UPDATED : ஜூலை 07, 2025 06:19 AM | ADDED : ஜூலை 07, 2025 12:20 AM
திண்டுக்கல்: டி.என்.பி.எல்., கோப்பையை திருப்பூர் அணி முதன்முறையாக வென்றது. பைனலில் 118 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தியது.திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல்., பைனலில் திண்டுக்கல், திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின் 'பவுலிங்' தேர்வு செய்தார்.நல்ல துவக்கம்: திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்த போது புவனேஷ்வர் 'வேகத்தில்' சாத்விக் (65ன்) வெளியேறினார்.அபாரமாக ஆடிய ரஹேஜா (77) கைகொடுத்தார். திருப்பூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 220 ரன் எடுத்தது. அனோவங்கர் (25) அவுட்டாகாமல் இருந்தார்.அஷ்வின் ஏமாற்றம்: கடின இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு கேப்டன் அஷ்வின் (1), பாபா இந்திரஜித் (9) ஏமாற்றினர். அதுல் வித்கர் (24) ஆறுதல் தந்தார். புவனேஷ்வர் (12) 'ரன்-அவுட்' ஆனார்.திண்டுக்கல் அணி 14.4 ஓவரில் 102 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. சசிதரன் (4) அவுட்டாகாமல் இருந்தார். திருப்பூர் சார்பில் சிலம்பரசன், மோகன் பிரசாத், இசக்கிமுத்து தலா 2 விக்கெட் சாய்த்தனர்.