போன் பேசியபடி பஸ் ஓட்டிய திருப்பூர் டிரைவர் சஸ்பெண்ட்
திருப்பூர்:திருப்பூரில் மொபைல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டிய அரசு டவுன் பஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.திருப்பூர் மாவட்டம், குன்னத்துாரில் இருந்து, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு '45டி' என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. பஸ்சை நேற்று டிரைவர் தாமரைகண்ணன், 40 என்பவர் ஓட்டி வந்தார். அப்போது மொபைல்போன் பேசிய படி ஓட்டியதை, பயணி ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல பொது மேலாளர் சுப்ரமணியன் விசாரணை நடத்தினார். ஆபத்தான முறையில் மொபைல் போன் பேசியபடி பஸ்சை ஓட்டியதற்காக, தாமரைகண்ணன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.