னை பேசினா ஜாதி வெறி போ,..


அப்பாவி
அக் 30, 2025 07:50

இப்பிடியெல்லாம் காவல், தடை போடும் அவலம் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் மட்டுமே நடக்கும். ஒண்ணாங்கிளாஸ் ஜாதி வெறி.


Ramesh Sargam
அக் 30, 2025 06:25

இப்படித்தான் போனவாரம் துணை ஜனாதிபதி கோவை சென்றபோது கூட பல அடுக்கு பாதுகாப்பு என்று கூறினார்கள். அதையும் மீறி ஹெல்மெட் அணியாமல் தடுப்புக்களை மீறி உள்ளே நுழைந்து காவலர்களுக்கே சாக்லேட் கொடுத்தனர். இப்பொழுது மீண்டும் மூன்றடுக்கு பாதுகாப்பு பசும்பொன்னில்... பார்க்கலாம் இந்த பாதுகாப்பு எந்த பொவிஷில் இருக்குது என்று. கூட்டம் அதிகம் வரும் என்பதால், நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் அதிகாரிகள், போலீசார் உட்பட மிக மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். வேண்டாம் மீண்டும் ஒரு கரூர் சம்பவம்.


முக்கிய வீடியோ